மாங்காய் தொக்கு

தேதி: May 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மாங்காய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
துருவிய வெல்லம் - அரை கப் (அ) சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
மிளகாய் வற்றல் - 3


 

மாங்காயை மெல்லியதாக சீவி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் தாளித்து, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்கவிடவும்.
அத்துடன் சீவிய மாங்காய், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மாங்காய் வதங்கியதும் தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்த்து கலந்துவிடவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை கிளறிவிட்டு இறக்கவும். சுவையான மாங்காய் தொக்கு தயார். தயிர் சாதத்துக்கு சூப்பரான ஜோடி இது. இந்த குறிப்பை செய்து காட்டியவர் எனது அண்ணி திருமதி. சிவகாமி மணிவாசகம் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாவூறுகிற அருமையான குறிப்பு.
அக்காவுக்கும்,அண்ணிக்கும் வாழ்த்துகள்!
அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.

அருமையான குறிப்பு மாங்காய் தொக்கு சூப்பரோ சூப்பர். செம டேஸ்டியான ரெசிபி.

அன்பு வனி,
இதை நாங்க‌ வெல்லப் பச்சடின்னு சொல்வோம். நல்லா சூப்பரா இருக்கு, பார்க்கும் போதே சாப்பிடணும் போல‌:)

அன்புடன்,
செல்வி.

தொக்கு சூப்பரா இருக்கு. நான் இதே முறையில் கொஞ்சம் மிளகாய்தூள் சேர்த்து செய்வேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கடைசி படம் நாவூருது.சூப்பர் .

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனிதா மாங்காய் தொக்கு பார்த்ததும் கூட கொஞ்சம் தயிர் சாதம் வேணும் போல இருக்கு. செல்வி மேடம் சொல்றாப்ல இங்க மாங்காய் பச்சடினு சொல்வோம் வனிதா. கொஞ்சம் மிளகாய் தூளும் சேர்ப்போம். என்னோட ரொம்ப பேவரைட். அண்ணிட்ட சொல்லுங்க சூப்பர்னு

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. அண்ணியும் பச்சடி என்றே சொன்னார்கள், எனக்கு பச்சடிக்கு அர்த்தமே வேறு, அதனால் தொக்கு என கொடுத்திருந்தேன். நானும் பொடி சேர்த்து செய்யும் வகைகள் செய்வது உண்டு. இதன் சுவை மாறுபடும், முயற்சி செய்து சொல்லுங்கள். :)

அண்ணி... போஸ்ட் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் ;) சுவையான குறிப்புக்கு மீண்டும் நன்றி. எப்போது நீங்களே மெம்பராகி உங்க பேரிலேயே குறிப்பு தர போறீங்க?? வனி வெயிட்டிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா