தேதி: May 26, 2014
குட்டி அட்டை பாக்ஸ் ( மாத்திரை இருக்கும் அட்டை பாக்ஸ் போல)
கிப்ட் பேப்பர்
ரிப்பன்
க்ளூ
கப்போர்ட் எந்த வடிவத்தில் வேண்டும் என்பதை முடிவு செய்துக் கொண்டு அதற்கு ஏற்றது போல் அட்டை பாக்ஸ் எத்தனை வேண்டுமோ எந்த வடிவத்தில் வேண்டுமோ தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பாக்ஸின் மேல் பக்கம் உள்ள மூடியை வெட்டி எடுத்து விடவும்.

படத்தில் உள்ளது போல் பாக்ஸை வைத்து அளவு எடுக்க வேண்டும். முன், பின், இரண்டு பக்கமும், கீழ் பகுதி, மேல் பகுதி தேவையில்லை, பேப்பரில் அளவுகள் எடுத்து பாக்ஸ் போல் மடித்து ஒட்ட வேண்டும், அது பாக்ஸ்க்குள் சரியாக பொருந்தினால் அதே அளவில் மெலிதான அட்டையில் செய்யவும்.

பாக்ஸின் உள் புறம் கலர் விரும்பினால் மெதுவாக பிரித்து பேப்பர் ஒட்டி காயவிட்டு மீண்டும் பழைய முறையில் ஒட்டி விடவும். இது விரும்பினால் மட்டும் செய்துக் கொள்ளலாம்.

நாம் செய்த பேப்பர் பாக்ஸில் மட்டும் சுற்றியும் கிப்ட் பேப்பரால் ஒட்டவும். ஒரு இன்ச் அளவில் கலர் பேப்பரை ரிப்பன் போல் நறுக்கி மேல் புறம் பார்டராக இரண்டு பாக்ஸிலும் ஒட்டவும்.

எந்த மாதிரி கப்போர்ட் வேண்டுமோ அதே போல் அடுக்கி ஒன்றோடு ஒன்று ஒட்டவும், அனைத்தையும் ஒன்றாக ஒட்டி விட்டு கிப்ட் பேப்பர் கொண்டு முதலில் ஓரங்களில் ஒட்டி விடவும். பிறகு பின்புறம், அடிபக்கம் என சுற்றி ஒட்டவும்.

பேப்பர் பாக்ஸில் கைப்பிடி வைக்க, பாக்ஸின் முன்பக்கம் வேண்டிய அளவில் ஊசி கொண்டு ஓட்டை போட்டு, ரிப்பனை உள்பக்கம் விட்டு இறுக்கமாக கட்டவும்.

கைப்பிடி வைத்த அட்டை பாக்ஸை எடுத்து பேப்பர் பாக்ஸில் ட்ராயராக பொருத்தவும். மினி கப்போர்ட் ரெடி.

இது சோப்பு மற்றும் மருந்து பாக்ஸ் கொண்டு செய்த மற்றொரு மாடல்.

Comments
ரேணு அககா,அழகு கப்போர்ட்
ரேணு அககா,
வாவ் நிஜமா ரொம்ப அருமை செய்துஇருக்கீங்க, அழகாவும் இருக்கு..........
ஈஸியா இருக்கு செய்துருவோம்.
அப்படியே கடைசி கப்போர்டை கொரியர் பண்ணா என்னோட தோடுலாம் போட்டு வச்சுப்பேன், எங்க அம்மாகிட்ட திட்டு வாங்காமலாவது இருப்பேன்.......
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
ரேணுகா
மினி கப்போர்ட் சூப்பர், நல்ல ஐடியா நல்ல யூஸ்புல்லான கப்போர்ட் இதுல சேப்டி பின், ஹேர் பின், சின்ன குண்டு ஊசி இது மாதிரி நிறைய பொருட்கள் போட்டு வைச்சிக நல்ல ஐடியா, ரேணு அக்கா ஒரு சந்தேகம் முன்பக்கம், பின் பக்கம் அளவு எடுக்க வேண்டாம் , மேல் பக்கம் கீழ் பக்க, அளவு எடுக்க வேண்டாம் அதுதான் எப்படி அளவு எடுக்க முடியும். மொத்ததில் சூப்பர்.
ரேணு
அதிக வேலை பார்த்திருக்கீங்க... அதுக்கு ஏற்றமாதிரி கடைசி ப்ராடக்ட் கண்ணுக்கு அழகா அருமையான வேலையா வந்திருக்கு. சூப்பர். கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணுகா
ரேணு கப்போர்ட் ரொம்ப சூப்பர். நல்ல ஐடியா ரேணு ரொம்ப உபயோகமா இருக்கும் செய்முறையும் எளிமையா இருக்காறதால செய்யனும்னு தோணுது, எல்லாமே கிடைக்கற பொருட்கள் தான் ரேணு. இதோ சோப் பாக்ஸ் தேட தான் போறேன்
ரேணு mam............
செம்மையாக இருக்கு. எப்படி பாராட்டுரது உங்களை? குப்பையில் கூட கைவினை செய்வீங்க போல? அழகா இருக்கு. செய்யணும் போல இருக்கு. கப்போர்ட் செம அழகு.... அதை நீங்க அலங்காரம் செய்து வைத்து இருப்பது கொள்ளை அழகு..... flower vase கூட உங்க வேலை தான் போலவே... அந்த போட்டோ ல இருப்பது யார்? நிஜ கப்போர்ட் போல இருக்கு. கடைசி படம் அருமையா இருக்கு. செய்த கைக்கு வளையல் வாங்கி போடணும். என் சார்பில் என் பெயர் சொல்லி நீங்களே வாங்கி போட்டுக் கொள்ளுங்கள் :) ;) இது போல் நிறைய செய்யுங்கள்.
அன்புடன்
டெடி.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
ரேணு
சூப்பர் ரேணு.
- இமா க்றிஸ்
சுபி
தேன்க்யூ சோ மச் சுபி, அட்ரஸ் கொடுங்க உடனே அனுப்பறேன்:))
செய்துட்டு போட்டு அனுப்புங்க!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
பாரதி
பாரதி உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம், ரெம்ப நல்லாவே கண்டுபிடிச்சுட்டீங்கப்பா!! எல்லா பக்கமும் எடுக்கனும் மேல் பக்கம் மட்டும் எடுக்க வேணாம், அத தான் அம்புட்டு தெளிவா எழுதி இருக்கேன்,:) இதெல்லாம் செய்யறத விட விளக்கம் எழுதறது தான் பெரிய தலைவலியா இருக்கு,என்ன செய்ய எழுதி கொடுக்க ஆள் கிடைக்க மாட்டிகிறாங்க,:)
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வனி
ஆமாம் வனி கொஞ்சம் வேலை எடுத்துச்சு,ஆன எல்லாம் முடிஞ்சதும் நினைச்ச மாதிரி வந்தத நினைச்சு பெரிய சந்தோஷம்!!! தேடி தேடி வாங்குனது கலர் பிடிக்கமா இருக்குமா?:) தேன்க்யூ வனி
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
தேவி
தேன்க் யூ தேவி உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி,நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்கப்பா!! சோப் பார்க்ஸ் கிடைச்சதா?
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
டெடி
டெடி இம்புட்டு பாராட்டிவிட்டு அப்பறம் ஏன் எப்படி பாராட்டுவதுன்னு குழப்பம்?,அதில் இருக்கும் அத்தனையும் என் வேலை தான், போட்டோவில் இருப்பது என் பசங்க, இப்படி பாராட்டு வாங்கினதுக்கு அப்பறம் எதுக்கு வளையல்? அதுல கிடைக்காத சந்தோஷம் உங்க எழுத்துக்களில் கிடைச்சுடுச்சு:)) தேன்க் யூ சோ மச் டெடி.. நிச்சயம் நிறைய செய்வேன்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
தேன்க் யூ இமா:)
தேன்க் யூ இமா:)
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணுகா
கப்போர்ட் அருமை,நுணுக்கமான வேலைபாடு.பிலஃவர் வாஸும் அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரேணு...
//இதெல்லாம் செய்யறத விட விளக்கம் எழுதறது தான் பெரிய தலைவலியா இருக்கு,// ஹாஹா! ;))
- இமா க்றிஸ்
குழப்பம் .....
பேப்பர் பாக்ஸில் கைப்பிடி வைக்க, கைப்பிடி வைத்த அட்டை பாக்ஸை .... தெளிவா குழப்பிட்டீங்கப்பா....
Renuka
மினி கப்போர்ட் ரொம்ப க்யூட்டா, கலர் ஃபுல்லா இருக்கு..
கலை