வாடா

தேதி: January 17, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - ஒரு படி
தேங்காய் (துருவியது) - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
நாட்டு வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது
எண்ணெய் - ஒரு லிட்டர்
தோசை மாவு - அரை கப்
சோடாப்பு - ஒரு தேக்கரண்டி


 

முதல் நாளே அரிசியை ஊற வைத்து கொரகொரவென்று மிக்ஸியில் அரைக்கவும் (முன்பெல்லாம் உரலில் இடிப்பார்கள்).
பின்பு அந்த மாவில் ஒரு கப் எடுத்து கஞ்சி காய்ச்சவும். அதை ஆறவிட்டு மாவில் சேர்க்கவும்.
தோசை மாவையும் அதில் சேர்க்கவும், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் வைக்கவும், காலையில் புளித்து உப்பி இருக்கும்.
பின்பு தேங்காய் துருவலில், வெங்காயம், பச்சை மிளகாயை சின்னதாக நறுக்கி போடவும், சோம்பை கொரகொரப்பாக அரைத்து போடவும்.
மேலும் மஞ்சள், உப்பு, கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கிளறவும்.
மாவில் தேவையான உப்பு, சோடா உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும் பின்பு ஒரு ப்ளாஸ்டிக் பையை விரித்து அதில் மாவை சிறிது வைத்து ரவுண்டாக தட்டவும்.
அதன் மேல் கிளறி வைத்துள்ள தேங்காய் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து மாவின் மேல் வைத்து பரப்பி அதன் மேல் மேலும் மாவை வைத்து வடை போல் தட்டவும்.
1/2 அங்குலம் உயரம் இருந்தால் போடும் உளுந்து வடை போல் நடுவில் ஓட்டை செய்து கையில் எடுத்து எண்ணெயில் விடவும்.
பக்கத்தில் ஒரு கோப்பையில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரை தொட்டு எடுத்தால்தான் ஒட்டாமல் வரும் எண்ணெயில் விடும் போது கவனமாக விடவும்.
வாடா சிறிது வெந்தவுடன் திருப்பி போடவும் நன்கு வெந்து நுறை அடங்கியவுடன் எடுக்கவும்.
இதுவே வாடா. விரும்பியவர்கள் மேலே இறாலை பதிப்பார்கள் இறால் இன்னும் சுவையை அதிகரிக்கும் (வாடா! என்று யாரையோ அழைப்பதாக எண்ண வேண்டாம் இது தான் வழக்கத்தில் இருக்கும் பெயர்)


இது நாகை மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் சிற்றுண்டி. இது வடை வகையை சார்ந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த வாடா காரைக்காலில் சாப்பிட்டதாக ஞாபகம். ரொம்போ நாளாக செய்ய ஆசைப்பட்டேன்; மிக்க நன்றி. செய்த்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி இருக்கிறீர்கள். அண்ணி நலமா.இந்த வாடா குறிப்பை மற்ற காயல் சகோதரிகள் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். எங்கள் ஊரில் இது ரெம்பவும் பேமஸ்.நீங்கள் இந்த வாடா வாங்க என்று எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்களா எனக்கு ஆச்சர்யமாக இருக்கு உண்மையில் இது மிகவும் சுவையாகத்தான் இருக்கும். நான் என் குறிப்பில் இந்த வாடா செய்முறையை கொடுக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பதார்தத்தை நானும் சாப்பிட்டு உள்ளேன்.இன்ஷா அல்லாஹ் நோன்பு முடிந்தவுடன் செய்து பார்க்க வேன்டும்.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அலைக்கும் சலாம், நோன்பு முடிந்த பின்பு செய்து பார்த்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்,மேலும் எல்லோருக்கும் நோன்பு சிறப்பாக அமைய இரைவனிடம் வேண்டுகிறேன்

நல்ல அருமையான ஒரு குறிப்பு.செய்வதற்க்கு சிரமமா இருந்தாலும் சாப்பிடுவதற்க்கு சூப்பரா இருந்தது.நன்றி!!

அட!! நேற்று தான் சொன்னீங்க,செஞ்சுட்டீங்களா?இது சாதாரன வடை போல் இல்லாமல் வித்தியாசமான சுவைய்யுடன் இருக்கும் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பதார்த்தம்!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி மேனு!