பூச்சிக்கடி

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிரது அவனுக்கு உடம்பு முழுவதும் பூச்சிக்கடி கடித்து உள்ளது. டாக்டரிடம் காட்டினொம் ஒரு க்ரிம் கொடுத்தார்கள் அதை பொட்டும் பூச்சி கடிகிரது. பூச்சி கடிக்காமல் இருக்க‌ என்ன‌ பொடுவது. இரவெல்லாம் நெலிந்து கொண்டே இருக்கிரான். என்ன‌ செய்வது. என்ன‌ face cream போடுவது. எனக்கு பிரவசத்திர்க்கு பிரகு மிகவும் முடி கொட்டுகிரது அதர்க்கு என்ன‌ செய்வது

//டாக்டரிடம் காட்டினொம் ஒரு க்ரிம் கொடுத்தார்கள் அதை பொட்டும் பூச்சி கடிகிரது. // அது கடித்த இடம் அரிப்பு எடுக்காமல் மாறுவதற்கு கொடுத்த க்றீம் என்று நினைக்கிறேன்.

//பூச்சி கடிக்காமல் இருக்க‌ என்ன‌ பொடுவது.// குட்டீஸுக்குப் பொருத்தமான 'இன்செக்ட் ரெப்பெலண்ட்' கிடைக்கும். போடலாம்.

அதற்கு முன்னால... //இரவெல்லாம் நெலிந்து கொண்டே இருக்கிரான்// கொசு கடிக்கிறதா! அப்படியானால் கொசுவலை பயன்படுத்தலாமே!
வேறு என்ன பூச்சி கடிக்கிறது வீட்டில்!! தெள்ளு இருக்கிறதா உள்ளே! கவனிச்சுப் பாருங்க, என்ன பூச்சி தொந்தரவு கொடுக்குது என்று. மெத்தையில்... டஸ்ட் மைட்ஸ் இருந்தால் கண்ணுக்குத் தெரியாது. மெத்தையை வெயிலில் போட்டு எடுங்க.

//face cream// பயனில்லை. கடிப்பதை நிறுத்தாது.

எங்காவது பயணம் போய் வந்தீர்களா?

‍- இமா க்றிஸ்

வீட்டில் தெள்ளுபூச்சி இருக்கிரது. நான் ஊட்டியில் இருக்கிரென் இன்கு வெயில் இருபதில்லை. வீட்டில் கொசு இல்லை இன்செக்ட் ரெப்பெலண்ட் போட்டால் பூச்சி கடிக்காதா

ம்... சிக்கல்தான்.

கட்டாயம் வீட்டிலிருந்து தெள்ளை ஒழிக்க வழி பாருங்கள். அதைக் கூடவே வைத்துக்கொண்டு டாக்டர் கொடுத்த க்றீம் தனியே பயனில்லை.

குழந்தை பாவம். இப்போதைக்கு ரெபெலண்ட் (ஏரோகார்ட் நல்லது.) வாங்கிப் போடுங்க. அனேகமானவை 6 மணி நேரம் வேலை செய்யும். பிறகு திரும்பப் போட வேண்டும். (பாப்பா விரலில் தொட்டு வாயில் வைக்காமல் பாருங்க.) இது தெள்ளு கடிக்காமலிருக்க உதவும். ஏற்கனவே இருக்கிற அடையாளங்களுக்கு டாக்டர் கொடுத்த க்றீம் போடுங்க.

தெள்ளு முட்டை குழந்தை துணி, படுக்கையில் இருக்கும். குட்டித் தெள்ளு கண்ணுக்குத் தெரியாது. அது துணியிலிருந்து கடிக்கும். படுக்கையை வெயிலில் போடுவதால் தெள்ளு காணாமற் போகாது. முழு வீடும் ஒரு முறை தொற்று நீக்க வேண்டும். மோர்டீன் Flea Bomb கிடைக்கும். வாங்கி அதுல சொல்லியிருக்கிறபடி யூஸ் பண்ணுங்க.

வீட்டுல இருக்கிற பூனை நாய்க்கெல்லாம் ஒரு தடவை தெள்ளுக்கு ட்ரீட்மண்ட் கொடுக்கணும். தோட்டத்துல இருக்கிற தொடிகளைத் தூக்கி அவற்றின் கீழே ஒரு முறை மோர்ட்டீன் ஸ்ப்ரே பண்ணி விடுங்க.

‍- இமா க்றிஸ்

பெட் பக் ஸ்ப்ரே கண்டேன் கடையில். கூடவே இமா சொன்னது போல பூச்சி கடிக்காம இருக்க க்ரீமும். பயன்படுத்திப்பாருங்க. நீங்க சொல்லும் தெள்ளு யாருன்னு எனக்கு தெரியல... மூட்டைப்பூச்சியோ? இவை உடனடியாக உதவும் என்றே நம்புகிறேன். இமா சொன்னது போல வீட்டையும் முழுவதுமாக சுத்தப்படுத்துங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மூட்டைப் பூச்சி வேற. அதையும் பெட் பக் என்றுதான் சொல்லுவாங்க. டஸ்ட் மைட்ஸையும் பெட் பக் என்பாங்க.

தெள்ளு... நாய்த்தெள்ளு. பளபளன்னு கன்னங்கரேல்னு இருக்கும். சிலது ப்ரவ்னா கூட இருக்கும். ஒரு இடத்துல இருக்காம துள்ளிட்டே இருக்கும். Flea என்று தட்டி இமேஜஸ் பாருங்க.

‍- இமா க்றிஸ்

உன்னி?? அது பேரு உன்னி என நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்ணி (dog tick) வேற. துள்ளாது அது. நாய்த் தோலோடு ஒட்டிப் பிடிச்சு இருக்கும். ரத்தத்தை உறிஞ்சி பை போல ஆகிரும்.

இது தெள்ளு (dog flea).
எலியிலும் தெள்ளு வரும். எலித் தெள்ளு... ப்ளேக் நோயைப் பரப்பும்.

‍- இமா க்றிஸ்

கூகில் சொல்லும் தமிழ் அகராதி Flea என்றால் உண்ணி என்கிறார் இமா ;) ஹஹஹா. சரி எதுவோ ஒன்னு... இந்த பெட் பக் ஸ்ரே, லோஷன் இவை உதவுதா பார்ப்போம் அவங்களுக்கு. பாவம் குழந்தை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம். ;) அவர் அப்படித்தான் சொல்லுவார் வனி. உண்ணுதல் என்னும் காரியத்தைச் செய்பவராதலால்... உண்ணி. ;))

இரண்டுமே ஒட்டுண்ணிகள்தானே! அதனால் அப்படிப் போட்டிருக்கிறார்கள். எங்கள் பக்கம் பேச்சுவழக்கில் இருப்பதை நான் சொன்னேன்.

நிஜமாவே இமா இப்ப கொர்ர்.. இனி நாளை வந்து மீதி படிப்பேனாம். ;)

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொன்ன‌ 'இன்செக்ட் ரெப்பெலண்ட்', ஏரோகார்ட் இங்கு கிடைக்கவில்லை. நேற்று அதிகமாக‌ கடித்து விட்டது கடைகலில் கேட்டால் வேரு எதுவும் இல்லை என்ட்ரு சொல்கிரார்கல் வேரு மருந்தோ அல்லது வீட்டில் செய்வது போல் treatment இருந்தால் சொல்லுஙகலென் please

மேலும் சில பதிவுகள்