என் குழந்தைக்கு உதவுங்கள்

என் 6 மாத‌ குழந்தைக்கு 2 காதின் பின் புறத்தில் வெந்தது போல் புண்கள் ஏற்பட்டுள்ளது. டாக்டரிடம் காட்டினோம் சூட்டினால் தான் இப்படி வந்துள்ளது என்று ஒரு மருந்து கொடுத்தார்கல் அதை தினமும் போட்டென் ஆனால் புன் அதிகம் தான் ஆனது இப்பொழுது அதை போடுவதில்லை அந்த‌ புன் எப்பொழுதும் ஈரமாகவெய் உள்ளது அது எதனால் ஏற்பட்டிருக்கும் அது விரைவில் ஆர‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் பதில் அளியுஙல் எனக்கு அழுகையாக‌ வருகிரது

நீங்கள் திரும்பவும் டாக்டரிடம் சென்று காண்பிக்கலாம், அந்த மருந்தில குணமாக வில்லை வேற மருந்து மாற்றி தருவார்கள், அதில் குணமாகிவிடும்.

ரொம்ப‌ குட்டின்னு சொல்ரீங்க‌. திரும்ப‌ மருத்துவரிடம் காண்பியுங்க‌. அவரிடம் பிடிக்கலையா? வேறு நல்ல‌ நம்பிக்கையான‌ மருத்துவரிடம் அனுகுங்கள். வீட்டு வைத்தியங்கள் எதுவும் சீக்கிரம் ஆறுமான்னு தெரியலை.தைரியமா இருங்க‌.

ஸ்கின் டாக்டர பாருங்க‌ பா

திரும்பவும் போய்க் காட்டுங்க. வேறு டாக்டரிடம் போவதாக இருந்தால் இந்த மருந்தையும் கையோடு எடுத்துப் போங்க.

//எப்பொழுதும் ஈரமாகவெய் உள்ளது// என்கிறீங்க. எக்ஸீமா போல இருக்கிறது. பிரச்சினை ஆரம்பித்த பின்னால் காதின் பின்பக்கம் எதனால் சுத்தம் செய்றீங்க? டாக்டர் கொடுத்த க்றீம் தவிர வேறு என்ன போட்டீங்க? திரும்பப் போய்க் காட்டுங்க.

நீங்கள் பாலூட்டுவதானால் உங்கள் உணவையும் கவனிக்க வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைக் கொஞ்ச நாட்களுக்குத் தவிர்த்துப் பாருங்க.

அறை காற்றோட்டமாக இருக்கிற மாதிரிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

yennoda kuzhanthaikku 5 monthla kazhuthula ippadithan irunthathu HITSOCALAMINE use pannen sariyayiduchu so neengalum use panniparunga.nalla ayidum.

குழந்தயை ENT Specialist-டம் கூட்டி போகலாமா அல்லது Child Specialist - டம் கூட்டி போகலாமா சொல்லுங்கலென் please help

மேலும் சில பதிவுகள்