வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!!

எனக்கு பொதுவா வெளியே சாப்பிட விருப்பம் உண்டு. ரொம்ப யோசிக்கவே வேண்டாம், அம்மா வீட்டில் அடுப்படி பக்கமே போகாம வளர்ந்துட்டேன் அதுவும் ஒரு காரணம்னு சொல்லலாம். நானே சமைச்சா அந்த அடுப்படியில் வரும் வாசம் அதன் பின் எவ்வளவு பசி இருந்தாலும் சாப்பிடும் ஆவலை விரட்டியடிக்குது. அதுவும் முக்கியமா அசைவம், சமைக்கிற அன்று சாப்பிடவே முடியாது என்னால். பார்ட்டி அன்றெல்லாம் காலை 9 முதல் இரவு 10 வரை என்னால் சாப்பிடாம இருந்து வேலை பார்க்க முடியுறதுக்கு அதுவே முக்கிய காரணம், பசி உணர்வே போயிடும். இந்த வெளியே சாப்பிடும் பழக்கம் ஒரு வகையில் அறுசுவைக்கு வந்த பின் எனக்கு நிறையவே உதவி இருக்கு. வெளிநாடுகளில் நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எல்லாம் போனால் கேட்டதும் ரெசிபி கொடுத்துடுவாங்க. சிலர் கையால் செய்த பொடி அது இதுன்னு சுத்துவாங்க, சிலர் மசாலாக்கு ரேஷியோ சொல்ல மட்டாங்க, நமக்கு எடுத்ததும் அவங்க சுவை அப்படியே வந்துடாது (தொழில் ரகசியமோ?). ஆனா அந்த உணவை சாப்பிட்ட நமக்கு செய்ய செய்ய என்ன மாற்றம் வேணும்னு பிடிபட்டுடும். இதுவே வெளிநாட்டு ஆட்களின் ரெஸ்டாரண்ட் என்றால் என்ன மாயமோ தெரியாதுங்க... ப்ரிண்ட் பண்ணி ரெசிபி கொடுத்தவங்க எல்லாம் உண்டு!! அவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லியே ஆகனும். சரி இப்போ என்ன சாப்பாட்டு கதை? சொல்றேன் சொல்றேன். அதுக்கு முன்னாடி வனி வீட்டு ஃபில்டர் காபி சாப்பிடுறீங்களா? இந்த ஃபில்டர் என்னோட ஃபேவரட் ;) அம்மா வாங்கித்தந்தது. இதில் எனக்கு மட்டும் தான் காபி போடுவேன். ஆமாங்க... இதன் அளவு 9 செண்டிமீட்டர் உயரமும் 3 செண்டிமீட்டர் அகலமும். மினியேசர் வெரைட்டி (எங்க நம்ம பூனைக்குட்டி ரேணு). நம்ம சுவாவின் கும்பகோணம் டிகிரி காபி எப்போதும் எனக்கு பிடிச்ச ஒன்று. வீட்டில் யாரும் காபி சாப்பிடும் பழக்கமில்லை, ஆனா வனி ஃபில்டர் காபி பிரியை. :)

கும்பகோணம் டிகிரி காபி என்றதும் நினைவுக்கு வருவது சென்னை டூ வேலூர் சாலை தான். எத்தனை டிகிரி காபி கடைகள்! காஞ்சிபுரம் நெருங்கும் போது ஒரு டிகிர் காபி கடை உண்டு, அது எனக்கு வெகு நாட்களா ஃபேவரட்டா இருந்தது. அதை பற்றி அறுசுவையில் கூட சொல்ல நினைப்பேன். ஆனா சமீபத்தில் போன போது காபி தரம் குறைந்து, சுற்றுச்சூழலும் சுத்தம் குறைந்து... இனி இந்த கடை வேண்டாம் என எண்ண வைத்துவிட்டது.

பெங்களூர் வந்தும் வெளியே சாப்பிடும் பழக்கம் என்னை விட்டுப்போகல. உண்மையில் அதிகமாயிட்டு. வெளிநாட்டில் குறிப்பிட்ட சில உணவகங்கள் தான் பிடிக்கும், அங்கே ஒரே வகை உணவு தான் இருக்கும். ஆனா இங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கே. அப்படி சாப்பிட்டதில் பிடிச்ச சிலது இங்கே. முதல்ல மல்லேஷ்வரம் ஏரியாவில் உள்ள ”ஹல்லி மனே” (கிராமத்து வீடு என்று அர்த்தம்). அங்க நான் முதல் நாள் போனபோது ஃபுல் மீல்ஸ் வாங்கினார் என்னவர். ஆரம்பமே அசத்தலா ராகி ரொட்டியோட துவங்கினாங்க பாருங்க... சூப்பர். 2 பொரியல், 1 கூட்டு, வெரைட்டி ரைஸ், ரொட்டி, குருமா, சாதம், ரசம், தயிர், ஐஸ்க்ரீம், பழம் என்று சிம்பிளான மெனு தான், ஆனா நிரைவா இருக்கும். நானே போதும் என்றாலும் “இதை ட்ரை பண்ணுங்க”னு கேட்டு கேட்டு செர்வ் பண்ணுவாங்க. அங்கே என் ஃபேவரட் ராகி ரொட்டி & அக்கி ரொட்டி தான். கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகளை இங்கே சுவைக்கலாம். :)

சைவம் என்றால் என்னோட சாய்ஸ் ஹல்லி மனே போலவே “வாசுதேவ அடிகாஸ்”. இங்கே ரவா இட்லி, போண்டா சுப், பூரி சாகு எல்லாம் என் ஃபேவரட். அடுத்த ஃபேவரட் “ஷிவ் சாகர்”. இங்கே கிடைக்கும் “வெஜ் பக்கோரா”, அதோடு வரும் க்ரீன் சட்னி!! சூப்பர். சாட் மசாலா தூவி அதன் வாசமே நம்மை இழுத்து கொண்டு போய் ரெஸ்டாரண்ட் உள்ளே உட்கார வெச்சுடும். இங்கே சுவைத்ததில் சமீபத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சது “வெஜ் தவா மசாலா”. இன்னும் அந்த குறிப்பு என் அடுப்படியில் ஆராய்ச்சியில் தான் இருக்கு ;)

இன்னும் நிறைய ரெஸ்டாரண்ட் இருக்கு சொல்ல... ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி இப்போ முக்கியமான இடம் “ஃப்ரேசர் டவுன் - மாஸ்க் ரோட்”. ஆமாங்க ரமதான் ஸ்பெஷல் அங்க தான் உண்மையில் ஸ்பெஷல். மாலை துவங்கும் ஓப்பன் ஸ்டால்ஸ் இரவு முழுக்க இயங்குதுங்க, ரமதான் காலம் முழுவதும். தெரு முழுக்க கூட்டம். என்னவர் பேப்பரில் பார்த்துவிட்டு வந்து சொன்னார், ரொம்ப நல்லா இருக்கும் என்றார்கள் போய் பார்ப்போமா என்று ;) உடனே கிளம்பிட்டோம்ல. பார்க் பண்ண இடம் கிடைப்பதே கஷ்டம், அவ்வளவு ஸ்டால்ஸ் சாலை ஓரம். பெங்களூரில் மிகப்பிரபலமான பல உணவகங்கள் (பீசா ஹவுஸ், எம்பைர், ஷாதி கி பிரியாணி இன்னும் பல) இங்கே ஸ்டால் போடுறாங்க. ஃப்ரேசர் டவுன் ஏரியாவில் ஏற்கனவே உணவகம் வெச்சிருக்கவங்க கூட அவங்க ரெஸ்டாரண்ட் வெளியவே ஓப்பன் ஸ்டால் போடுறாங்க. உள்ளே போய் உட்கார்ந்து காத்திருக்காம எற்கனவே சமைச்சதை போகும் வழியில் உடனே வாங்க வசதியா இருக்கும் என்று. எல்லா இடங்களிலும் கிடைக்கும் உணவு என்னவோ ஒன்றே தான். சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் மசாலா பூசி எண்ணெயில் குளித்துத் தொங்கும். கீமா சமோசா, கபாப், பிரியாணி, இடியாப்பம் என எல்லாம் உண்டு. சைவப்பிரியர்கள் அங்க வேடிக்கை கூட பார்க்காதீங்க, உங்களுக்கு அங்க ஒன்னும் கிடைக்காது. அசைவப்பிரியையான எனக்கே அங்க போயிட்டு வந்து 10 நாள் அசைவம் பிடிக்காம போச்சுது ;( அந்த எண்ணெயில் வறுத்த அசைவத்தின் வாசம் பண்ண வேலை. சுவையில் குறை இல்லை, விலையும் உணவகத்தில் கிடைப்பதை விட குறைவே. க்ரில், தந்தூரி எல்லாம் வைத்திருக்கும் ஸ்டால்களும் உண்டு. நிச்சயம் ஒரு முறை போய் ருசிக்கலாம். எனக்கு அந்த இடத்தில் ஒரே பிரெச்சனை தான்... பிச்சை. கையில் பிள்ளையோடு நம்மோடு சேர்ந்து நடந்து கையை பிடிச்சு இழுத்து பிச்சை எடுக்கும் ஆட்கள் அங்கே அதிகம். அதைத்தவிற உணவு மட்டும் என்றால் நிச்சயம் போகலாம்.

ஒன்னு உண்மைங்க... உணவு என்பது இப்போதெல்லாம் வயிற்றுக்கு மட்டுமில்லங்க... கண்ணுக்கு மூக்குக்குன்னு மற்ற உணர்வுகளுக்குமே விருந்தா அமையனும். இல்லன்னா “வீட்டில் வைக்கும் ரசம் போதும்” என சீக்கிரம் சொல்ல வெச்சுடும். வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் இந்த இடங்களில் சுவைத்துப்பாருங்க :) உங்க ஏரியாவில் உங்களுக்கு பிடிச்ச உணவகங்களையும் சொல்லுங்க வனி போல ஆட்கள் ஊரை சுற்ற (சாரி புதிதா சாப்பிட) ஆசைப்படுவோம்ல.

5
Average: 5 (5 votes)

Comments

வனி...பெங்களூரு எம் ஜி ரோட்டில் ஹோட்டல் இம்பீரியல் என்ற‌ நான் வெஜ் ரெஸ்ட்ரான்ட் இருக்கும். பிரபலம், சுவை அலாதி. சூப்பில் இருந்து எல்லாம் கிடைக்கும். ட்ரை பண்ணுங்க‌.ஃபில்டர் சூப்பர்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்படி இருக்கீங்க??? :) முதல் பதிவு... அப்பப்பா எவ்வளவு நாளாச்சு!! ம்ம்... இம்பீரியல் பல இடங்களில் போயிருக்கேன் ரம்யா. எனக்கும் பிடிக்கும். எம் ஜி ரோட்டில் உள்ளதுக்கு போனதில்லை, ட்ரை பண்னிப்பார்க்கறேன் கட்டாயம். ரம்யா சொல்லி போகாம எப்படி??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் அக்கா நாவில் எச்சில் ஊற வச்சுடீங்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த இடங்களுக்கு சென்று ருசி பாத்துட வெண்டியது தான்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//சாப்பிட்ட நமக்கு செய்ய செய்ய என்ன மாற்றம் வேணும்னு பிடிபட்டுடும்.// உண்மைதான் வனி. நாக்கு சொல்லிரும்.

மீதி ஒண்ணும் நம்ம ஏரியா இல்லை. சோ மீ டாட்டா. இங்க வாங்க. ஒரு ஹங்... ;)) நினைச்ச எழுத்து சரியா தட்ட வர மாட்டேங்குதே! hangi கூட்டிப் போறேன்.

‍- இமா க்றிஸ்

நாங்க சென்னை ல இ௫க்கோம் வனி அக்கா,எப்போதும் எங்களுக்கு பிடித்த உணவம் அஞ்சப்பர் தான்,அங்க செட்டிநாட்டு உணஉ எல்லாமே கிடைக்கும் ரெம்ப அ௫மையாக இ௫க்கும்,குரோம்பேட்ல இ௫க்கும் காரைக்குடி உணவகம்,ஹாட் சிப்ஸ்,ஆனந்தபவன் எல்லாமே நல்ல உணவகங்கள்,பெங்களூர் வ௫ம் போது நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒ௫ பிடி பிடிக்கணும்,உங்க காபியும் சூப்பர் ஃபில்ட௫ம் சூப்பர்

ரம்யா ஜெயராமன்

மிக்க நன்றி ;) அவசியம் வாய்ப்பு கிடைக்கும் போது ட்ரை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நினைச்ச எழுத்து சரியா தட்ட வர மாட்டேங்குதே// - உங்களுக்கேவா!! ;) ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா! பெங்களூர்ல இத்தனை வெரைட்டீ ஹோட்டல்ஸ் இருக்கா, அந்த ஊர்ல பல வருடங்கள் இருந்தும் இதெல்லாம் தெரியாம போச்சே! காரணம் 1. நாம south Bangaloreஅப்படிங்கிறதால அங்க இருக்கிற சில பல ஹோட்டல்ஸ் மட்டுமே தெரியும். 2. சாப்பிட்டா அதோட சுவை நல்லா இருந்ததா அவ்வளவுதான், நாம வனி மாதிரி ரெசிப்பீ ஆராய்ச்சி எல்லாம் செய்யமாட்டமே! 3. என் கணவர் வெஜிட்டேரியன் நானும் மகனும் மட்டுமே நான்வெஜ், அதனால அதிகமா நான்வெஜ் ஹோட்டல்ஸ் நோஓஓஓஒ........(இது எவ்வளவு கொடுமை சரவணன்........) ஆனா உங்க பதிவை படித்தவுடனே முடிவுபன்னிட்டேன், திரும்ப பேங்களூர் போனவுடனே இதையெல்லாம் கண்டிப்பா ட்ரை செய்யறதுன்னு.

மிக்க நன்றி :) எனக்கு சென்னையில் நிறைய ஃபேவரட் உண்டு ;) அஞ்சப்பர், அரசப்பர், தலப்பாக்கட்டி, ஹாட் சிப்ஸ், புஹாரி, உட்லாண்ட்ஸ், சரவணபவன் இப்படி அடுக்கிட்டே போவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ங் + இ= ... வரவே மாட்டேங்குதே! வேற எங்கயாச்சும் போகணும் போல. ;(

‍- இமா க்றிஸ்

ஹஹஹா... எனக்கு உணவகங்கள் எல்லாமே ட்ரை பண்ணப்பிடிக்கும். எங்க என்ன ஸ்பெஷலா இருக்கும் என பார்த்து பார்த்து சாப்பிடப்பிடிக்கும். கார்னர் ஹவுஸ் என்னோடு ஃபேவரட் லிஸ்ட்ல ஒன்னு. அங்க கிடைக்கும் ஐஸ்க்ரிம் வகைகளுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. அது போல KC Das, அனந்த், ஆஷா எல்லாம் ஸ்வீட்ஸ் ஷாப்.. இங்க ஒவ்வொரு வகையான இனிப்புகள் பிடிக்கும். தாஸ்ல மிஸ்டி தோய், ஆனந்த்ல சாட் ஐடம்ஸ், ஆஷாவில் கீரை முறுக்கு. ;) எப்புடி?? வாங்க பெங்களுருக்கு இருவரும் சேர்ந்து போய் ஒரு பிடி பிடிப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெங்களூர் வந்து அஞ்சு வருசத்தில முதல் ரெண்டு வருஷம் நல்ல ரெஸ்டாரண்ட் தேடியே ஓடிரிச்சு. இங்க என்னோட ஃப்வெரைட் "Hydrabadi Biriyani House" சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சைட் டிஷ் எல்லாமே சூப்பரா எனக்கு புடிச்ச மாதிரி ஸ்பைசியா இருக்கும். கொடுக்கற காசுக்கு வொர்த். விக்டோரியா லேஅவுட் & முருகேஷ்பால்யா ல ப்ராஞ்சஸ் இருக்கு. தைரியமா ட்ரை பண்ணலாம். அப்பறம் Empire Hotel சிக்கன் ஷவர்மா & கிரில் சிக்கன் என்னோட ஆல் டைம் ஃப்வெரைட்... டீசண்ட் ப்ரைஸ். ஃபுட் கூப்பன்‌ அக்சப்ட் பண்ணிக்கிறாங்க. பெங்களூர் ஃபுல்லா நெறைய ப்ராஞ்சஸ் இருந்தாலும் இடத்துக்கு இடம் டேஸ்ட் வேறு படுது. அப்பறம் Barbeque Nation இங்க போறதுனா ஒரே கொண்டாட்டம் தான். வித வித மான Starters! நம்ம டேபிள் ல யே சின்னதா ஒரு பார்பெக்யூ அடுப்பு வச்சி அதில சிக்கன், ஃபிஷ், பிரான் னு அப்டியே அடிக்கிருவாங்க. ஸ்டார்ட்டர் & டெஸெர்ட் தா ஸ்பெஷல்...ஆனா கொஞ்சம் காஸ்ட்லி..எப்ப எது நடந்தாலும் என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரீட் கேக்கற ஒரே ரெஸ்டாரண்ட் இது தான். :-)

ஹஹஹா... இமா நான் இப்படி ரீப்ளேஸ் பண்ணிருவேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்பிக்யூ நேஷன் சென்னையிலும் உண்டு. எனக்கும் விப்பம். ஒரே பிரெச்சனை கால் பண்ணி முன்பே புக் பண்ண வேண்டும் என்பார்கள் ;( நினைச்சா கிளம்ப முடியாது. ஹைதராபாதி பிரியாணி இதுவரை ட்ரை பண்ணல, கட்டாயம் ட்ரை பண்ணிடுறேன். ஷவர்மா நான் தப்பித்தவறியும் எங்கும் ட்ரை பண்ணுறதில்லை காயதிரி... உண்மையில் சிரியா போல அதன் பின் எங்கும் நான் சுவையான ஷ்வர்மா சாப்பிட்டதே இல்லை :( இங்க எல்லாம் சாப்பிட்டா “இதுக்கு பேரு ஷவர்மாவா?”னு கோபம் வருது. மாலேவில் கூட அப்படித்தான்... பிடிக்கவே இல்லை. எம்பைர் மட்டுமல்ல காயத்ரி, பல ரெஸ்டாரண்ட் இன்க்லூடிங் நந்தினி (ஆந்திரா ரெஸ்டாரண்ட்) இடத்துக்கு இடம் தரம் மாறுபடுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உச்சரிப்பு தப்பா வருதே! ;)) மூணு ஆங்கில காரக்டரும் சேர்த்து ஒரு சவுண்டு வரணும். ;)

தலைப்புல முன்னால 'ம' போடாம விட்டதுக்கு தாங்ஸ். ;)) இமாவுக்கு இனி நல்லிரவு. டாட்டா

‍- இமா க்றிஸ்

ஆமாம் அக்கா. ரெண்டு நாள் முன்ன புக் பண்ணி டீம் லஞ்ச் போவோம். ஷவர்மா மத்த இடத்த கம்பேர் பண்ணும் பொது எம்பயர் பரவா இல்ல. உங்களோட ஷவர்மா ரெசிபி ட்ரை பண்ணி பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அடிக்கடி ரெசிபி ய பாத்துட்டு, நேர பக்கத்தில இருக்கற எம்பயர் கு போய்ருவேன் :-)பட் அவங்க கிரில் சிக்கன் அ அடிச்சிக்க முடியாது. அந்த அளவு இந்தியன் டேஸ்ட் கு வேற எங்கயும் இருந்ததில்ல. மட்டன் ரான் கூட அருமையா இருந்தது. அப்பறம் கோரமங்களா பிஸ்தா ஹவுஸ் "ஹலீம்" தா இப்ப ஹாட் டாபிக். இன்னும் ட்ரை பண்ணல. ஆன்லைன் ல புக் பண்ணிட்டா கூரியர் கூட பண்றாங்களாம். ரமலான் மாதம் மட்டும் தா கெடைக்காரதாள ரொம்ப கூட்டமா இருக்குனு கேள்வி பட்டேன்.
நீங்க ரொம்ப லக்கி அக்கா, சிரியா, மாலே னு ரவுண்டு கட்டி டேஸ்ட் பண்ணிருக்கீங்க.

ஃபில்டர் காபி, ஃபில்டர் காபி செட் எல்லா படத்தையும் காண்பித்து எனக்கு காபி குடிக்க ஆசையை தூண்டிவிட்டுடிங்க, ம்ம் சூப்பர் மிகவும் அழகு.
டிகிரி காபி என்றாலே அது கும்பகோணம் தான் வாவ் எங்க அத்தை வீடும் அங்கதான் இருக்கு இப்ப அங்க போனாலும் டிகிரி காபி தான். இன்னும் மாற வில்லை.
//ஆனா சமீபத்தில் போன போது காபி தரம் குறைந்து, சுற்றுச்சூழலும் சுத்தம் குறைந்து... இனி இந்த கடை வேண்டாம் என எண்ண வைத்துவிட்டது//
உண்ணமைதான்.
//ஃப்ரேசர் டவுன் - மாஸ்க் ரோட்”//
பெங்களூரில் இப்படி ஒரு இடமா, படத்தை பார்க்கும் போதே ஒரே கூட்டமாக மீன் மார்கெட் மாதிரி அதில் சிக்கன் லெக் பீஸ் பொரித்து தொங்க விட பட்டுள்ளது.

vani madam,
அருமை.என்னால சாப்பாடு மேல ரொம்ப பிரியம் காட்டமுடில.ஆன கொஞ்சம் சப்பிடாலும் ருசியாக சாப்பிடுவேன்.

சென்னை-யில் சிம்ரன் ஆப்பக்கடை கோழி ரசம் அருமையா இருக்கும்.

நானும் காபி பிரியை தான்.உங்க காபியை பாத்தாலே,எனக்கும் காபி குடிக்கனும் போல இருக்கு.இப்போ பில்டர் காபி போடத்தான் போய்கிட்டு இருக்கேன்.(பேச்சுதமிழ் எழுத இப்போதான் முயற்சி செய்கிறேன்)

No pains,No gains

ANANTHAGOWRI.G

//தலைப்புல முன்னால 'ம' போடாம விட்டதுக்கு தாங்ஸ்// - ஹஹஹா. வெல்கம் பேபி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொன்ன ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் இப்ப தான் சில மணி நேரம் முன் பார்த்துட்டு வரேன். விக்டோரியா ரோட்டில் கண்டேன் ப்ளூ கலர் பில்டிங். எம் ஜி ரோட்டில் உள்ள எம்பைரும் கண்டேன் ;) அதே வழியா எத்தனையோ முறை போய் வந்திருக்கேன்... இன்று தான் இவை இரண்டும் அந்த சாலையின் பெயரும் கவனித்து பார்த்திருக்கேன். உங்களால். ;) இனி அவசியம் ஒரு நாள் போய் சாப்பிடுவோம்.

ஹலீம் இப்போது ஃப்ரேசர் டவுன் போனா சாப்பிடலாம்... அதே பீசா ஹவுஸ் ஹலீம் தான். மற்ற கடைகளுதும் கிடைக்கும் அங்கே. உண்மை தான் பீசா ஹவுஸ் தனியாவே ஒரு பெரிய இடத்தில் கூடாரம் போட்டிருக்காங்க. உட்கார்ந்து சாப்பிடும்படி. சரியான கூட்டம் தான்.

இதில் லக்கி என்ன இருக்கு காயத்திரி, நான் நம்ம ஊரில் இருந்து நம்ம ஊர் பண்டிகை, உணவு எதையும் சாப்பிட முடியலயேன்னு ஃபீல் பண்ணுவேன் அங்க போனா ;) என் ஷவர்மா குறிப்பும் சிரியா போல எல்லாம் வராதுங்க. ஆவரேஜ் தான். ஹெல்தி வீட்டு எடிஷன் என்றால் சுவையான குறிப்பு. ட்ரை பண்ணுங்க. எம்பைர் கபாப் நானும் சுவைத்திருக்கேன், கோரமங்கலா ஏரியாவில். எனக்கு ரொம்ப பிடிச்சுது. கோரமங்கலாவில் உள்ள அஞ்சப்பார் கூட எனக்கு ஃபேவரட். அங்கே நண்டு ரசம்... சூப்பரோ சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கும்பகோணம் தான் அத்தை வீடா!! கொடுத்து வெச்சவங்க நீங்க. எனக்கு அந்த காபி ரொம்ப விருப்பம். சுவா சொன்ன முறையில் தான் எப்போதும் போடுவேன்.

அந்த இடம் மீன் மார்கட் போல தான் கூட்டம் இருக்கும் ;) நல்ல உதாரணம் சொன்னீங்க. ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனி என்னை மேடம் சொன்னால் நான் உங்க பேச்சு கா விட்டுடுவேன். :(

சிம்ரன் ஆப்பக்கடை இதுவரை போகல... நளாஸ் மட்டும் தான் போயிருக்கேன். நிச்சயம் நீங்க சொன்ன கோழி ரசத்துக்காகவே ஒரு முறை போய் வந்துடுறேன். தேன்க்யூ சோ மச் கௌரி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் பெங்களூர் ஸ்பெஷல் பதிவா இருக்கு வனி! :‍‍) பெங்களூருக்கு சின்ன வயசில், குடும்பத்தோட ஒரிரு முறை டூர் வந்திருக்கேன். இப்பல்லாம், வெக்கேஷனுக்கு வரும்போது, சென்னை ஃபேவரட் ப்ளேசஸ்ல சுவைப்பதோட சரி, அதுவும் அம்மா சமையலுக்கு அடுத்தப்படிதான்... :‍) நீங்க சென்னைல லிஸ்ட் பண்ண இடங்களில் எல்லாம் சாப்பிட்டு இருக்கேன், எனக்கும் அவை ஃபேவரட்!

உங்க ஃபில்டரும் அருமை, ஃபில்டர் காபியும் அருமை! சேம் பின்ச் வனி, எனக்கும் இங்க காபி குடிக்க கம்பனி இல்லை, நான் மட்டும்தான் காபி குடிப்பேன்! :‍) என்ன என் ஒரு ஆளுக்காக என்று உள்ளே போட்டு வைத்திருக்கும் ஃபில்டரை உடனே எடுக்க சொல்லுது உங்க காபி படம்!! :‍) மொத்தத்தில் நல்லா ப(ரு)சிக்க வைக்கிறது உங்க பதிவு! வாழ்த்துக்கள் வனி!!

அன்புடன்
சுஸ்ரீ

வருமே.. :-)

அதுக்குதானே எழுத்துதவி கொடுத்து இருக்கோம்.

;)) முன்னாலயே இது தெரிஞ்சிருந்துது. தட்டிப் பார்த்தேன் நேற்று. வரலயே! :-)

இங்க கலப்பையை ஆன்ல வைச்சுட்டு எழுத்துதவில தமிழ்லயே தட்டினா மேல எப்படி ஙி வரும்! ஙே தான் வந்துச்சு. :-) அரைத் தூக்கம். சிந்திக்க முடியல. தாங்ஸ் பாபு.

‍- இமா க்றிஸ்

இது கிடக்கட்டும். சுவர்க் கோழிக்கு இங்கிலீஸ்ல என்னன்னு கொஞ்சம் அந்த த்ரெட்ல சொல்லிப் போடுங்கோ..

ஃபில்டர் காபியின் மணமும் சுவையும் எனக்கு சிறு வயதிலிருந்தே அலாதி தான், ஆனால் ஒவ்வாமை கண்டறிந்ததிலிருந்து அதை திரும்பியேப் பார்ப்பதில்லை. என்னவருக்கு மிகவும் பிரியம்.ஊரிலிருந்து வரும் போது சிக்கரி சேர்த்து ஸ்பெஷலா காபி தூள் வாங்கி வருவதுண்டு.தினமும் காலையில் ப்ல்டர் காபி போட்டு கொடுப்பேன்.படத்தில் உள்ளது போன்ற மேக்கர் தான். காப்பி தூள் முட்ந்ததும் காபி மேக்கரும் குடோனுக்குப் போய் விடும். அப்புறம் அடுத்து ஊருக்கு போய் வருகையில் வெளியே எட்டிப் பார்க்கும்.
\\இந்த வெளியே சாப்பிடும் பழக்கம் ஒரு வகையில் அறுசுவைக்கு வந்த பின் எனக்கு நிறையவே உதவி இருக்கு//

"யாம் சுவைத்த உணவு ருசிக்க இவ் அறுசுவை"
உங்களோட இந்த நல்ல மனசைப் பாராட்டியே ஆக வேண்டும் வனி.
எங்களுக்கெல்லாம் கண்ணுக்கு மட்டும் எட்டுறது வாய்க்கும் எட்டுதுன்னா உங்க ரெஸிப்பிகளாலதானே :-)

\\(தொழில் ரகசியமோ?)//
தினமும் இரவில் இங்குள்ள தொலைக்காட்சியில் அமெரிக்க உணவு சானலில் ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம், அதில் அமெரிக்காவின் ஒவ்வோரு இடங்களிலும் உள்ள சிறிய சாலையோர உணவங்களில் புகழ் பெற்ற உணவுகளின் செய்முறையை படம் பிடித்து காண்பிப்பார்கள்.அதிலிம் இப்படித்தான் அவர்களுக்கென்று உள்ள சீக்ரெட் இன்கிரீடியன்ட் என்று சேர்ப்பதைப் பற்றி மட்டும் சொல்வதே இல்லை.அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரோ அமெரிக்காவின் பிரபல செஃப் தான். இருந்தும் அவருக்கும் கூட பெப்பே தான் :-)

//நீங்க சொன்ன ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் இப்ப தான் சில மணி நேரம் முன் பார்த்துட்டு வரேன். விக்டோரியா ரோட்டில் கண்டேன் ப்ளூ கலர் பில்டிங். எம் ஜி ரோட்டில் உள்ள எம்பைரும் கண்டேன் ;) அதே வழியா எத்தனையோ முறை போய் வந்திருக்கேன்... இன்று தான் இவை இரண்டும் அந்த சாலையின் பெயரும் கவனித்து பார்த்திருக்கேன். உங்களால். ;) இனி அவசியம் ஒரு நாள் போய் சாப்பிடுவோம்// கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. ஃப்ரேசர் டவுன் போனதில்ல இது வரைக்கும், சரி போலாம்னு பாத்தா டெய்லி மழை இங்க.
முன்னாடி பிங்கர் ஃபிஷ் சாப்பிடறதுக்காகவே அஞ்சப்பர் போவோம். இப்ப முன்ன மாதிரி இல்லனு எனக்கு ஒரு ஃபீலிங்க். நண்டு ரசம் & மட்டன் சூப் என்னோட ஃபேவரட் கூட. மத்தபடி செமி கிரேவி ஐட்டம் எல்லாம் சுமார் ரகம் தான். அவங்க யூஸ் பண்ற சிக்கன் கூட ஏதோ வித்தியாசமா ரப்பர் மாதிரி இருக்குறதா தோணும் எனக்கு.

பாட்டோட வந்தா தான் சுஸ்ரீ ;) அடுத்த வெக்கேஷன்கு சென்னை வரும் போது சொல்லுங்கோ, நாம சேர்ந்து போவோம்.

தனியா காபி குடிக்கும் உங்களுக்கும் இதே போல ஃபில்டர் வாங்கி வனி பார்சல் பண்ணிடுறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஙி - இப்படி ஒரு எழுத்து இருக்கோ!!! இதுக்கு எழுத்துதவி எதுக்காம்? NHM’ல எனக்கு கூட தான் தட்ட வருது :P பாவி மக்கா, எனக்கு தமிழ் எடுத்த வாத்தியை எல்லாம் கியூல நிக்க வெச்சு புளியம்பழம் சாப்பிட கொடுக்கனும் போலவே!! இதை நான் எழுத்தில் கூட பயன்படுத்தினதில்லை ;) ஹஹஹா. வனி நீயும் உன் தமிழும்!!! கலக்கும்மா வனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா