சாக்லேட் மஃபின்ஸ் வித் பீனட்ஸ்

தேதி: July 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மைதா மாவு - ஒரு கப்
துருவிய சாக்லேட் - 50 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
பால் - 5 மேசைக்கரண்டி (தேவைக்கேற்ப)
வெனிலா எஸன்ஸ் - அரை தேக்கரண்டி
வேர்க்கடலை - கால் கப்


 

அவனை 180 C’ல முற்சூடு செய்யவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து நன்றாக சலித்து வைக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
சாக்லேட்டை டபுள் பாய்லர் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
உருக்கிய சாக்லேட்டுடன் ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெயைச் சேர்த்து ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் சர்க்கரை, வெனிலா எஸன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை கரைந்ததும் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
பிறகு சிறிது சிறிதாக மைதா மாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்து கொள்ளவும்.
கடைசியாக பால் சேர்த்து மஃபின் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். (மாவின் தன்மைக்கு ஏற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ பால் சேர்த்துக் கலக்கவும்).
அத்துடன் உடைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கலந்து மஃபின் மோல்டுகளில் நிரப்பி, அவனில் வைத்து 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
உள்ளே விடும் டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் போது எடுத்து, நன்றாக ஆறவிட்டுப் பரிமாறவும்.
சுவையான, மிருதுவான சாக்லேட் மஃபின்ஸ் தயார்.

விரும்பினால் வேர்க்கடலை சேர்க்கும் போது சில சாக்லேட் சிப்ஸும் சேர்க்கலாம். நான் வெள்ளை சாக்லேட் பயன்படுத்தியுள்ளேன். டார்க் சாக்லேட் பயன்படுத்த விரும்பினால் மைதா மாவுடன் ஒரு மேசைக்கரண்டி அளவு கொக்கோ பவுடரும் சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சாக்லேட்டை உருக்க மைக்ரோவேவில் சில நொடிகள் வைத்து எடுக்கலாம். இல்லையெனில் டபுள் பாய்லர் முறையில் உருக்கலாம்:

டபுள் பாய்லர் முறை: ஒரு பாத்திரத்தில் நீர் இல்லாமல் துடைத்துக் கொண்டு அதில் துருவிய சாக்லேட்டைப் போட்டுக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கத் துவங்கியதும் அதன் மேலே சாக்லேட் உள்ள பாத்திரத்தை தண்ணீரில் படாமல் பிடித்து, மெதுவாகக் கலந்துவிடவும். சூடான ஆவிபட்டு சாக்லேட் உருகத் துவங்கும். சாக்லேட்டில் தண்ணீர் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் பட்டால் சரியாகவராது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super cake

வனி சூப்பர்.

நீங்க‌ பயங்கரமா அவன்ல‌ பூந்து விளையாடறீங்க‌. எனக்கு பொறாமையா இருக்கு. போங்க‌ நான் உங்க‌ மேல‌ கோவமா இருக்கேன். நான் நிறைய‌ டவுட் கேட்டு இருக்கேன் உங்க‌ கேக் அன்ட் குக்கீஸ்ல‌. எதுக்கும் நீங்க‌ ரிப்ளை பண்ணவே இல்ல‌. நான் கோச்சிட்டேன்.

எல்லாம் சில‌ காலம்.....

மஃபின்ஸ் அருமை வாணி. குக்கீஸ்ல கலக்குறீங்க. வந்து பார்க்கத்தான் டைம் இல்ல. எல்லாம் செய்து பார்க்கனும். ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மஃபின் சூப்பரா ரெய்சாகி வந்திருக்கு வனி,கலக்குங்க. நமக்குத்தான் இந்த நட்ஸ், சாக்கோ எல்லாம் ஆகாது.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

நசீரா... முதல் பதிவுக்கு மிக்க நன்றி :)

நித்யா... மிக்க நன்றி :)

பாலநாயகி... அநியாயமா குற்றம் சொல்லக்கூடாதாம்... சாமி கோச்சுக்குமாம், பாட்டி சொன்னாங்க ;) நான் எல்லா இடத்திலும் பதிவிட்டேன், உங்களுக்காக கேக் பேக் பண்றது பத்தி ஒரு பாக் போஸ்ட்டும் எழுதுறேன்... படிக்காம் கோச்சுகிட்டா, வனியும் கோச்சுப்பேன்.

உமா... எங்க உங்க குறிப்புகள் கொஞ்சம் நாளா காணோம்?? நலம் தானே உமா? சீக்கிரம் வாங்க. :)

வாணி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா