வேர்க்கடலை சாதம்

தேதி: July 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

அரிசி - முக்கால் கப்
வறுத்து பொடிக்க:
வேர்க்கடலை - அரை கப்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகாய் வற்றல் - 4
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயம் - சிறிது
உப்பு, மஞ்சள் தூள்


 

அரிசியை வேக வைத்து உதிரியாக சாதத்தைத் தயார் செய்து வைக்கவும். (மீந்து போன சாதம் இருந்தாலும் கூட பயன்படுத்தலாம்). வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.
வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை வறுக்கவும்.
பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர மற்ற அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு, பிறகு அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து, 2 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து பிரட்டி இறக்கவும்.
சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.

விரும்பினால் தாளிக்கும் போது வேர்க்கடலை மற்றும் முந்திரி போன்றவற்றைச் சேர்த்து வறுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்ப்ளி சூப்பர்.. செய்து பார்க்கிறேன்...

கலை

சூப்பரா இருக்கு வனி. வாசனை தூக்கும்போல தெரியுது. ;-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனிதா ஈஸியான செய்முறை நாளைக்கு லன்ச் பாக்ஸ்கு ரெஸிப்பி கிடைச்சாச்சு

வேர்க்கடலை சாதம் அருமை. சமையல் முடிச்ச‌ கையோட‌ பதிவு போடறேன்.கும்முன்னு கடலை வாசத்தோட‌ சாதம் சூப்பரா இருக்கு. போட்டோ செஷன் இன்னும் கொஞ்ச‌ நேரத்தில‌ முகப் புத்தகத்துல‌ வரும்..;) குவிக்கான‌ ரெசிப்பிக்கு எனது பாராட்டுக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வேர்க்கடலை சாதம் வழக்கம் போல அருமை, ரொம்ப டேஸ்டியா இருக்கு.

வாவ் வனி, சொன்னா நம்ம‌ மாட்டிங்க‌?! இன்னைக்கு இந்தமாதிரி சாதம் செய்யனும்னு வேற‌ கொஞ்சம் ரெசிப்பில்லாம் பார்த்து வைச்சிருந்தேன்(!) இங்கே ஓப்பன் பண்ணினால், அதே வேர்க்கடலை சாதம்!! :‍) செம‌ டெலிபதி! ;) :) எப்பவும்போல படங்கள் எல்லாமும் பளிச் & அழகு!!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கலை... செய்துட்டு சொல்லுங்கோ :) நன்றி.

உமா... ஹஹஹா... என்னை தூக்கவே இல்ல, ரொம்ப வெயிட்டா இருந்தனோ? ;)

தேவி... இன்று செய்தீங்களா? எப்படி வந்தது? ரொம்ப நாளா உங்களை காணோமே? ஏன்?

சுமி... படமெல்லாம் போட்டு அசத்துறீங்க சுமி. நன்றி :)

பாரதி... நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க.

சுஸ்ரீ... அப்பப்ப வாரது, காணாம போறது ;) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.இன்னைக்கு குட்டிஸ் லன்ச்பாக்ஸ்க்கு வேர்கடலைசாதம்தான்.சூப்பர்

Be simple be sample

சூப்பரு... ஃபேஸ்புக்ல படம் காட்ட அடுத்த ரெசிபி!! ;) நடத்துங்க நடத்துங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Mam...unga dish super thank u

God is great

Mam...intha dish ku ethu compination nu solluga pls

God is great

பார்க்க கலர் புல்லா இருக்கு பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு நன்றி

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

மிக்க நன்றி :) எனக்கு பிடிச்ச காம்பினேஷன் உருளை வறுவல் அல்லது வத்தல். ட்ரை பண்ணிப்பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Naan lunch ku intha sadam pannen rempa nalla iruthuchu
. mushroom masala vachen.athukpparm than nega anupuna potato varuval illana vathal nu anupiruthega next time kandippa dry panren mam.thank u

God is great

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் வனி, இன்னைக்கு லன்ச்சுக்கு உங்க வேர்க்கடலை சாதம்தான். இப்ப சாப்பிட்டுட்டே பதிவு பண்ணறேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சூப்பர் டேஸ்ட், செய்முறைகூட ரொம்ப ஈசியா இருக்கு. இனி அடிக்கடி லன்ச் பாக்ஸ்க்கு இவரும் உண்டு! :) இன்னும் பசங்க ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும், 'தம்ஸ் அப்' கொடுத்திட்டால் டபுள் சந்தோஷம் ஆகிடும்! ;) தேங்க் யு வனி! :)

//சுஸ்ரீ... அப்பப்ப வாரது, காணாம போறது ;) // :-D

அன்புடன்
சுஸ்ரீ

ஆகா ஆகா!! சுஸ்ரீ கையால் இப்படி ஒரு பாராட்டு கிடைக்க என்ன தவம் செய்தாய் வனிதா!!! (கலக்குற போ... ரொம்ப உயரமா பறக்காத, அடி பட்டுடப்போகுது ;))

இதெல்லாம் உங்க கமண்ட்டை படிச்சதும் வனியோட மைண்ட் வாய்ஸ் ;) குறிப்பை ருசியா செய்து பாராட்டை எனக்கு வாங்கித்தந்த உங்களுக்கு தேன்க்ஸ் சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இப்பதான் வேர்க்கடலை சாதம் செய்தேன். டேஸ்ட் சூப்பர். செய்வதும் மிகச்சுலபம். (Y)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!