தக்காளி குருமா

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம் + 5,
பூண்டு - 8 பல்,
காய்ந்த மிளகாய் - 6,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

200 கிராம் வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதக்கியவற்றோடு சோம்பு, கசகசா, பாதி பட்டை, 1 கிராம்பு, தனியா தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
5 வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, மீதி பட்டை, கிராம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.


சாதத்திற்கும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் தக்காளி குருமா சகருக்கு செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. என் ஹஸ் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனிஷா,
நலமா? நோன்பெல்லாம் எப்படி போகுது? அன்பான நோன்பு வாழ்த்துக்கள்.
இந்த குருமா கறிக்குழம்பின் மணம், சுவையோடு இருக்கும். தங்கள் கணவருக்கும் பிடித்தது சந்தோஷமே. பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நீங்கள் நலமா உங்கள் குடும்பத்தினர் நலமா. நோம்பு நல்லா போயிட்ருக்கு. உங்க வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் புதிய வீடுகட்டி புதுமனை புகுவிழா நடத்தி இருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சியம்மா. எனக்கு உங்கள் அனுபவத்தை பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்.புது வீடுகட்டுதல் பற்றிய த்ரெட் ஓபன் பண்ணியுள்ளேன். நீங்கள் அதில் கூறினாள் மிகவும் உபயோகமாக இருக்கும். எனக்கு உதவுங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே கறிக்குழம்பு வாசனைதான் வந்தது. இதோ இன்னும் மிச்சம் வைத்து இருக்கின்றேன். நைட் சப்பாத்திக்கு. சுவை எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. மீண்டும் செய்வேன். நன்றி செல்விம்மா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனீஷா,
நானும், குடும்பத்தாரும் நலமே.
உன் கேள்விக்கு வீடு கட்டுவது பகுதியில் பதில் (பகுதி-1) கொடுக்க ஆரம்பித்து பாதியில் உள்ளது, பார்க்கலியா? எந்த சந்தேகத்தையும் கேள். பதில் சொல்கிறேன். என்னை விட நன்றாக தோழி. ஸாதிகா சொல்லி இருக்காங்க.
நானும் சொல்கிறேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்பான நோன்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கேட்டது உடனே பதில் கொடுத்தற்கு நன்றி செல்விம்மா
உங்களை மாதிரி பெரியவங்களோட ஆலோசனைக்காகத்தான் காத்திருக்கேன். இதோ பார்க்கிறேன் அம்மா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனீஷா,
நேற்று உட்காரக்கூட முடியாமல் கஷ்டப்பட்டு எவ்வளவு அடித்தேன். எதையும் காணோம்:-((
ஐயோ, அப்பவே நினைச்சேன். நல்ல விஷயம். காப்பி பண்ணி வைக்கலாம்னு. அவசரத்தில் விட்டுட்டேன்.
சரி, என் ஐடிக்கு மெயில் பண்ணு. அதில் முடிஞ்ச போது அடிச்சு அனுப்பறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நீங்க கஷ்டப்பட்டு அடித்ததெல்லாம் வீணா போச்சா. உங்க ஐடி என்ன தெரியாதும்மா எனக்கு. நீங்க சொல்லுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனீஷா,
கொஞ்சம் முக்கியமான விஷயங்கள் அடித்தேன். அவ்வளவும் போச்சு. என் ஐடி senreb@rediffmail.com
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி ஆன்டி எப்படி இருக்கீங்க?உங்க தக்காளி குருமா ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சூப்பர் தேங்ஸ் நாங்க சென்னை வந்தா ஒரு ரெஸ்டாரண்டில் புரொட்டா வெஜ் குருமா சாப்பிடுவோம் அந்த டேஸ்ட் அப்படியே இருக்கு திடீர்ன்னு ஒரு கெஸ்ட் நேத்து சப்பாத்தி இந்த குருமா மட்டும் தான் புதுசா ட்ரை பண்ணியிருக்கோமே நல்லா இருக்குமான்னு! புலம்பி இருந்தேன் வந்தவங்க ஒரு சொட்டுகூட இல்லாமல் காலி பண்ணிவிட்டாங்க;-) இதில ஒரு அட்வைஸ் வேற ஒரு ரெஸ்டாரெண்ட் இந்த ஏரியாவில் ஆரம்பியேன்னு சவுத் இந்தியன் ரெஸ்டரெண்ட்டுன்னு பேர் கூட சொன்னாங்க நானும் வேலைக்கு போகாமல் இத கன்சிடர் பண்ணலாம்முன்னு தோணுது இது எப்படி இருக்கு!!

ஹாய் ஸ்வேதா,
எப்படியிருக்கே? உங்களோட பாராட்டுக்கு நன்றி. ரெஸ்டாரெண்ட் ஆரம்பி, நான் இங்கேயிருந்தே எல்லா குறிப்பும், ஆலோசனையும் சொல்றேன் (எத்தன பர்செண்ட் கமிஷன்? :-) ) இதே குர்மாவை காய்கறிகளை சேர்த்து செய்தால், உங்க ஊர் ஹோட்டல சாப்பிட்ட சுவை கிடைக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ.ஸ்னேகிதி எப்படி இருகின்றீர்கள்?முதுகு வலி இப்பொழுது எப்படி உள்ளது.உங்களுக்கு பூரணநலம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன்.
இதே முறையில் நாங்களும் குர்மா செய்வோம்.பூண்டு போடாமல் மாசிப்பொடி சேர்த்து சமைப்போம்.சப்பாத்திக்கு ஏற்ற நல்ல சைட் டிஷ்.

arusuvai is a wonderful website

செல்வி மேம் உங்களோட தக்காளி குருமா காலையிலேயே செய்துட்டேன்.எண்ணையில்லா சப்பத்திக்கு.ரொம்ப நல்லா இருக்கு.தேங்க்ஸ் மேம்.

ஹாய் மோனி,
பாராட்டுக்கு நன்றி. சப்பாத்திக்கு இந்த குருமா ரொம்ப நன்றாகவேயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய்க்கா ந்லமா?வீட்டில் அனைவரும் நலமா?உங்க தக்காளி குருமா செய்தேன் நன்றாக வந்தது சுட சுட இருக்கு இவர் வந்ததும் பரிமாரனும் தேங்ஸ்க்கா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி,
யாரு இப்படி கூவி கூப்பிடறதுன்னு அவசரமா வந்தேன்.
பையனும், பெண்ணும் நலமா? ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்ட்ரால் பலகாரம் செயும் போது அந்த என்னைசட்டியில் கொஞசம் புளி போட்டால் எண்ண்யெ குடிக்காது என்கிறார்களே சரியா கொஞம் யாராவது சொல்லுகளேன்

vazhu vazha vidu

அன்பு சுதா,
உண்மை, எண்ணெய் நன்கு காய்ந்ததும், ஒருசிறு நெல்லிக்காயளவு புளியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து விட்டு, பிறகு பலகாரம் செய்தால் எண்ணெய் பொங்காது, எண்ணெய் குடிக்காது. அதுபோல வாழை இலை, கொய்யா இலை கூட போடலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.