சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேதி: December 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாதிகா அவர்களின் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

சேப்பங்கிழங்கு - 250 கிராம்
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும்.
சேப்பங்கிழங்கைச் சுத்தம் செய்து குழைந்துவிடாமல் வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காய்ம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய சேப்பங்கிழங்கைப் பிரட்டியெடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மசாலாவில் பிரட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக‌ பொரித்தெடுக்கவும்.
சுவையான‌ மொறுமொறுப்பான‌ சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ சமையல்ராணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

கிழங்கு ஸ்பெஷல் சமையல் அருமை!

அதுவும் இந்த‌ சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பார்க்கும்போதெ, சாப்பிடத்தூண்டுது! சூப்பர்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி அனு சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நீங்கதான் ஃபேஸ்புக்ல‌ முதல் வாழ்த்து தெரிவிச்சிருக்கீங்க‌ போல‌.மிக்க‌ மகிழ்ச்சி. உங்களில் ஒருத்தியாக‌ இணைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி. Sorry 4 the delay

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!