தேதி: December 29, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மாலதி அவர்களின் நண்டு கட்லெட் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மாலதி அவர்களுக்கு நன்றிகள்.
நண்டு - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட் தூள் - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

நண்டை வேக வைத்து உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் நண்டு சதை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியை சூடாக்கி அதில் இந்தக் கலவையைப் போட்டு வதக்கி, கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். வதக்கிய நண்டு கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.

தட்டி வைத்துள்ள நண்டு கலவையை, மைதா மாவு கரைசலில் நனைத்து, ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

பிறகு அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சூடான நண்டு கட்லெட் ரெடி. சில்லி சாஸுடன் பரிமாறவும்.

Comments
பாரதி
ஆஹா அருமை அருமை பாரதி.. நண்டு கட்லெட் சூப்பர் தூள்ங்க.. பார்க்கும் போதே செம்மமையா இருக்கு.. வாழ்த்துகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
பாரதி..
நண்டு கட்லெட் சூப்பர்ங்க. படங்கள் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவதி,சுமி
தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரேவதி.
மிக்க நன்றி சுமி. நீங்க வாழ்த்தியதில் மகிழ்ச்சி.
அன்புடன்
பாரதி வெங்கட்
பாரதி
பார்டா நண்டுல கட்லெட்டா கலக்குறாங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா
ரொம்ப நன்றி ஸ்வர்ணா. நீங்க கும்பகோணமா? நானும் கும்பகோணம் தான்.
அன்புடன்
பாரதி வெங்கட்
பாரதி
நண்டு கட்லெட் பார்க்கும் போதே சுவை அட்டகாசமா இருக்கும்னு தெரியுது.. என்னோட பேவரைட் ரெசிபி.. நண்டு வாங்கிய உடனே செய்து பார்க்கிறேன்.. நன்றி
"எல்லாம் நன்மைக்கே"
நண்டு கட்லட்
சூப்பரா தெரியுது இந்தக் குறிப்பு. ;P
- இமா க்றிஸ்