நன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....

தோழிகளே என்னை ஊங்களில் ஒருத்தியாக நினைத்து ஆலோசனை வழங்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி நன்றி..அறுசுவை க்கும் மிக்க நன்றி. பையன் பிறந்திருக்கிறான். .

செகண்ட் டெலிவரி ரொம்ப பயந்தேன் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் எல்லாருக்கும் நன்றி. .

இமாம்மா, வனிதா அக்கா, கல்யாணி அக்கா, நிஷாம்மா, aswathakarna, nikila, aashika, rajisenthil, ramya jai, sathyapriyaraj, Krishna mercy, ayshahajara, premaharibaskar, seethalakshmi, renukavijay, niroshini-141, kanagamuthu, kavisree, thaslim, aashima, ndivya08, dhivya mohankumar, m.subi

எல்லாருக்கும் நன்றிகள்..

குகன்
குணாளன்

akka marupadi theruncha solra,i am thiinking but sariya varala

மனசே சரியில்லை.என் கணவரோடு இருக்கனும்னு ரொம்ப ஆசை...எங்களுக்கு கல்யாணம் நடந்து 3 1/2 வருஷம் ஆச்சு.கணவரோடு மூன்று மாதம்தான் இருந்திருப்பேன்.பையனுக்கு உடம்பு சரியில்லை ன்னு அடிக்கடி அம்மா வீட்டுக்கு மாமியார் வீட்டுக்கு ன்னு இப்படி தான் எங்கள் வாழ்க்கை இருக்கு.நைட் சிப்ட் னா அம்மா வீட்டில் விட்டுடுவாங்க நான் பயப்படுவேன்னு.நாங்கள் இருக்கிற வீடு வாடகை வீடு வீட்டுக்கு போனாலே எப்படியும் 1வாரத்தில் ஏதாவது பண்ணிடும் அம்மா வீட்டுக்கு வந்துடுவேன்.அம்மா வீட்டுக்கு வந்தாலே என் பையன் சேட்டை தாங்க முடியலை. பத்து பேர் செய்யற சேட்டை யை இவன் ஒருத்தனே பண்றான்.இவன் அழுதால் அப்பாவுக்கு அவ்ளோ கோபம் வருது இதனால் சும்மாவே அம்மாக்கு, தம்பிக்கெல்லாம் தீட்டு விழுது ரொம்ப கஷ்டமா இருக்கும்.இனி அம்மா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு போனால் 8நாளில் இங்கேயே வந்துடுவேன். இதுதான் என் நிலைமை. நேற்று தம்பி ஒன்னுமே பண்ணலை அவன் தீட்டினான்னு அப்பாட்டா சொல்லி அழுது தம்பிய அப்பா அடிச்சிட்டாங்க.வேலைக்கு போகப்போறான் அவனை அடித்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு.நாங்க இருக்குர வீட்டுக்கு போனால் தான் கொஞ்சம் சரியாகும். அடுத்த வாரம் போலாமான்னு நினைக்கிறேன். என்ன பண்ணலாம்? யாரிடமும் மனசு விட்டு பேச யாருமில்லை அதன் உங்களிடம் பகிர்ந்துகலாம் என்று அனுப்புகிறேன். ...தயங்கியே அனுப்புகிறேன்

அன்பு தோழி. தேவி

akka one weekla poranu solringa ungala yaru pathukuvanga thambi papa pirathu 2 weeks thana achu,you can do all work ah?unga udambu kongam sari aana piragu polam illa,

periya thambi over kurumbu yeppadi akka samalippinga unga husband yenna sonnaga?mother-in-law help pannu vangala

// என்ன பண்ணலாம்?// :-) முதல்ல போஸ்ட் பண்ண முன்னால தட்டுறதை எடிட் பண்ணணும். முடி வேறு, மூடி வேறு; திட்டு வேறு, தீட்டு வேறு இல்லையா! :-)

இப்போ என்று இல்லை. சில காலம் முன்பாகவே உங்களிடம் சொல்ல நினைத்ததுதான் இது. ஆரம்பத்தில் தேவி எது கேட்டாலும், 'பாவம், பதில் சொல்ல வேண்டும்,' என்று தோன்றியிருக்கிறது. மெதுவே அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது. காரணம்... நீங்கள் சின்னச் சின்ன விடயங்களுகெல்லாம் உதவிக்கு அறுசுவையை நாடுகிறீர்கள். ஆனால் அதை விடப் பெரிய சந்தேகங்கள் இங்குள்ள மற்றவர்களுக்கு வரும் பொழுதெல்லாம் உங்களால் உதவ முடிந்திருக்கிறது.

மற்ற சகோதரிகளும், 'அனாவசியமாக யோசிக்க வேண்டாம்.' பலமுறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இங்கு யார் பதில் சொன்னாலும் அது உங்களுக்கு உதவப் போவதில்லை. ஒவ்வொரு பதிலுக்கும், 'ஆனால் இப்படி இருப்பதால் அது சரி வராது.' என்பது போல் மறுப்புக்கு ஒரு காரணமாவது சொல்லுவீர்கள். (தப்பாகச் சொல்லவில்லை. பிரச்சினை வரும் போது எல்லோருமே அப்படி ஒரு நிலையில்தான் இருப்போம்.) கேள்வி கேட்டவரிடமிருந்து அடிக்கடி இப்படி மறுப்புக் காரணம் சொல்லும் பதில்கள் கிடைத்தால்.... கேள்விக்குப் பதில் சொல்லும் ஆர்வம் மற்றவர்களுக்குக் குறைந்து போகும். 'இன்னொருவரால் எம் இடத்திலிருந்து' சரியான தீர்வு சொல்வது இயலவே இயலாது. தொட்டது பட்டதற்கெல்லாம் இங்கு சந்தேகம் கேட்க ஆரம்பித்தீர்களானால் உண்மையாகவே உங்களுக்கு உதவி தேவைப்படும் போது யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டாங்க. பதில் கிடைக்காமல் போகலாம்.

இந்த முறை 'அவசியமாகத்தான் யோசிக்கிறீர்கள்,' என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் //என்ன பண்ணலாம்?//
முதலில் உங்கள் கேள்வியைத் தட்டச்சு செய்யுங்கள். முடிந்ததா! அது தேவியிடமிருந்து அல்ல, யாரோ ஒரு தே..வ..கியிடமிருந்து வந்தது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் கேள்வி கேட்ட நிலையிலிருந்து முற்றாக வெளியே வந்துவிட வேண்டும். தேவையானால் பத்து நிமிடம் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். வேறு வேலை செய்து மனதை மாற்றுங்கள். 'தேவகி' அறுசுவையில் இதே கேள்வியைக் கேட்டிருந்து அதை 'அஸ்வத் தேவி சண்முகம்' பார்த்திருந்தால் என்ன பதில் சொல்லுவார்கள்! பதிலைத் தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள். முடிந்ததா! இப்போ உங்கள் கேள்விக்கு மற்றவர்கள் சொல்லக் கூடிய பதிலை விட மிகப் பொருத்தமான பதில் கிடைத்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

உங்களால் மட்டும்தான் உங்கள் இடத்திலிருந்து சிந்திக்க இயலும் தேவி. உங்களால் மட்டும்தான் உங்கள் நிலமைகளைச் சரியாக்க இயலும். இங்கு யார் என்ன யோசனை சொன்னாலும் செயற்படுத்துவது நீங்கள்தானே!

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொன்னதுபோல் நானே யோசித்து முடிவெடுக்கிறேன்.தமிழில் ரெண்டு இடத்தில் பிழை இருப்பது தெரிகிறது சாரிம்மா...மற்றவர்களுக்கு என்னால் சொல்ல முடிகிறது எனக்குன்னு வரும்போது யாரிடமாவது கேட்க தோன்றுகிறது இனி இது நடக்காதும்மா....இனி எதுவானாலும் நானே தீர்வு காண்கிறேன். ....

அன்பு தோழி. தேவி

amampa romba kurumpu.ippathan thunkinan innaiku pagalil kuda thungala.mother in law one day parpanga next day sandai poduvanga pesa maatanga murachute irupanga.ethavathu idea pannanumpa....en husband ta kettu mudivu pannanum...

அன்பு தோழி. தேவி

Manam thalarathinga ethuva irrunthalum oru mudivu irrukum neenga unga manathai potu kulapikathinga..unga husband kita paesunga rendu paerum seirthu mudivu panunga...akka mamiyar veetil irrupathu problem illai avinga mugam sulikama paiyana pathukitala entha problem um varathu anal mugam sulika arambithal veetil problem dhan varum...unga husband ungaluku support panaravingala irrunthal unga mamiyar idam konjam puriyum padi aduthu solla sollunga...kandipa nillamai marum...

husband kuda poi irukalamnu ninachen. mamiyar ta patta anupavam irukupa.athan poga manasu varala. avnga ponne kulanthai piranthu 1months la avnga vittuku poidanga thitranganu...amma ve un mamiyar ta poi one month iruka mudiathunu sollitanga..

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்