அரிசி அடை

தேதி: January 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு - அரை ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - அரை ஆழாக்கு
கொண்டைக்கடலை - அரை ஆழாக்கு
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு துண்டு
காய்ந்த மிளகாய் - 4


 

ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை நான்கையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் பருப்பு ஊறியதும் கழுவி மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு கொரகொரப்பான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே மிக்ஸியில் மிளகு, சீரகம், தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த மிளகு சீரகக் கலவைவை மாவில் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சற்று அடர்த்தியான தோசையாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான அரிசி அடை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிளா நல்லா இருக்கு

எல்லாம் சில‌ காலம்.....

ஆஹா அருமையான அடை அமர்க்களமா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்க‌ அரிசி அடை( கொண்டக்கடலை சேர்ப்பது) வித்தியாசமா இருக்குங்க‌! ஆரோக்கியமானதும் கூட‌!! சூப்பர்...

கொண்டகடலை சேர்த்து அடை கேள்விப்பட்டதே இல்லைங்க... சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிம்பிள் & ஹெல்த்தி அடை ரேவதி. நல்லாயிருக்கு :)

கொண்டகடலை சேர்ப்பது வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

அன்புடன்
பாரதி வெங்கட்