முட்டை வெங்காய மசாலா

தேதி: January 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் முட்டை வெங்காய மசாலா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

முட்டை - 6
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு இன்ச்
வெங்காயம் - 2
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு
நெய் (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பால் - ஒரு கப்
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை


 

மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பிறகு வெட்டி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து வெங்காய விழுது நிறம் மாறும் வரை வதக்கவும்.
முட்டை, வெங்காயக் கலவையில் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கலவை கொதித்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் பொழுது, கொத்தமல்லித் தழை மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடவும்.
பரோட்டா, சப்பாத்தியுடன் பக்க உணவாக இந்த மசாலா சுவை சேர்க்கும். பால் சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவை தரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்.செய்முறையும் ஈசியா இருக்கு. வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

முட்டை வெங்காய‌ மசாலா, வித்தியாசமாகவும் இருக்கு! அருமையாகவும் இருக்கு! சூப்பர்.

குறிப்பின் உரிமையாளர் வனிக்கும், குறிப்பினை செய்து காட்டி அசத்திய‌ கிச்சன் குயினுக்கும் வாழ்த்துக்கள்....

சுமி தான்க்யூ

அனு டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். தான்க்யூ.

Be simple be sample