காய்கறி குருமா

தேதி: March 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கேரட் - ஒன்று
பீன்ஸ் - 2
உருளைக்கிழங்கு - பாதி
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சாம்பார் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
பட்டை - 2
லவங்கம் - 4
சோம்பு - சிறிது
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

கேரட், உருளை, பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
மிக்ஸியில் தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை, புதினா, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், சாம்பார் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான காய்கறி குருமா தயார். விரும்பினால் இஞ்சி, பூண்டு கலவை சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கும் குறிப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்..