கேரட் லெமன் ரைஸ்

தேதி: March 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

வனிதா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.

 

உதிரியாக வடித்த சாதம் - ஒரு பெளல்
எலுமிச்சை - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கேரட் - ஒன்று (பெரியது)
தாளிக்க : கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது


 

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அதில் கால் கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும், கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் துருவிய கேரட் சேர்த்து பிரட்டி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கேரட் துருவலுடன் எலுமிச்சை கலவை மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும்.
மஞ்சள் தூள் வாசம் போனதும் எடுத்து சாதத்தில் சேர்த்து கலந்து விடவும்.
அரை மணி நேரம் சாதம் ஊறிய பின்னர் பரிமாறவும். சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.

இந்த சாதம் கலர்ஃபுல்லாகவும் சத்தானதாகவும், லன்ச் பாக்ஸிற்கு கொடுத்து விட உகந்தது.

விரும்பினால் வேர்கடலை, முந்திரி போன்றவை கூட தாளிக்கும் போது வறுத்து சேர்க்கலாம். மீதமான சாதத்தில் கூட செய்து உடனே கொடுக்க இயலும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nice presentation tharsa :) en recipe thervu seydhu, seydhu padameduthu anupiuadhu migundha magizchi. Nanri :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசியா எதும் செய்யலாம் என்று தேடின போது இந்த ரெசிபியை எடுத்தேன்.செய்யும் போது படமும் எடுத்து அனுப்பினேன்.டேஸ்ட் பிடிச்சு இருக்கு.அடிக்கடி செய்வேன்.ரொம்ப நன்றி