இளநீர் சோடா

தேதி: May 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பின்னு அருண் அவர்கள் வழங்கியுள்ள இளநீர் சோடா என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பின்னு அருண் அவர்களுக்கு நன்றிகள்.

 

இளநீர் - ஒன்று ( வழுக்கையுள்ள இளநீர் பெரியது )
சோடா - 300 மில்லி
சீனி - 3 மேசைக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - 2 கப்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
இளநீரையும், அதன் வழுக்கை பாகத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வழுக்கைபாகம், சீனி, ஐஸ்கட்டிகள் மூன்றையும் போட்டு இரண்டு நிமிடம் வரை நன்றாக சுற்ற விடவும்.
பின்னர் இளநீரை அதில் ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் சுற்ற விடவும்.
மிக்ஸியில் இருந்து பாத்திரத்திரத்திற்கு மாற்றி அதனுடன் சோடாவை ஊற்றி மெதுவாக கலக்கவும். உடனே பரிமாறவும்.
வெயிலிற்கு இதமான இளநீர் சோடா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் முதலில் கிச்சன் குயின், யாரும் சமைக்கலாம் பகுதிக்கு வந்த நிகிலாக்கு வாழ்த்துக்கள். சூப்பரா இருக்கு இளநீர் சோடா. மேலும் பல குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள்

Be simple be sample

வாங்க‌ வாங்க‌... குறிப்புகள் பக்கம் இப்ப‌ தான் எட்டி பார்க்கறீங்க‌ ;) மனதுக்கு மிகுந்த‌ மகிழ்ச்சி நிகிலா. இன்னும் பல‌ 100 குறிப்புகள், ஆரோக்கியமான‌ குறிப்புகளா கொடுத்து அசத்தனும்னு அன்போடு கேட்டுக்கறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான‌ குறிப்பு தேர்வு செய்து அதை இன்னும் அழகா செய்து காட்டி இருக்கீங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கு நன்றி பா.:))
சிஸ்டம் இன்னிக்கு தான் சரியாச்சு. மொபைல் ல‌ தான் பார்த்தேன்.
தமிங்கிலீஷ் பதிவு போட‌ இஷ்டம் இல்லை. சோ லேட் ஆச்சு பா.

நீங்க‌ சொன்னதால‌ தான் அனுப்பினேன் வனி
மொத்தமா பார்த்ததும் ஹேப்பி ஆயிட்டேன். ஆனா, பெரியதிரையில் பார்க்க‌ முடியலை. சின்னதிரையில்(மொபைல்) தான் பார்த்தேன்.
செய்து பார்த்து படம் எடுத்ததால் இந்தக் குறிப்புகள் எல்லாம் மறக்காமல் இருக்கும்.
முடிந்தவரை மேலும் குறிப்புகள் கொடுக்க‌ முயற்சிக்கிறேன். 100 ரொம்ப‌ கஷ்டம்....உங்களைப் போல‌ வருமா??/
உங்களது ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தோழி:))

தான்க் யூ பாலா:))