உருளை பசலைப் பொரியல்

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசலைக்கீரை - 200 கிராம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கீரைகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும்.
தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை சிறிது தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப அருமையா வந்தது.. இங்க பசலை கீரை கிடைக்கலை.. பருப்பு கீரை வைத்து செய்தேன் நல்ல ருசியாக இருந்தது
உங்கள் குறிப்பிற்க்கு நன்றி

"தேடலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கை! "

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..