பால் போளி

தேதி: September 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 200 கிராம்
ரவை - 100 கிராம்
டால்டா - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 லிட்டர்
நெய் - 1/2 கப்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
உப்பு - சுவைக்கு


 

டால்டாவை உருக்கி உப்பு, சிறிது பால் சேர்த்து கலந்து மைதாவைச் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
பாலை வற்ற காய்ச்சி சர்க்கரை சேர்த்து குங்குமப்பூவும் சேர்க்கவும்.
முந்திரியை அரைத்து பாலில் கலக்கவும்.
மைதாவை சிறு உருண்டைகளாக செய்து நெய்யில் பொரிக்கவும்.
பொரித்த போளிகளை ஆறவிட்டு பாலில் ஊற வைக்கவும்.
இத்துடன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
குங்குமப்பூ சேர்க்காமல் ஏலமும் சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இலா,இதோ நீங்கள் கேட்ட பால் போளி.வாக்கு கொடுத்தபடி மறக்காமல் பார்சலில் அனுப்பி வைக்கின்றீர்களா?என் மகள் குழந்தை உண்டாகி இருக்கும் பொழுது ஒரு தோழி இதை செய்து எடுத்து வந்தார்.இன்று வெளியில் சென்று இருந்த பொழுது தற்செயலாக அவரை சந்தித்து மறக்காமல் ரெஸிப்பியை கேட்டு வந்த உடனேயே பதிவு போட்டுவிட்டேன்.செய்து பார்த்து விட்டு பீட் பேக் அனுப்புங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கேட்டதும் கிடைக்குது.. இது இன்னும் ஒரு வாரம் போகட்டும்.... செய்துவிடறேன்.. இதுக்கு முன்னாடி ஒரு 3 ஐட்டம் செய்யணும்...படிக்கவே எனக்கு சாப்பிடனும் போல இருக்கு... ரொம்ப நன்றி ஆன்டி!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா அடுத்த வாரம் உங்க வீட்டிற்கு பால் போளி சாப்பிடவரேனே (சும்மா)

அப்படியே முந்திரி பக்கோடாவும் செய்துடுறேன்... யாராவது வந்தாலோ இல்லைன்ன விசேஷம்னா செய்தா நம்ம கொலஸ்ரால் காப் ( நானே) ஒன்னும் சொல்ல மாட்டாங்க...வர்ரென்ன் சொல்லுங்க... இன்னைகே செய்றேன்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானே டயட்ல்ல இருக்கேன்(இப்படிதான் சொல்றேன்) எங்க ஸ்வீட் கிடைத்தாலும் அங்கே குடியும் குடித்தனமா தங்கிவிடுவேன்

இலா,ஸ்வேதா,பின்னூட்டங்களுக்கு நன்றி.ஸ்வீட்டை பார்த்ததும்,குடியும் குடித்தனமுமாக இருந்து விடுவேன் என்ற வரிகளை படித்ததும் சிரிப்பு வந்தது ஸ்வேதா.எனக்கு இனிப்பு என்றால் பிடிக்காது.டீ,காபி கூட சர்க்கரை இல்லாமல் சாப்பிட்டு விடுவேன்.டயாபெடிக் என நினைத்து விடாதீர்கள்.ஸ்வீட்டுக்கு விரோதி என்றும் நினைத்து விடாதீர்கள் .அவ்வளவாக விரும்பி உண்பதில்லை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஷாதிகா ஆண்டி எப்படி இருக்கீங்க? எனக்கு ஸ்வீட் ரெம்ப பிடிக்கும் நான் பால் coffee 4 ஸ்பூன் sugar போட்டு குடிப்பேன் தினமும் ஸ்வீட் இல்லாமல் இருக்கமாட்டேன் இப்பதான் டயட்டுன்னு குறைத்து கொண்டு வருகிறேன்(எல்லோர் கிட்டயும் இப்படி தான் சொல்கிறேன்! ): உங்களுக்கு தெரிந்த ஸ்வீட் ஐட்டம் ரெசிப்பி எழுதுங்க ட்ரை பண்ணூகிறேன் நன்றி

எப்படி இருக்கீங்க? உங்களுடன் பேசி ரொம்ப நாள் ஆயிடிச்சி. நானும் உங்களை மாதிரிதான் ஸ்வீட் அவ்ளோவா பிடிக்காது. காரம் என்றால் ஓக்கே. ஆனாலும் உங்க பால்போளி பார்த்ததும் இஃப்தார்க்கு செய்யலாமா என்று தோஷணிச்சு. மாவு பிசைந்து வைத்து விட்டேன். ஸ்வேதா ரொம்ப ஓவர் ஸ்வீட் சாப்பிடாதீங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஸ்வேதா,உங்கள் ஸ்வீட் ஆசையை நினைத்தாலே இன்னும் சிரிப்பாக உள்ளது.இனிப்பு அதிகம் சாப்பிட்டு இனிப்பாய் வாழ்க.இனி ஸ்வீட் ரெஸிபி அனுப்பும் பொழுதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் வரும்.விரைவில் படத்துடன் கூடிய கேரமல் கேக்,பாதாம் அல்வா குறிப்புகள் வ்ரும்.பாருங்கள்.செய்யுங்கள்,சுவையுங்கள்,பின்னூட்டமும் அனுப்பிவையுங்கள்.
தனிஷா,எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கின்றேன்..ரமலான் காலங்களில் பால் போளி அவ்வளவாக பொருத்தமாக இருக்குமா என்று தெரிய வில்லை.பாயசத்திற்கு பதில் செய்து சாப்பிடுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஆன்டி எப்படி இருக்கீங்க? உங்க பால் போளி செய்தேன் ரெம்ப நல்லா இருந்தது தேங்ஸ் ஆன்டி இலாவுக்காக வெயிட் பண்ணி!!! நானே குக் பண்ணிவிட்டேன்

நான் எப்பவுமே இப்படித்தான் யாரையாவது ரொம்ப மோட்டிவேட் பண்ணுவேன் அப்புறம் அந்த விஷயத்தை நான் செய்ய மாட்டேன்... எது எப்படியோ சரி!!! என் புண்ணியத்தில் ஒரு கை அகலம் எடை கூடினாலும் நன்றே. அய்யோ!!! அடிக்க வராதீங்க!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ இனிப்பு அரசி ஸ்வேதா,எப்படி இருக்கின்றீர்கள்?நலமா?பால்போளி செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.அதை நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.இப்பொழுதான் ரம்ஜான் முடிந்துள்ளது.இனி தான் செய்து பார்க்கவெண்டும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகாக்கா உங்க பால் போளி செய்தேன் சூப்பர்.இதுல நீங்க ரவை எப்ப சேர்க்கனும்னு போடல.நான் மைதாவோட ரவையும் சேர்த்தே பிசைந்து பொரித்தேன்.உங்க காலிபிளவர் மஞ்சூரியன் இன்னும் என்னால் செய்யமுடியல.நிச்சயம் செய்து பார்த்து சொல்றேனக்கா.

மேனகா,பால்போளி செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி.மைதாவுடன் ரவையை சேர்த்தே பிசைந்து செய்ய வேண்டும்.தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.திருத்தி விட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இப்போ இது என்னுடைய பேவரிட் ஆகிவிட்டது.சூப்பர் சாதிகாக்கா.நன்றி!!

அன்பு தங்கை மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி.சூப்பர் ஸாதிகாக்கா எல்லாம் இல்லை நான்.சாதாதான்..:-)
ஸாதிகா

arusuvai is a wonderful website