பிரசவத்துக்குப் பின்னான‌ பத்தியம்

எனக்கு இப்போது 37 weeks. பிரசவத்துக்கு பின்னான‌ பத்திய‌ முறை பற்றி யாராவது கூற முடியுமா? யாழ்ப்பாண‌ முறைதான் எனக்கு தேவை. day by day chart எனில் எல்லோருக்கும் உதவும் என‌ நினைக்கிறேன்.இமா அம்மா, சுரேஜினி அல்லது யாராவது தோழிகள் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். Thanks in advance.

//யாழ்ப்பாண‌ முறைதான் எனக்கு தேவை.// இமாவுக்கு திருகோணமலை முறையே தெரியாது. :-)

உங்கட பேர்... கஜானியா, கஜனியா? எப்பிடிக் கூப்பிடவேணும்?

எப்போழுதும் போல சாப்பிடுவதைத் தான் பரிந்துரைப்பேன் நான்.

பத்தியச் சாப்பாடு தான் வேணும் என்கிறது இல்லை. உடல் தானாகக் குணமாகும். கனடால இருக்கிற மற்ற இனப் பெண்கள் பத்தியச் சாப்பாடு இல்லாமல் தானே நல்லா இருக்கினம்! அங்க நிச்சயம் உங்களுக்கு நல்ல ட்ரீட்மண்ட் கிடைக்கும். தேவை என்றால் ஹொஸ்பிட்டல்லயே அன்டிபயோடிக் தருவாங்க. இதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.

சத்தான உணவு, புரதம் நிறந்த உணவு சாப்பிடுங்க. 'தண்ணீர் குடிக்கக் கூடாது.' என்று யாராவது சொன்னால் காதில் போட வேண்டாம். பால் சுரப்பு குறையலாம். சரக்குக் கறி - வயிற்றோட்டம் பிடித்தால் கஷ்டம் உங்களுக்குத்தான். நீரிழப்பு பால் சுரக்கிறதைக் குறைக்கும்.

நீங்க யாழ்ப்பாணத்தில இருந்தால் பத்தியச் சாப்பாடு சாப்பிடலாம். கனடால... தனிய இருக்கிறீங்கள் என்று நினைக்கிறன். அங்க உங்களைப் பார்க்கிற டொக்டரோ நேஸோ சொல்லுற மாதிரி நடக்கிறது தான் புத்திசாலித்தனம்.

சுரேஜினி கனடா தான். நேரம் கிடைக்கேக்க வந்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லுவா, பொறுங்கோ.

‍- இமா க்றிஸ்

thanks imma amma. எனது பெயர் கஜனி.

பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும் .கொஞ்ச நாளா என் முகத்தை கண்ணாடியில் பாக்கவே நேரம் கிடைக்கவில்லை .உங்களுக்கு இப்போ 38 வாரம் ஆகி இருக்கும் ஆபத்துக்களை கடந்த மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த பத்திய உணவை ஒரு இரண்டு தடவை சாப்பிட்டு பாருங்கள் . இங்குள்ள தமிழ் கடைகளில் பத்திய தூள் என்று விக்கும் .நீங்கள் செய்வதாக இருந்தால் யாழ்ப்பண முறை. 1 மேசை கரண்டி மல்லி அரை மேசைகரண்டி நச்சீரகம் உள்ளி ஒரு பல்லு இஞ்சி ஒரு மிக சிறிய துண்டு நெருப்பில் வாட்டிய தேங்காய் சொட்டு ஒரு துண்டு மிளகு 3 மஞ்சள் ஒரு டீஸ்பூன் இவளவத்தையும் நல்லா அரைச்சுட்டு சைவமாயின் முருங்கை காய் அசைவமாயின் மீன் அல்லது சின்ன கோழி சேர்த்து குழம்பு வைத்து குத்தரிசியுடன் சாப்பிட வேணும். எங்கள் ஊரில் உள்ள வெதர் க்கு ஒத்து வரும்போல . இங்கு பலருக்கு ஒத்து வருவதில்லை . திருமணமாகி வந்த ஒரு வருடத்திற்கு உட்பட்டவர்கள் ஒத்து வருவதாக சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் .நான் பத்தியத்தில் அக்கறை எடுக்கவில்லை . எனக்கு பாசல் பாசலாக வந்தும் ஒத்து வரவும் இல்லை .மேஜர் ஆகமுன்னே ஜப்னா வை விட்டு வெளியேறியதால் எனக்கு இங்குள்ள உணவு முறைகள்போல் இல்லாமல் எங்கள் ஊர் உணவுகள் பல குழப்பம் செய்கிறது .அதைவிட என்னை பாத்த டாக்டர் வேற சொல்லி விட்டுட்டார் உங்கட நாட்டில சாப்பிடுற மாதிரி இங்க சாப்புடுறது குழந்தைக்கும் உங்களுக்கும் சிரமம் குடுக்கும் கவனம் எண்டு . நான் அதிகம் சாப்பிட்டது சூப் ,சாலட் ம் பாணும் தான்.அதுதான் எனக்கு செய்து சாப்பிட ஈஸியா இருந்தது .குழந்தைக்கு எந்த வயிற்று உபாதைகளும் இருக்கவில்லை . நிறைய தண்ணி குடித்தேன் . இங்குள்ள மில்க் பங்க் ற்கு பதிவு செய்து சிக் கிட்ஸ் க்கு டொனேட் பண்ணுமளவு தாய்ப்பால் மேலதிகமாக இருந்தது.சோ உங்களுக்கு உங்கள் கெல்த் ம் குழந்தையின் ஹெல்த்ம் தான் முக்கியம் . ஒத்து வராத சாப்பாடு உடம்பை கெடுத்து நிலைமையை சிக்கலாக்கும் . ஜோசித்து செய்யுங்கள் . வேற ஏதாவது டவுட் இருந்தாலும் இதே தலைப்புக்கு கீழே கேளுங்கோ .மிக ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து நீங்களும் ஆரோக்கியமாக இருந்து வளர்தெடுக்க வாழ்துக்கள் .

பத்தியம் என்று சிலர் குழந்தை பெற்ற பெண்களை பழைய முறைப்படி அல்ககோல் கொஞ்சம் எடுக்க சொல்லி வற்புறுத்துவார்கள் . அப்ப .டி எடுப்பது தவறு . எந்த நிலையிலும் அல்ககோல் எடுப்பது கேடு அதுவும் பெண்களின் உடலிற்கு மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் .பழைய காலங்களில் pain கில்லர் இருக்கவில்லையாம் .அதனால் தற்காலிக வலி நிவாரணியாக மதுவை எடுத்தார்களாம் . விஞ்ஜான முறைப்படி இது எந்த வகையிலும் காயத்தை ஆற்றாது .அத்தோடு ஹஸ்பிட்டலில் சில வலி நிவாரணி மாத்திரைகளும் அன்டிபயோடிக் மாத்திரைகளும் தருவார்கள் .அதையும் எடுத்துக்கொண்டு மதுவும் எடுத்தால் உயிருக்கே ஆபத்து என்பது பலருக்கு தெரியாது .நீங்கள் யாழ்ப்பாண முறைப்படி பின்பற்ற நினைப்பதால் சொல்லி வைத்தேன் .

:-) பிள்ளை பிறக்க 6 மாசம் முன்பே சரக்கு ஊறல் போட்டு வாழை மரத்துக்குக் கீழ புதைத்து வைக்கிறவங்கள் சிலர். பீரிய்ட்ஸ் வாற நேரம் ப்ரெண்டி குடிச்சால் நல்லம் எண்டுறதும் கேள்விப்பட்டு இருக்கிறன். பெய்ன் கிலர் என்கிறது காலப் போக்கில் போய்... மொட்டையாக அது நல்லம்; கட்டாயம் குடுக்க வேணும் என்று ஆகிப் போச்சுது போல. :-) இதையும் எடுத்துக் கொண்டு ஹொஸ்பிட்டல்ல தாறதையும் போட்டுக் குழப்புறதாலதான் பிள்ளை பிறந்த பிறகு மாசக் கணக்கில ஒழுங்கா எழும்பி நடக்க ஏலாமல் இருக்கிறவையோ என்று நினைச்சிருக்கிறன். இதோடதான் பாலும் குடுக்கிறது. ;((

இந்த வேலைகளுக்கெல்லாம் நான் எதிரி. :-) ஆனால்... ஒரு தரம் நான் யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் சரக்குக்கறி வேற வழி இல்லாமல் சாப்பிட்டுருக்கிறன். :-) அப்ப திருகோணமலையில கைனகோலஜிஸ்ட் இருக்கேல்ல என்று சேஜரிக்காக யாழ்ப்பாணத்தில் வந்து தெரிஞ்ச ஒரு வீட்டில தங்கி இருந்ததால, ஹொஸ்பிட்டலுக்கு அவங்கள் அனுப்பின சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டி இருந்தது. அவங்கள் நல்ல நோக்கத்தில செய்த காரியம் அது. நான் குறை சொல்லப்படாது. எனக்கு நல்ல வயிற்றோட்டம். கஷ்டமா இருக்கு என்று வோட் ரௌண்ட் வரேக்க டொக்டர்ட்ட சொல்ல கேட்ட முதல் கேள்வி, 'என்ன சரக்குச் சாப்பாடு சாப்பிடுறீங்களோ! படிச்சவையே இப்பிடி செய்றீங்களே!' எண்டு எல்லாருக்கும் கேட்க ஏச்சு. வெக்கமாப் போச்சுது. ;(( இது 27 வருஷத்துக்கு முதல் ஜஃப்னா டீச்சிங் ஹொஸ்ப்பிட்டல்ல கிடைச்ச அனுபவம்.

எதைச் செய்தாலும் நல்லா யோசிச்சுச் செய்யுங்கோ கஜனி.

‍- இமா க்றிஸ்

Thanks so much Imma amma & Surejini.
நான் நிச்சயம் alcohol எடுக்க‌ மாட்டேன். Again thanks for your advice.
நான் இடையிடையே மிளகாய்த் தூளுக்கு பதில் சரக்குத் தூள் போட்டு சமைப்பதுண்டு. அது எனக்கு ஒத்துவருகிறது. என்னுடைய‌ முக்கிய‌ குழப்பம் யாதெனில் குழந்தை கிடைத்த‌ முதல் நாள் என்ன‌ சாப்பிடலாம் 2ம் நாள் என்ன‌ சாப்பிடலாம் என்பது தான். a day by day chart மாதிரி இருந்தால் நல்லது என்று நினைத்தேன்.

இப்பொழுது இறுதி முடிவாக‌ hospital இல் இருக்கும் வரை அவர்களின் உணவைச் சாப்பிடுவது என்றும் வீட்டுக்கு வந்த‌ பிறகு காரம் குறைவான‌ கறிகள் உடன் கொஞ்சம் சரக்குத் தூளையும் சேர்ப்பது என்றும் முடிவெடுத்துள்ளேன். உங்கள் அறிவுரைகள் மனத்துக்கு தெம்பு அளிப்பவையாக‌ உள்ளன‌. மிக்க‌ நன்றி.

எனக்கு மணமாகி 7 வருடங்கள். இது 3ஆவது கர்ப்பம். முதல் இரண்டும் tube இலே வளர்ந்து surgery இலே முடிந்தன‌. இந்த‌ முறை வெற்றிகரமாக‌ 38 weeks complete பண்ணியுள்ளேன். மிகுதியும் நல்ல‌படி முடிய‌ பிரார்த்திப்பீர்களா தோழிகளே?

Enakum 50th day scan panathula karu tube la irunthalum irukalam uterus la pathiyalanu sonaga. Apuram engala 20 days dailium contact la iruka sonaga.. 52th day lesa lesa bleeding irunthuchu 2 days. Inaiku 54th day. Contact iruntha andha karu athu vave veliya vanthurumapa. Tablet ethuvum kudukala. Pls share ur feel pa.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

Gajany ethanavathu daysla surgery panega. Kandipa i wil pray for u. Eana ungaloda kastatha nanum anupavachuruken.. My best wishes for ur cute raja or cute rani.. Thairiyama irunga.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

//மிளகாய்த் தூளுக்கு பதில் சரக்குத் தூள்// உண்மையைச் சொன்னால்... மிளகாய்த் தூளோடு ஒப்பிடும் போது, சீரகம், மல்லி காரமில்லை.

//அது எனக்கு ஒத்துவருகிறது.// நிச்சயம் ஒத்து வரும். :-) நீங்கள் சாப்பிட்ட போது அதை தனியச் சாப்பிடேல்ல. மற்ற உணவுகளோடு சேர்ந்து உள்ளே அனுப்பினனீங்கள். பத்தியச் சாப்பாடு... அந்த ஒரு கறியும் சோறும் மடும்தான் கொடுக்கிறவங்கள். அதிலயும் சரக்குத் தூள் அளவு கூடுதலா இருக்கும். சமப்படுத்த மீதிச் சாப்பாடு போதுமாக இருக்கிறேல்ல. சோறு மட்டும்தான் சாப்பிடக் கிடைக்கும். ஒரு கறிதானே என்றும் நல்லது என்றும் சரக்குக் கறியை நிறையச் சாப்பிட வைப்பினம். அங்கதான் பிரச்சினை வாறது. உண்மைல அதைத் தனியாச் சாப்பிட்டால் பாலூட்டவும் ரிப்பெயாருக்கும் எங்க இருந்து சத்துக் கிடைக்கும்!

எனக்கும் பத்தியச் சாப்பாடு என்று இல்லாமல் சரக்குக் கூட்டு விருப்பம். மாமி காரல் மீன் வாங்கி வைப்பா. மற்ற ஆக்கள் மீனைச் சாப்பிட நான் மச்சம் விருப்பமில்லை என்று கூட்டை மட்டும் ரசிக்கிறது. :-)

//என்னுடைய‌ முக்கிய‌ குழப்பம் யாதெனில் குழந்தை கிடைத்த‌ முதல் நாள் என்ன‌ சாப்பிடலாம்// கனடால... ஹொஸ்பிட்டல்ல சாப்பாடு தருவினம். அது சுப்பரா இருக்கும். //a day by day chart// தேவையில்லை. ஆரம்பத்தில அங்க தாற சாப்பாட்டைச் சாப்பிடுங்கோ. அது பலன்ஸ்ட்டா இருக்கும். பிறகு அவைட்டயே கேட்டால் என்ன சாப்பிடுறது நல்லது என்று சொல்லுவினம். பொதுவாக பிள்ளைப் பேறுக்காக விசேஷமான சாப்பாடு எதுவும் தேவையில்லை. எப்பவும் போல, பலவிதமான சத்துக்களும் கிடைக்கிற மாதிரி ஆரோக்கியமான சாப்பாடு, சாப்பிட்டால் போதும். புரதம் அவசியம். அது திசுக்களைப் புதுப்பிக்கிற வேலைக்கும் பால் சுரப்புக்கும் உதவும். எங்கட காலத்தில கல்சியம் எடுக்கிறனாங்கள். இப்பவும் கல்சியம், அயன் சப்ளிமண்ட்ஸ் எண்டு எடுக்க இருக்கும். அது எல்லாம் ஹெல்த் சிஸ்டமே பார்த்துக் கொள்ளும். நீங்கள் யோசிக்க வேண்டி இராது. உங்களுக்கு அங்க தானாகவே தேவையான உதவி, அட்வைஸ் எல்லாம் கிடைக்கும்.

//இறுதி முடிவாக‌ hospital இல் இருக்கும் வரை அவர்களின் உணவைச் சாப்பிடுவது என்றும் வீட்டுக்கு வந்த‌ பிறகு காரம் குறைவான‌ கறிகள் உடன் கொஞ்சம் சரக்குத் தூளையும் சேர்ப்பது என்றும் முடிவெடுத்துள்ளேன்.// நல்லது.

யோசிக்காமல் சந்தோஷமா இருங்கோ.
இப்ப வீட்டில எப்பிடிப் பொழுது போகுது? ஃப்ரீயா இருக்கேக்க என்ன செய்றீங்கள்?
~~~~
//மிகுதியும் நல்ல‌படி முடிய‌ பிரார்த்திப்பீர்களா தோழிகளே?// உங்களுக்காகாவும் உங்கள் குழந்தைக்காகவும் நிச்சயம் என் பிரார்த்தனைகள் இருக்கும். 34 வாரம்... இனிமேல் யோசிக்க எதுவும் இல்லை. எல்லாம் நல்லபடி நடக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்