பிசிபேளாபாத்

தேதி: November 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (18 votes)

 

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
காய் கலவை - ஒரு பெரிய கப் (கத்திரிக்காய் - 2, பீன்ஸ் - 10, முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று)
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - ஒன்று (சிறியது)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
வறுத்து பொடிக்க :
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டிக்கும் குறைவு
மிளகாய் வற்றல் - 6
கறிவேப்பிலை - சிறிது (விரும்பினால்)
பட்டை, லவங்கம் - சிறிது
தனியா (மல்லி விதை) - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உளுந்து, கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது


 

முதலில் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியையும், பருப்பையும் களைந்து 3 கப் நீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்து எடுக்கவும்.
பிறகு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதன் பிறகு தனியா (மல்லி விதை), உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வறுக்கவும்.
அதன் பிறகு மீதமுள்ள பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து கடைசியாக கறிவேப்பிலையை வறுத்து எடுத்து அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாகவோ அல்லது விழுதாகவோ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை பிரட்டிவிட்டு காய் கலவையைச் சேர்க்கவும். (முருங்கைக்காயை இப்போது சேர்க்க வேண்டாம்).
காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு துருவிய வெல்லம், புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
கொதி வந்ததும் வேக வைத்து எடுத்த அரிசி, பருப்பு மற்றும் பொடித்த மசாலா தூள் சேர்க்கவும்.
அதனுடன் மேலும் 3 - 4 கப் நீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி 10 - 15 நிமிடங்கள் வரை மிதமான தீயிலோ அல்லது சிறு தீயிலோ வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும். (விரும்பினால் கடைசியாக ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு இறக்கவும்).
சுவையான கர்நாடகா ஸ்பெஷல் பிசிபேளாபாத் தயார். சூடான பிசிபேளாபாத்துடன் அப்பளம் சேர்த்து பரிமாறலாம்.

சாதம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம். அல்லது புளி சேர்த்து ஒரு கொதி வந்தபின் தேவையான நீர் விட்டு காய் கலவையோடு சேர்த்தும் வேக வைக்கலாம். இன்னும் சுவை கூடும். தாளிக்கும் போதும் நெய், எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். நேரம் ஆக ஆக சாதம் கெட்டியாக ஆரம்பிக்கும். அதனால் சூடாகப் பரிமாறுவதே சிறந்தது. முருங்கைக்காயை எப்போதும் கடைசியில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் கசந்து போகும். குக்கரில் அனைத்தையும் சேர்த்து விசில் வைக்காமல் சிறு தீயில் நீண்ட நேரம் வைப்பதே சுவையைக் கூட்டும்.

இதன் பதம் சற்று நீர்க்கவே இருக்க வேண்டும், சாதமும் நன்றாக குழைந்து வரவேண்டும். சிலர் அரிசியையும் பருப்பையும் சமஅளவாக சேர்ப்பார்கள். பிசிபேளாபாத் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வறுத்தால் போதும், எண்ணெய் இல்லாமலும் வறுக்கலாம். முதலில் தாளிக்காமல் காய் கலவையை மட்டும் வதக்கி, அரிசி பருப்பு சேர்த்து வேக வைத்த பிறகு கடைசியாக நெய் எண்ணெய் கலவையில் தாளித்தும் சேர்க்கலாம். தேங்காய் துருவலை வறுக்காமல் வறுத்த மற்ற பொருட்களோடு கடைசியாக சேர்த்தும் அரைக்கலாம். கர்நாடகாவில் இது போல சிறு சிறு வேறுபாட்டுடன் பல விதமான பிசிபேளாபாத் முறைகள் உண்டு. எனக்கு பிடித்த முறையை கொடுத்திருக்கிறேன். புழுங்கல் அரிசிக்கு பதிலாக ப்ரவுன் ரைஸும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்ர்ர்.... அம்மா பிசிபேளாபாத் செய்ய சொல்லிட்டே இருந்தாங்க.,செய்துடுறேன்:-)

அருமையான குறிப்பு, எனக்கு ரொம்ப பிடித்த ரைஸ்.சீக்கிரமே டிரை செய்துட்டு சொல்றேன்,வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அக்கா அந்த பௌல் ஃபுல் ரைஸ்
எனக்கு தான் இனியும் யாராது பங்குகு வரடும் :-) சோ கலர்ஃபுல் அண்ட் சூப்பர் டிஷ் அக்கா :-) அம்மா நலம் சின்ன குட்டிக்கு உடம்பு இப்போ பரவாலயா?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பிஸிபேளாபாத் சூப்பர் வனி. இப்ப கனிக்கு குடுத்துட்டு அடுத்து செய்றப்போ எனக்கு குடுத்துடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி பாத்திரம் அழகா இருக்கு :)
பிஸிபேளாபாத்தும் சூப்பரா இருக்கு :)வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

விவி பிசிபேளாபாத் விருப்பப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்.நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

idhuvum kadandhu pogum.

வனி பிசிபேளாபாத் பார்த்ததும் சாப்பிட தூண்டுது எனக்கு ரொம்ப பிடிக்கும்
அருமைப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜெட் ஸ்பீடுல எல்லா குறிப்பும் வந்துருது ;) தேன்க்யூ மக்களே. (அப்பா... இந்த ’தேன்’க்யூ சொல்லி எம்புட்டு நாளாச்சு. சந்தோஷமா இருக்கு. மலரும் நினைவுகள்.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அம்மா சொல்லிட்டாங்க, வனி செய்துட்டா, இனி நீங்க செய்வது தான் பாக்கி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் ரொம்ப பிடிக்கும் :) ட்ரை பண்ணிட்டு வழக்கம் போல ஃபோட்டோவை போட்டு ஒரு எண்ட்ரி போடுங்க ஃபேஸ்புக்குல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ;) பௌல் ஃபுல் ரைஸ்’னு சொல்லி தப்பிச்சீங்க... பௌல் எனக்குன்னு கேட்டிருந்தா காலி கப்பை தந்திருப்பேன். சின்ன குட்டி இப்போ பரவாயில்லை, சளி தான் இன்னும் இருக்கு. அவர் தான் ஒன்னு மாற்றி ஒன்னு கூட்டிட்டு வராரே... என்ன செய்ய... கொஞ்சம் வளரும் வரை நம்ம பாடு திண்டாட்டம் தான் போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த அக்ரிமண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. டீல் ஓக்கே உமா :) தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க கண்ணு மட்டும் உணவை விட சமைச்ச, பரிமாறின பாத்திரத்துல தான் அதிகமா ஸ்ட்ரக் ஆகி நிக்குது ;) மகிழ்ச்சியே. தேன்க்யூ அருள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விவி’ன்னு கண்டதும் தெரிஞ்சு போச்சு நம்ம வனிதாஜி வந்திருக்காங்கன்னு :) நலமா? பிராத்தனைகளுக்கும் பதிவுக்கும் நன்றி ஜி. ஏன் இப்பலாம் அதிகம் பார்க்க முடியல?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேரில் வாங்க சுட சுட நெய்யோட செய்து கொடுத்துடுறேன் :) நன்றி சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இந்த மாறி சில டாகல்ட்டி வேலை லாம் நடக்கும் நு தெரியும் அதுனலதான் தெளிவா பௌல் ஃபுல் ரைஸ்’னு சொன்னேனே .. அவர் ஒன்னு மாத்தி ஒன்னு கூப்ட்டு வரலனா நீங்க அவர மதிகலனு நினச்சு இருக்காரோ என்னவோ ... :-) நல்ல பிள்ளையா சம்ர்த்தா இருந்தா தான் அக்கா இந்த மாதிறி சளி ஜுரம் இருமல் லாம் வரும்... ஓடி ஆடிகிடு அட்டகாசம் பண்ணிகிட்டு தொந்தரவு கொடுதுகிட்டு இருந்தா எதும் வராது... இப்போ சொல்லுங்க சின்ன குட்டி சமர்த்து தான...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மெச்சிக்க வேணும் தான் இந்த குட்டி சமத்துன்னு. 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வனி.. நானும் இது போலதான் செய்வேன்????.ஒரு முறை நல்லா வரும் ஒரு முறை நல்லா வராது.. அதனால முயற்ச்சிய கை விட்டாச்சு.. திரும்ப ஆசை தல தூக்குது... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ரேவதி நாலைக்கு திரும்ப கலத்துல இறங்கு..

Be simple be sample

சுவையான குறிப்பு.அவசியம் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி :) நமக்கும் அப்படி தான்... எல்லா சமையலும் ஒரு நாள் சூப்பரா வரும், ஒரு நாள் சுமாரா வரும், ஒரு நாள் சொதப்பலா கூட வரும்... ;) விடாம பண்ணிட்டே இருக்க வேண்டியது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Arisium parupum serthu vegavaika yethana visil vidanum pls ans quickly