IUI {Intra uterine insemination}

குழந்தைக்காக காத்திருப்போர் குழந்தையின்மை ,குழந்தையின்மைக்கான மருத்துவம் இவை பற்றி மிகவும் அலசி ஆராய கூடாது.ஆராய்ந்தால் நமக்கு ஏதோ பிரச்சனை இருப்பதுபோலவே தோன்றும் .இன்ன மருத்துவம்தான் இதற்கு
சரியான வழி என்று முடிவெடுக்கவும் அவசரப்பட்டு பக்கவிளைவுகள் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளவும் ஆரோக்கியத்தை கெடுக்கவும் ஏதுவாகி விடும்.உணர்வுகளுக்கும், ஹார்மோன்களுக்கும் ,கர்ப்பத்திற்கும் தொடர்புகள் இருப்பதால்
இயற்கயாக கருத்தரிக்கும் வாய்ப்பை நழுவ விடும் வாய்ப்பும் ஏற்படும்.

ஆனால் நமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியவும் டாக்டர்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்குமாக
சிலவற்றை மேலோட்டமாக விளக்குகிறேன்.

1. ஐ யு ஐ என்றால் என்ன?
ஆணிடம் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களை லாப் ல் சுத்தம் செய்து, அதிக உயிர்வாழும் அணுவை தெரிவு செய்து , பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளை போலிக்குள் ஸ்டடி மூலம் தெரிந்து கொண்டு
உரிய நாளில் நுண்ணிய குழாய் மூலம் பெண்ணின் கர்ப்பப்பை நோக்கி உட்தள்ளுவதாகும்.

2. ஐ யு ஐ செய்வதற்கான காரணங்கள் என்ன?
I.ஆணின் அணு பிரச்சனை .- ஐ யூ ஐ யில் தெரிவு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.ஆனால் அணு பாதிப்பு வீதம் அதிகமாக இருந்தால் அதாவது நீந்தும் திறன் 20 வீதத்திற்கும் உட்பட்டும் எண்ணிக்கை 1மில்லியனுக்கு குறைவாகவும் இருந்தால்
இந்த ட்ரீட்மண்ட் சரியான தீர்வை கொடுக்காது.ஆனால் கொடுக்கவே கொடுக்காது என்றில்லை.

II.தானம் பெற்ற விந்தணுவை உபயோகிப்பதற்கு ஐ யு ஐ செய்வார்கள்

III.காரணம் தெரியாத கர்ப்பமின்மை அதாவது தம்பதிகளுக்கு குழந்தை கிடைப்பது தள்ளி போய்க்கொண்டே இருக்கும் அதே நேரம் மருத்துவ சோதனைகள் செய்து பார்த்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.கருமுட்டை ஒழுங்காக வளரும்
அதனால் அதற்கு மாத்திரை ஊசி கொடுக்க முடியாது,கணவன் அணு எந்த பிரச்சனையும் இருக்காது,கருமுட்டை ஒழுங்காக வெளியேறும் ,மாதவிடாய் ஒழுங்காக இருக்கும் ஆனால்3,4 வருடங்கள் வரை இயற்கை கருத்தரிப்பு நடக்காமல் தொடரும்.
இந்த காரணத்திற்கும் மருத்துவர்கள் ஐ யு ஐ பரிந்துரைப்பார்கள்.இந்த பிரச்சனையை மையமாக கொண்டு செய்யப்படும் ஐ யு ஐ வெற்றி வீதம் மிக அதிகமாக இருக்கும்.

IV.endometriosis அதாவது கர்ப்ப சுவரை சுற்றி இருக்கும் திசுக்களின் தடிமம் அதிகமாகவும் பிறள்வாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கு மாத்திரை எடுக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறான காரணங்களுக்காக தொடர்ந்தும் மாத்திரைகள் எடுக்காமல் ,கருமுட்டை அளந்து ,வெளியேறும் நாள் கணித்து,திசுக்களின் லைன் ஐ அளந்து மாத்திரைகள் எடுத்து எல்லா சிரத்தையும் எடுக்கும் போது
அவ்வளவும் வீணாகி போய்விடக்கூடாது என்பதற்காக கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க ஐ யு ஐ ம் செய்து ,தம்பதிகளைகளையும் இணைந்திருக்க அறிவுறுத்துவார்கள்.

v. தம்பதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஐ யு ஐ செய்வார்கள்.அதாவது சிலர் தாமே முடிவெடுப்பார்கள் ,வயதை கருத்தில் கொண்டும்,பிறர் க்கு ஐ யு ஐ மூலம் கருத்தரித்ததை அறிந்தும்,வேலை நிமித்தம் மாதத்தில் பாதி நாட்கள்
பிரிந்து வாழவேண்டி வருவதாலும்,தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்களாலும் விரைவில் கருத்தரிக்க எண்ணி இந்த முடிவுக்கு போகும்போது மருத்துவர்களும் ஒத்துழைத்து ஐ யு ஐ செய்வார்கள்.

3. ஐ யு ஐ யின் வெற்றி வீதம் என்ன?
இது அவரவர் பிரச்சனைக்கும் வயதிற்கும் ஏற்ப மாறுபடும் .

4..உள்ளே அனுப்பப்பட்ட ஸ்பேம் வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதா?
ஒரு போதும் இல்லை.ஸ்பேம் ஐ தனியே உட் செலுத்த முடியாது ஒரு களிம்பு கலந்தே அனுப்புவார்கள்.அதுவே ஐ யு ஐ க்கு பின்னாலான நீர்க்கசிவிற்கு காரணம்.தவிர ஸ்பேம் ஒருபோதும் வெளியேறாது.

5. ஐ யு ஐ செய்யும்போது வலி இருக்குமா?
இல்லை .சிலர் சிறிய வலியையும் பெரிதாக எடுத்து குத்துது குடையுது என்பார்கள்.அவ்வாறானவர்களுக்கு கொஞ்சம் வலிப்பதுபோல் தெரியும் .ஆனால் வலியை சமாளிக்க தெரிந்தவர்களுக்கு இந்த வலி உணரும்படி இருக்காது.ஆனால் நுண்ணிய குழாய் மூலம் ஸ்பேம் ஐ உட் செலுத்தும்போது
கருமுட்டையை விரைவாக எதிர்கொள்ள வைப்பதற்காக முடிந்த அளவு அருகாமைக்கு இந்த ஸ்பேம் ஐ எடுத்து செல்ல இந்த ஐ யு ஐ செய்யும் நுண் குழாயில் சிறிது காற்றும் உட்செல்லுவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
இது வெகு சிலருக்கு ஒவ்வாமையையும் வயிற்று உபாதைகளையும் ஏற்படுத்தும்.கொஞ்சம் வயிறு பிடித்தால் போல் இருக்கும்.நாட்கள் நகர மறைந்து விடும்.ஆனால் அதிகமான தாங்க முடியாத உபாதைகள் கொடுக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
தவிர சின்ன சின்ன வலிகளை மனதை திசைதிருப்பி கண்டும் காணாமலும் போனால் நல்லது.ஒத்தடம் கொடுக்கிறேன் கை வைத்தியம் செய்கிறேன் என்றெல்லாம் ஆரம்பிக்க கூடாது.

6.ஐ யு ஐ ன்பின் இரத்தப்போக்கு இருக்குமா?
மிக மெல்லிய இரத்த கசிவு இருக்கும் .இது ஐ உ ஐ குழாயின் உராய்வினாலும் ,குழாயை செலுத்த பாதையை நோக்குவற்கு தசையை இழுத்து ஒரு கிளிப் மாதிரி பிடித்து வைத்திருக்க ஒரு டூல்ஸ் பயன்படுத்துவதாலும் ஏற்படும் .
மறுநாள் அல்லது 3 நாள்களுக்கு மேல் இருக்காது.தவிர மாதவிடாய் போன்று உதிரம் இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும்.

7..ஐயு ஐ ன் பின் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை எவை?
மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும் .அதிக பரபரப்பு கூடாது,மூச்சு பிடித்து பாரம் தூக்க கூடாது,அதிகம் குனிந்து நிமிர்ந்து செய்யும் எக்ஸசைஸ் செய்ய கூடாது.சுடு நீரில் குளிக்க கூடாது.உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
புதிய உணவுகளை முயற்சிக்க கூடாது , வயிற்று கோளாறு ஏற்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

8..ஐ யு ஐ எத்தனையாம் நாளில் செய்யப்பட வேண்டும்?

மாதவிடாய் ஆகி 10 ல் இருந்து 18 நாள்வரை. அவரவர் கருமுட்டை வளர்ச்சி அடைந்திருப்பதையும் கருப்பை தசை தடிமம் அதாவது எண்டோமட்டீரியத்தினையும் அடிப்படியாக வைத்து செய்வார்கள்.
கருமுட்டை வளர்ச்சி நாளுக்கு 1மில்லி மீட்டர் ல் இருந்து 2 மில்லிமீட்டர் வரை என்ற அடிப்படையில் 2.0 வை எட்டும் போது செய்வார்கள்.இருப்பினும் 19 இல் இருந்து 24 சைஸ் வரை ஐ யு ஐ யிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
ஆனால் 19 மில்லி மீட்டர் சைஸ் ற்கு குறைவான கருமுட்டை வெற்றி வீதத்தை குறைக்க வாய்ப்புள்ளது .அதுபோல் 20 ல் ஐ யு ஐ யை தவற விட்டால் கருமுட்டை வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் சரியான அளவாக 20 ஐ எடுத்துக்கொள்கிறார்கள்.

9. ஐ யு ஐ ன் பின் தாம்பத்தியம் அவசியமா?
ஆம் .மருத்துவர் பரிந்துரைப்படி அடுத்த நாள் இணைந்திருக்க அறிவுறுத்தபடுவீர்கள்.காரணம் ஸ்பேம் உயிர் வாழும் நேரம் 24 இல் இருந்து 72 மணித்தியாலங்கள்.சிலவேளை ஐ யு ஐ மூலம் அனுப்பிய ஸ்பேம் கருமுட்டையை சேர தவறினால் கூட
அடுத்தநாள் {ஐயுஐ செய்ததில் இருந்து 24 மணித்தியாலங்களுக்கு பின் 48 மணித்தியாலங்களுக்கு முன் }தாம்பத்தியத்தில் கருமுட்டையுடன் சேரும் வாய்ப்பை அதிகரிக்கவே இவ்வாறு அறிவுறுத்த படுகிறது

10.ஐ யு ஐ செய்து எத்தனை நாளில் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.?
உ ங்களுடைய கடைசி மாதவிலக்கு திகதி கடந்து 5 நாட்கள் சென்ற பின் இரத்தப்பரிசோதனை செய்து பார்க்கலாம்.வீட்டில் பிரக்னன்சி கிட் ல் பார்ப்பதாக இருந்தால் அதிகாலை முதலாவது யூரின் ல் பரிசோதித்து பார்க்கலாம்.

11.கர்ப்பம் ஆனால் எப்போது அறிகுறி தோன்றும்?
நீங்கள் ஹார்மோன் மாத்திரைகள் எடுப்பவராயின் மாத்திரைகளின் தாக்கமும் கர்ப்ப அறிகுறிகள் போலவே இருப்பதால் சொல்ல முடியாது.தவிர கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதால் புதிதாக ஏதோ அறிகுறிகள்
ஏற்படுவது போல் இருக்கும் .ஆனா உடல் எப்போதும் போலவே இயங்கிக்கொண்டிருக்கும் இதற்கு முன் உன்னிப்பாக கவனிக்காத காரணத்தால் அவற்றை உணர்ந்திருக்க மாட்டோம்.பொறுமையாக வழமைபோல் நாட்களை செலவிட்டு
பரிசோதித்து பார்க்கலாம்.

12.வெள்ளை படுதல் அதிகமாக இருக்குமா?
இல்லை வெள்ளை படுவது நோயல்ல. துர்நாற்றமும் பழுப்பு நிறமும் இல்லாத பட்சத்தில் அது எவ்வாறான எவ்வளவு அதிகமான வெள்ளைபடுதலாக இருந்தாலும் சாதாரணமே.கண்டு கொள்ள தேவையில்லை.

13.ஐ யு ஐ செய்வதற்கு எவ்வளவு செலவாகும் ?

இலங்கையில் மாத்திரை ஊசி டாக்டர் செலவு எல்லாம் சேர்த்து மொத்தம் 20 000 {இருபதாயிரம்} ரூபாய்

ஐரோப்பிய நாடுகளில் ஐ யூ ஐ செய்வதற்கான 75 வீத செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.டாக்டர் க்கும் பாமசிக்கும் பணம் செலுத்த வேண்டும் ஆனால் அரசாங்கம் உங்கள் தகுதி வேலை யை பொறுத்து
மீள செலுத்துவார்கள்உங்களுக்கு அதிகம் 25 யூரோ செலவாகலாம் ,சிலருக்கு எந்த கட்டணமும் கிடையாது.முழுவதும் இலவசம்.

கனேடிய அமெரிக்க நாடுகளில் நீங்கள் வசிக்கும் மாகாணங்களை பொறுத்து கட்டணம் இருக்கும்.உங்களுடைய தனிப்பட்ட இன்சூரன்ஸ் ஐ பொறுத்து செலவு இருக்கும்.கவர்மண்ட் டாக்டர் கட்டணம் தவிர எதையும் ஏற்றுக்கொள்ளாது.
600 முதல் 800 டொலர் வரை செலவாகும்.

இந்தியாவில் முழுக்க முழுக்க தனியார் சம்மந்தப்பட்டது.கட்டணம் ஹாஸ்பிட்டல்களை பொறுத்தும் ,உங்களுக்கு தேவையான ஊசி மாத்திரைகளை பொறுத்தும் இருக்கும்,சில ஹாஸ்பிட்டலில் விலை அதிகமான விட்டமின்கள் பரிந்துரைப்பார்கள்.
3 500 மூவாயிரத்து ஐநூறு முதல் 10 ஆயிரம் வரை செலவாகலாம்.

4
Average: 3.8 (20 votes)

Comments

நான் 1 வருடம் ஒரே மருத்துவரிடம் தான் சிகிச்சை எடுத்துகிட்டேன், அவங்க‌ எனக்கு இரட்டை கருப்பை இருக்கு அதனால‌ ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொன்னாங்க‌,6மாதத்திற்கு பின் நா கர்பம் ஆனேன் குழந்தை 3வது மாதம் scan பார்ததில் இதய‌ துடிப்பு இல்லைனு சொல்லி அபாசன் பன்னிட்டாங்க‌, இப்பே உங்களுக்கு தடுப்பு சுவர் இருக்க‌ மாதிரி தெரியுதி ஆப்ரேசன் செய்யனும் 40000 ரூபாய் ஆகும் சொல்ராங்க‌, அதுவும் உறுதியா சொன்னால் கூட‌ ஆப்ரேசன் செய்திடலாம். அவங்க‌ தடுப்பு இருக்க‌ மாதிரி தெரியுதுனு சொல்றாங்க‌, அதான் குழப்பமா இருக்கு, புதிய‌ மருத்துவர் அதுஎல்லாம் இல்லை இது இரட்டை கருப்பைனு சொல்லி பழைய‌ மருத்துவர் முடித்த‌ சிகிச்சை இவங்க‌ முதல் இருந்து ஆரம்பிக்கறாங்க‌, அதான் குழப்பமா இருக்கு,

ந‌ம்ம‌ தோழிகள் யாருக்காவது கருப்பை இடையில் தடுப்பு சுவர் இருந்து அதை opration செய்து இருக்காங்களா, அதுக்கு பிறகு குழந்தை பிறந்து இருக்கா சொல்லுங்க‌,இதை பற்றி தெரிந்தவர்களும் எனக்கு விளக்கம் கொடுங்க‌,

எல்லாம் நன்மைக்கே

நான் நேற்று ஹாஸ்பிட்டல் போனேன். இந்த‌ புது மாருத்துவரும்,ஸ்கேன் பாத்தாங்க‌ போனமாதம் இரட்டை கருப்பை சொன்னவங்க‌ இப்போ என்னானு எனக்கும் சந்தேகமா இருக்குனு சொல்லிட்டாங்க‌,ரொம்போ வருத்தமாவும் குழப்பமாவும், இருக்கு. நான் எப்பவும் குழந்தை இல்லை வருத்தபடமாட்டேன், பிறக்குமா பிறக்காதானு கவலை பட்டது இல்லை. எனக்கு கண்டிபா குழந்தை பிறக்குனு நம்பிக்கை இருக்கு, ஆனா இப்போ என் கருப்பை நினைத்தாலே வருத்தமா இருக்கு,

எல்லாம் நன்மைக்கே

இந்த பதிவு உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.. படித்து பாருங்கள்...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நீங்க‌ எனக்காக‌ போட்டு இருகீங்க‌ நினைத்தேன் என் குழப்பத்திற்கு ஒரு தீர்வுகிடைத்து விட்டது என நினைத்தேன்

எல்லாம் நன்மைக்கே

சுதர்ஷா என்ன சொல்றீங்க? எனக்கு புரியவில்லை.. தேன்மொழி பெயரை சொல்லி தானே போட்டிருக்கிறேன்?

சுரே அக்கா பிசியா இருக்கா போல.. உங்கள் கேள்விகளை பார்த்து பதில் தெரிந்தால் நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுவாங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

mam, ரொம்ப தெளிவா iui பத்தி விவரிச்சீங்க எனக்கு ஒரு சந்தேகம் கரு முட்டை வளர்ச்சி 18mm கம்மியா குறைந்தா iui செய்ய முடியுமா ?

சுரேஜினி மெதுவாக வருவாங்க. எனக்கு இது பற்றிப் பெரிதாகத் தெரியாது. உங்களுக்காகத் தேடினேன்.

அளவு சற்றுக் குறைவாக‌ இருந்தால் கருக்கட்டச் சாத்தியம் இல்லையென்பதில்லை. ஆகலாம்; ஆகாமலும் போகலாம். கருக்கட்டும் சாத்தியம் ஐம்பது சதவிகித‌த்திற்கும் குறைவாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன்.

IUI செய்வதற்கு.... நீங்கள் செலவளிக்கப் போகீறீர்கள் இல்லையா? அதனால் டாக்டர்கள் கொஞ்சம் தயங்கலாம். IUI சரிவராவிட்டால் உண்மை புரியாமல், 'மருத்துவர்கள் சரியில்லை, அவர்கள் சிகிச்சை பலனளிக்கவில்லை,' என்பதாக நீங்களும் உங்கள் வீட்டாரும் எண்ணலாம் இல்லையா? அது அவர்களது தொழிலைப் பாதிக்கும்.

உங்களுக்கு மருத்துவர்கள் மேல் நம்பிக்கை இருந்தாலும்... IUI சரிவரவில்லை என்றதும் உங்களிடம் தான் பிரச்சினை என்று வீணாகக் குழம்பி கவலைப்படுவீர்கள். பணமும் விரயம்.

தோட்டம் செய்யும் போது நடும் விதைகள் பெரிதாக முழுமையான வடிவம் உள்ளனவாகத் தெரிந்து நடுவார்கள். அல்லாவிட்டால் செடி முளைக்காமல் போகலாம். அந்த முடிவு தெரிவதற்குச் செலவளிக்கும் நாள், நீர், பணம் எல்லாம் விரயமாகிவிடும். அது போல் தான் இதுவும்.

‍- இமா க்றிஸ்

விஜயலட்சுமி இது IUI பற்றிய தெளிவான பதிவு..உங்களுக்கு உதவும்...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நா இன்னிக்கு டாக்டர் கிட்ட போறேன் எனக்காக பிராத்தித்து கொள்ளுங்கள் .

நான் 16.9.16 iui செய்து கொண்டேன்.எனக்கு கடைசி மாதவிலக்கு 3.9.16.இன்று 31 நாள் ஆகிறது.எனக்கு இப்பொழ்ஹுது மிகுந்த‌ தண்ணீர் தாகம் உள்ளது.நான் progestrone tablet எடுத்துக் கொண்டேன்.இன்றுடன் அது முடிந்து விட்டது.நான் எப்பொழ்ஹுது டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்

Pcos patri edhavadhu sollungalen!!!!!

இந்த பதிவு உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.. படித்து பாருங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இது தான் ஐயுஐ பற்றிய பதிவு.உங்களை இங்கே தான் கூப்பிட்டிருந்தார்கள்.

அவந்திகா

IUI பற்றிய கேள்விகளுக்கு....

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

வணக்கம் நண்பர்களே
எங்களுக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. 2 முறை iui தோல்வி முடிந்தது எனக்கு கவுண்ட் குறைவாக இருக்கிறது

எனக்கு 27 வயது திருமணமாகி 1 1/2 வருடங்களாகி விட்டது இன்னும் கருத்தரிக்கவில்லை நானும் எனது கணவரும் எல்லா டெஸ்ட்களும் செய்து விட்டோம். இறுதியாக HSG எனப்படும் கருக்குழாய் சோதனையும் பண்ணியாச்சு எல்லா டெஸ்ட்டும் நோர்மல் தான் இருவருக்கும் எந்த வித பிரச்சனைகளும் இல்லா நோர்மலாகவே கருத்தரிக்கலாம் என்று மகப்பேற்று வைத்தியர் கூறி விட்டார். ஆனால் நாங்கள் அடுத்த மாதம் IUI பண்ணலாம் என்று முடிவெடுத்துள்ளோம் IUI பண்ணினால் சக்ஸஸ் ஆகுமா? IUI க்கு முயற்சித்து கர்ப்பமடைந்தவர்கள் ஆலோசனை கூறுங்களேன்?????

Plz give reply for my doubt....

ஆலோசனை கூறுங்கள் தோழிகளே...

ஆலோசனை கூறுங்கள் தோழிகளே...

ஆலோசனை கூறுங்கள் தோழிகளே...

Nichayamaka success akum. Ethai seithalum nampikaiyoda seyunka. Time eduththu unka healtha athukku etha Mathiri
(helthy foods moolamaka) ready panniddu ponka.
Enakku ethil experience illa. But success akum. don't worry.

Thank u akka... Nampikaiyodu irupen...

Follicular study try seithu parthirkala?
Malai vempu try panni paththinkala?

Follicular study enda enna? Malai vempu try pannala.

Malai vempu endu custom search la poddu parunkka. Niraya perukku success ayirukku. Side effect irukkathu. So pidichiruntha try panni parunka.

Follicular study na unka karumuddaiyoda valarchi and rupture Patti study panni parpanka. Egg valarchikku scan panni + tablet n injection poduvanka. IUI kku munnadi ithu basic . Unkalukku oru prplm illala so success akalam.
Doctor da keddu parunka.

Next time malai vempu try panni pakkiran akka. Every month egg scan panni papanka doctor Every time egg growth nalla than iruku.... one time 12th daysla injunction potanka dr...

renuka sis malai vembu Nela vembu onna sis slunga tirupur la malai vembu enga kedaikum therinjavanga slunga sis. pls

I love babieeeeeeee

Oh ok shaly. Appo next step doctor keddu try pannunka. Don't worry success akum. Gbu.

Unka questionkku pathil kidachirukku innoru page la.
Don't worry deni. Koodiya seekkiram unkalukkum success akum. Be happy.gbu.
Enakku unka places theriyalainka.

k tq sis neem leaf kudikalama

I love babieeeeeeee