பிரிட்ஜ்

தோழிகளே பிரிட்ஜ் உபயோகிக்கும் முறை பற்றி விரிவாக சொல்லவும்

டிப்ஸ்.........

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்

மற்ற இடங்களில் இருந்து காப்பி பண்ணி இங்கே பேஸ்ட் செய்யக் கூடாது..மன்ற விதிகளை படித்து பாருங்கள்.. உங்கள் சொந்த நடையில் எடிட் செய்யுங்கள்.அல்லது பதிவை நீக்கி விடுங்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

எனக்கு காப்பி பேஸ்ட் செய்யக் கூடாதுன்னு தெரியாது... எனக்கு தெரியாத விசியத்த நான் காப்பி பன்னல... அவங்களுக்கு தெரியாத விசியத்த எனக்கு நல்லா தெரிஞ்சனால‌ காப்பி பேஸ்ட் செய்தன்...இருந்தாலும் இனி செய்ய மாட்டன்.....

மிக்க நன்றி தோழி

Life Is Easy When U "Accept All"

எனக்கு தெரியாத விசியத்த நான் காப்பி பன்னல// தெரிந்ததோ தெரியாததோ இங்கே காப்பி செய்ய கூடாது என அட்மின் சொல்லியிருக்காங்க.. உங்களுக்கு நல்லா தெரிந்தது என்றால் நீங்களே சொந்த நடையில் டைப் பண்ணுங்களேன்.. :)

இருந்தாலும் இனி செய்ய மாட்டன்// மிக்க நன்றி.. அப்படியே எடிட் பண்ணி விடுங்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஹாய் ஸ்வே! அறுசுவைக்கு நல்வரவு. _()_ :-)

முடிந்தால் அதை டிலீட் பண்ணுங்க. யாரும் 'பதிலளி' தட்டாமலிருந்தால் அங்கே உங்களுக்கு 'மாற்று' என்று ஒரு ஆப்ஷன் காட்டும். திரும்ப அதே விஷயத்தை நீங்கள் உங்கள் நடையில் டைப் செய்துவிட்டால்... எல்லாம் சரியாகிரும். :-)

காப்பி பேஸ்ட் பற்றி - புதிய உறுப்பினர் நீங்க. தெரிந்திருக்கச் சாத்தியம் இல்லைதான். இதற்காகக் கவலை வேண்டாம். உங்களுக்கு உதவியாக சில இழைகள் தேடிக் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கலாம்.

நிபந்தனைகள் - http://www.arusuvai.com/tamil/policy

மன்ற விதிமுறைகள் - http://www.arusuvai.com/tamil/node/14918
அறுசுவை மன்றம் (விதிமுறைகள்) - http://www.arusuvai.com/tamil/node/27207 இவை இரண்டும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒன்றில் இல்லாத சில விடயங்கள் மற்றொன்றில் இருக்கிறது.
இவற்றுக்கமைய, தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பு அறுசுவையில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

உங்களிடம் ஏற்கனவே ஃப்ரிஜ் இருக்கிறது; அதைப் பயன்படுத்துவது பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரிதானே?

வலைப்பதிவு ஒன்று -http://www.arusuvai.com/tamil/node/33156
இந்த இழையிலும் சில குறிப்புகள் கிடைக்கும். http://www.arusuvai.com/tamil/node/5236
வாடை இல்லாமால் வைக்க வழி - http://www.arusuvai.com/tamil/node/1952?page=1
& http://www.arusuvai.com/tamil/node/11332?page=2

நீங்கள் இவற்றைப் படித்து முடிக்கும் முன் வேறு யாராவது வந்து இன்னும் நல்ல யோசனைகள் சொல்வார்கள். நேரம் கிடைக்கும் போது நான் மீண்டும் வருகிறேன்.

‍- இமா க்றிஸ்

முன்பெல்லாம் ஃப்ரிஜ், தையல் இயந்திரம் எல்லாம் அலங்காரமாக :-) ஹாலில் தான் வைப்போம். விறகு அடுப்பு பயன்படுத்திய காலத்தில் சமையலறையிலிருந்த எங்கள் ஃப்ரிஜ் சற்றுப் பழுப்பாகி இருந்தது. ஆனால் அப்படி ஆவதற்குப் பத்து வருடங்களுக்கு மேல் பிடித்தது. இப்போ உள்ளவை வருடக் கணக்கு ஆனாலும் அப்படிக் கெட்டுப் போவதில்லை. ஓய்வு பெற்ற பிறகும் வெளியே புதுமை மாறாமால் இருக்கும்.
ஃப்ரிஜ்ஜை சமையலறையில் (அல்லது சாப்பாட்டு அறையில்) வைப்பது வேலைக்குச் சற்று வசதி என்பது என் அபிப்பிராயம்.

ஒரு க்ராஃப்ட் குறிப்பு இருக்கிறது. :-) கதவு பொருத்தமாக இருந்தால் ட்ரை பண்ணலாம். http://www.arusuvai.com/tamil/node/32446

ஒரு 'குட்டி டிப் - எனக்கு ஸ்டெப் ஸ்டூலில் ஏறினாலும் ஃப்ரிஜ்ஜின் மேல் தங்கும் தூசு துடைக்க எட்டுவது இல்லை. :-) முதல் தடவை பட்ட சிரமத்துடன், சரியான அளவில் ஒரு கான்வஸ் துணியை வெட்டி மேலே விரித்துவிட்டேன். அடிக்கடி அதை எடுத்து கழுவப் போடுகிறேன்.
~~~~
இன்னொரு த்ரெட் இருந்ததாக நினைவு. கிடைத்ததும் சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழி

Life Is Easy When U "Accept All"

Sorry .. Naan intha page eu ipo dhan pathan.. Here after i never do thissss.. Ini ena type pannalum enoda own writing ah dhan irukum

மேலும் சில பதிவுகள்