வெண் பொங்கல்

தேதி: October 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

தரமான பச்சரிசி - 1 கப்
சிறுபருப்பு - 3/4 கப்
நெய் மற்றும் எண்ணெய் கலவை - 1/4 கப்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - சுவைக்கு
முந்திரி - விருப்பமான அளவு


 

சிறுபருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அரிசியை சேர்த்து வாணலியின் சூட்டிலேயே சற்று வறுத்துக்கொள்ளவும்.
சுமார் 5,6 டம்ளர் நீரை எலெக்ட்ரிக் குக்கர் பாத்திரத்தில் விட்டு நீர் கொதித்து வரும் பொழுது உப்பு, களைந்த அரிசி, பருப்பை சேர்க்கவும்.
அவ்வப்பொழுது கரண்டியால் கிளறி விடவும்.
அரிசி நன்கு மசிந்ததும் நீர் போதாவிட்டால் தேவையான அளவு இன்னும் சற்று நீர் சேர்த்துக் கொள்ளவும்.
குழிக்கரண்டியால் நன்கு மசித்து, கிளறி விடவும்.
அடுப்பில் சிறிய வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் கலவை விட்டு முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி கறிவேப்பிலை இவற்றை அதே வாணலியில் தாளித்து பொங்கல் சூடாக இருக்கும் பொழுதே சேர்த்து கிளறி உடனே ஹாட் பாக்ஸில் வைத்து விடவும்.
குக்கரிலேயே கீப் வார்மில் வைத்து இருக்க கூடாது. அடி பிடித்து விடும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா, எப்படி இருக்கிங்க? எலெக்டரிக் குக்கரில் தான் நானும் செய்வேன். ரொம்ப நன்றாக் வரும் சீக்கிரமே ஆகிவிடும். நான் 5 டம்ளார் தண்ணிரி தான் விடுவென். நல்ல டேஸ்டியாக வாசணயுடன் நொடியில் வெண்பொங்கல் சாப்பிடலாம். எனக்கு மொத்தமே 12 நிமிடங்களில் ஆகிவிடும்.

விஜி நலமா?மர்லியிடம் என் ஐடி கேட்டீர்களாம்.தொடர்பு கொள்ளவில்லையே?அரிசியின் தன்மைக்கு தகுந்தவாறு நீர் தேவைப்படும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பொங்கல் வைக்கும் போது எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் அடியில் உள்ள தட்டு போட வேண்டுமா

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா.நலமா?குக்கரின் அடியில் தட்டு வைக்ககூடாது.ஸ்டீம் பண்ணும் பொருட்கள் செய்யும் பொழுது மட்டும் அந்த தட்டை உபயோகப்படுத்தவேண்டும்
ஸாதிகா

arusuvai is a wonderful website

வண்க்கம்
நீங்கள் எனக்கு சிறுபருப்பு என்றால் என்ன என்று கூறமுடியுமா,
அல்லது பயற்றம் பருப்பையா சிறுபருப்பு என்று கூறுவது

வணக்கம் வத்சலா தேவி,சிறுபருப்பு என்றால் நீங்கள் கூறுவது போல் பயத்தம் பருப்பே தான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எத்தனை வருடம எலக்ரிக் குக்கரில் பிரியாணி மற்றும் பொங்கல் செய்கிறீகள்,
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.நான் 7,8 வயதாக இருக்கும் பொழுது என் மாமா சிங்கப்பூரில் இருந்து பெரிய சைஸ் நேஷனல் எலெக்ட்ரிக் குக்கர் என் அம்மா விற்கு வாங்கி வந்தார்கள்.அதை உபயோகிக்கத் தெரியாமல் அலமாரியிலேயே என் அம்மா வைத்து இருந்தார்.அதைப் பார்க்கும் என் மாமா அதில் சமைக்காததற்கு குறை படுவார்.அதனாலேயே குக்கர் அலமாரியில் இருந்து விடுதலை ஆகி விட்டது.பிரியாணிக்கு மட்டும் உபயோகித்து வந்த அம்மா நாளடைவில் தினம்தினம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்.
இப்போது சாதம் வைக்கும் பொழுது கரண்ட் இல்லாவிட்டால் மிகவும் திண்டாடிப் போய் விடுவேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா எதுக்கு கேட்டேன்னா, நானும் 16 வருடமா பயன் படுத்துகிறேன்.
சாதம், தேங்காய் சாதம், பகாறா கானா,கிச்சிடி முதலியவை செய்வேன்.

பிரியாணி வெளியிலேயே நல்ல வரும் அதான் அதில் வைத்ததில்லை,
ஒருவர் கஞ்சி அதில் போட்டல் சீக்கிரம் செய்ய்லாம் என்றார், நான் நாலு வருடம் முன் நோன்பு கஞ்சி செய்தேன் நல்ல தா வந்தது ஆனால் எலட்ரிக் குக்கர் கெட்டு போய் விட்டது அதான் கேட்டேன்,
எங்க அண்ணி கெஸ்ட் நிறைய பேர் வந்தால் இதில் தான் செய்வார்கள்.
இப்ப நான் வேறு வாங்கி பயன் படுத்தி வருகீறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஸாதிகா மேடம் உங்க வெண்பொங்கல் செய்தேன் நன்றாக இருந்தது நன்றி மேடம்.

ரொம்ப ந்ன்றி கவி.உங்கள் உற்சாகப்பதிவுகளுக்கு.
ஸாதிகா

arusuvai is a wonderful website