ஈஸி சாண்ட்விச்

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ஃபிங்கர் ப்ரெட் /சமூன் - 10
பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 9
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/4
மயோனைஸ் - கால் கப்
சாஸேஜ் ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிப்ஸ் போல் அரிந்து வதக்கியது அல்லது க்ரில் செய்தது அல்லது வேக வைத்தது - 6 சாஸேஜ்
டொமேட்டோ சாஸ்


 

காய்கறிகளை சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்து வற்றவிடவும்.
ப்ரெட்டை இரண்டாக கீறி முழுவதும் மீராமல் ஓரம் மட்டும் ஒட்டியபடி உள்ளே மயோனைஸ், டொமேட்டோ சாஸ் தடவி, வேக வைத்த காய்கறிகளில் 2 தேக்கரண்டி வைத்து, சாஸேஜ் சிறிது வைத்து பரப்பி மூடவும்.


வெளியே செல்லும்போது எடுத்து செல்ல ஒரு சூப்பர் சாண்ட்விச். காய்கறிகளும் இருப்பதால் பிள்ளைகளுக்கும் நல்லது. நான் எப்பொழுதும் எடுத்து செல்லும் சாண்ட்விச் இது. நல்ல ருசியாக இருக்கும். ஆளுக்கு 2 சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

what is மயோனைஸ்?

எந்தவிதமான சாசேஜ் சொல்கிறீர்கள்... சிக்கன்/பீஃப்???

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓஹ் அப்படி ஒன்னு இருக்குல்ல சிக்கனே தான் நான் பீஃப் சாசேஜ் வாங்கினதே இல்லை.