உதவுங்கள் தோழிகளே....

நான் இத்தளத்திற்கு புதியது,நான் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், எனக்கு செப்டம்பர் 28 மாதவிலக்கு ஆனது, இன்றோடு எனக்கு 15 நாள் ஆகிறது, எனக்கு ஓவுலேஷன் 10 வது நாள் ஏற்பட்டது, எனக்கு இப்போ எனக்கு சளி தொண்டை வலியாக உள்ளது, இந்த வலிக்கான மாத்திரையை நான் இப்பொழுது எடுத்துக்கலாமா? எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் நான் பாலில் மஞ்சள் மிளகு பொடி செய்து போட்டு குடித்தேன், இப்படி குடிக்கலாம் தானே தோழிகளே, இதனால எந்த பிரச்சனயும் வராதுல, எனக்கு இதற்கு முன்பு ஒரு முறை அபார்சன் ஆகிவிட்டது, அதான் எனக்கு மிகவும் பயமாக உள்ளது, எல்லாதயும் பார்த்து பார்த்து செய்றேன்,.. உங்க பதிலை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே....

:-) உங்களுக்குப் பதில் சொல்ல கொஞ்...சம் பயமா இருக்கு. :-) ஒவ்வொரு சொல்லையும் பார்த்துத் தட்ட வேண்டும் போல.

ஒன்றும் யோசிக்க வேண்டாம். நடந்து முடிந்தவற்றை ஆராய வேண்டாம். உங்கள் மருத்துவர் சொன்னதில் தவறு இராது. அதே சமயம் இங்கு சகோதரி உங்களுக்குக் கொடுத்த பதிலிலும் தவறு இல்லை. இரண்டையும் பொருத்திப் பார்ப்பது... நிச்சயம் தவறு. :-)

என்ன சந்தேகம் என்றாலும் உங்கள் மருத்துவரிடம் கேட்பது மனச்சஞ்சலங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.

சாதாரண காய்ச்சல் பார்க்கும் டிஜிட்டல் தர்மாமீட்டரை விட, ஓவ்யுலேஷன் கணிக்கிறதுக்கு Basal Digital Thermometer தான் சிறந்தது. http://www.arusuvai.com/tamil/node/33050 படிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

நான் தளத்திற்கு புதிது . நான் 47நாள் கர்ப்பமாக உள்ளேன். Pregnancy teaster எனக்கு கர்ப்பம் என காட்டியது. ஆனால் கர்ப்ப அடையாளங்களாகிய வாந்தி தலைச்சுற்றல் எதுவும் இல்லை ஏன்? எனக்கு பயமாக உள்ளது.

கர்ப்ப அறிகுறிகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது சிலருக்கு கடைசி வரை வாந்தி தலைச்சுற்றல் இருக்காது. எனக்கும் எதுவும் இருந்தது இல்லை

Hii sis...First Congrats.... Pregnancy symptoms ovuruthar ku munadiye theriyum ovuruthar ku late ah theriyum silar ku Normal ah irupanga itha ninachu payapada venda... enjoy ur pregnancy sis..Nalla healthy food ah sapudunga... fruits ella daiyum sapudunga travel pannathinga... relax ah happy ah irunga sis..

SangeethaKannan

மேலும் சில பதிவுகள்