thee kayam

cookker seriya mudamal athai seri seitha pothu athil ulla saatham enmel pattuvitathu ... saatham pata idathilam yerichal erukierathu..."+" oinment patu erukuren ,,,ethil vera yetahvathu solution erukiratha,,allathu vera yethavathu veetuvaithiyam erunthal sollungal...

Aloevera gel (kadaikalil kidaikum) apply pannunga..kayam patta udane apply panna skin la koppulam varathu, black aakathu, eriyathu..

Hard Work Never Fails..

hai friends en kuzhanthai soodana stove burner il viral vaithu vital athu koppalithu udainthu vitathu atharku veetu vaithiyam ethum irunthal sollungal pls

Enadhu wife udambil soodana kulambu kotti vittaal . Adhu ippo migavum pun pondru agivittadhu . Naan marudhaani oil use pannugiren. Idhu saria ,illai veru edhavadhu veetuvaitiyam ulladha?

உடம்பில் எந்தப் பாகம்? முதலுதவி என்ன செய்தீர்கள்?

ஓடும் குளிர் நீரில் பாதிக்கப்பட்ட இடத்தை உடனே 10 நிமிடமாவது காட்ட வேண்டும். அல்லாமல் உடனே எண்ணெய் வைத்திருந்தால் அது காயத்தின் வீரியத்தைக் கூட்டும்.

தோல் வெப்பமாக இருக்கும் போது வைக்கப்படும் எண்ணெய் சூடாகி அதுவே தோலைப் பொரிய வைக்கும்.

குழம்பு எத்தனை சூடாக இருந்தது என்பது தெரியவில்லை. நீங்கள் 'கொட்டியது' என்கிறீர்கள். அப்படியானால் சிறிதாகத் தெளித்திராது. காலில் கொட்டிற்றா? கண்ணால் பார்த்தால் அபிப்பிராயம் சொல்வது சுலபம். விபரம் தெரியாமல் சொல்ல விரும்பவில்லை.

//Adhu ippo migavum pun pondru agivittadhu.// நீங்கள் மருந்து செய்வது வேண்டாம். தொற்று ஏற்பட்டுவிட்டால் சிரமம். மருத்துவரிடம் அழைத்துப் போங்க. காயம், மடித்து விரிக்கும் விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால் போன்ற உடற்பகுதியில் இருந்தால்... பாதிக்கப்பட்ட இடத்தை அசையாமல் வைத்தபடி காயத்தை ஆறவைக்கக் கூடாது. தோல் நேராக வளர்ந்துவிட்டால் பிறகு அந்த இடத்தைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். மருத்துவர்கள் சரியானபடி மருந்து செய்வார்கள். அப்பியாசங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் சொல்லுவார்கள். தழும்புகள் குறைவாக இருக்க வேண்டும் இல்லையா? அதற்கும் வழி சொல்லுவார்கள். இன்றைக்கே போங்க. (பாதிப்பு உங்களுக்கா உங்கள் மனைவிக்கா என்பது புரியவில்லை.)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்