குழந்தை வளர்ப்பு & பாலூட்டுதல் - தளிகா

குழந்தை வளர்ப்பு

பாலூட்டுதல்

இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.

பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.

நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.

சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்

பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.

பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். குழந்தையின் மூக்கு பகுதி மார்பில் மிகவும் அழுந்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

குழந்தையை இழுத்துப் பிடித்து மார்பில் அழுத்தி பால் கொடுத்தல்கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும்.

குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தினை தொடர்ந்து கொடுத்து வரவும். நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் பருகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.

தவிர்க்க இயலாத சில காரணங்களால், சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் இயலாது போய்விடும். தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பார்முலா மில்க் கொடுக்கலாம்.

ஆறுமாதம் கடந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Comments

நன்றி Imma.

All is well

Enudaya 50 nal aana kulathaiku marbu sali kaisalaga irukurathu.veliye payanpaduthum maruthu ethum irthal solavum

All is well

//.veliye payanpaduthum maruthu ethum irthal solavum// 50 நாள் குழந்தைக்கு டாக்டரிடம் கேட்காமல் எந்த‌ மருந்தும் எடுக்க‌ வேண்டாம் என்றே தோன்றுகிறது..

நீங்கள் எதற்கும் டாக்டரிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது..

- பிரேமா

nandri prema mam. dr tam kamithan.antibiotic fever cold ku med kuduthar.

All is well

En paapavirku 18 maadham aagiradhu... Naan saivam yendha maadiriyana unavugal kodukalam ... sollunga frnds

50 நாளே ஆனா குழந்தைக்கு மருத்துவர் அனுமதி இல்லாமல் கைவைத்தியம் செய்ய வேண்டாம் சளி இருமல் இது போன்ற இருந்தால் உடனே மருத்துவரிடம் அதற்குரிய மருந்துகளை எழுதி வாங்கி கொடுப்பதே நல்லது அது மட்டும் இல்லை மருந்தை எந்த அளவுக்கு மருத்துவர் குடுக்க சொல்கிறாரோ அந்த அளவுக்கு தான் குடுக்க வேண்டும் கூடுதலாகவோ இல்லை குறைத்தோ குடுக்க கூடாது சளி சுரம் இது போல மருந்துகளுக்கு தூக்கம் நல்ல வரும் இப்படி தொங்குறளனே பயம் வேண்டாம் எந்த நேரத்தில் சளி இருக்கோ அப்போ தான் அதை குடுக்க வேண்டும் தூங்க மாட்டுக்கார இந்த மருந்துக்கு அல்ல தூங்குவ என்று நினைத்து நல்ல இருக்குற குழந்தைக்கு தூக்கத்துக்காக அதை குடுக்கலாம் என்று குடிக்க குடுக்க கூடாது உடல் உபாதைகள் இருந்தால் மட்டுமே மருந்து குடுக்க வேண்டும்

இந்த லிங்க் போயி பார்த்தால் உங்களுடைய குழந்தைக்கு வேண்டிய உண்வய பட்டியல் கிடைக்கும்
http://www.arusuvai.com/tamil/node/14967

அப்படி இல்லை என்றால் யூடுப் யில் 18 மாசம் ஆனா பேபி food போட்டுட்டு பாருங்கள் சைவம் சொல்லி நிறைய ரெசிபி கிடைக்கும் எனக்கு சைவம் சாப்பாட்டை பற்றி தெரியவில்லை இது நாள் வரை என்ன சாப்பாடு குழந்தைக்கு கொடுக்கின்றிர்கள்

Delivery age 19days aguthu papaku mother feed tha but epo left side marbu kambu vediche iruku ore vali ah iruku feed pana mudila vali kuraiya help panunga plz

சகோதரிகளுக்கு எனது வணக்கம்.
நான் செய்து கொண்டுள்ள பிராண சிகிச்சை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். திருமூலர் பிராண சிகிச்சை மையம் என்ற எனது பேஸ்புக் முகப்பை காணவும். நன்றி.

Do or die

அக்கா தாய்பால் தரும்போதோ அல்லது தந்து முடித்தவுடன் குழந்தை மலம் சீறுநீர் கழித்தால் திருப்ப பால் தரனுமா?. சிறு நிமித்தில் அழுதால் குழந்தைக்கு பால் தரனுமா? தயவுசெய்து கூறுங்கள். குழந்தை க்கு பசி என அறிந்து கொள்வது எப்படி? எனக்கு உதவ யாரும் இல்லை ரொம்ப பயமாக இருக்கு வழி சொல்லூங்க அக்கா.

hi friends என் என் பெயர் சுமா , எனக்கு 2 வயதில் மகன் உள்ளான் , ஆனால் சில மாதங்களாகவே சரியாய் சாப்பிட மாட்டேங்கிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை நன்றாக பசியெடுக்க என்ன செய்வது வயிறு சுத்தம் செய்ய என்ன செய்வது யாராவது ஆலோசனை குறுங்களேன்

hi friends என் என் பெயர் சுமா , எனக்கு 2 வயதில் மகன் உள்ளான் , ஆனால் சில மாதங்களாகவே சரியாய் சாப்பிட மாட்டேங்கிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை நன்றாக பசியெடுக்க என்ன செய்வது வயிறு சுத்தம் செய்ய என்ன செய்வது யாராவது ஆலோசனை கூறுங்களேன்

Intha tips migavum arumai

Intha tips migavum arumai

கடந்த டிசம்பர் மாதம் எனககு முதல் குழந்தை பிறந்தது தற்போது நான் மீண்டும் கர்பமாக உள்ளோன் இன்னிலையில் என் முதல் குழந்தைக்கு நான் தாய்ப்பால் கொடுக்கலாமா? எவ்வளவு நாட்கள் கொடுக்கலாம்

Ipo unga first baby ku 10 months irukuma? paal kuduka koodathu. Doctor kita ketukonga.

- பிரேமா

Hi

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது.என்னிடம் தாய்ப்பால் இல்லை, பவுடர் பால் தான்.2 மாதம் மட்டுமே தாய்ப்பால் குடித்தான். அவன் பசிக்காக அழுகிறான் ஆனால் பால் குடிப்பதே இல்லை. சங்கில் தான் கட்டாயமாக குடிக்க வைக்கிறோம்.டாக்டரிடம் போனால் சில குழந்தைகள் அப்படித்தான் என்கின்றனர். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மட்டுமே தூங்குறான்.அவனுக்கு எதாவது பிரச்சினை இருக்கானு பயமா இருக்கு. நன்றாக பால் குடிக்க வைக்க என்ன செய்வது

Sister enaku baby piranthu 2year aga poguthu i am week person my weight 40kg.so na baby ku milk kodupathai 2days ago stop paniten so milk kattikichi romba valikuthu.itha epdi na solve panrathu?? Please tell me sister help me. Pls

வெளியில் எடுத்து விட்டு வெந்நீரில் ஒத்தடம் கொடுங்க சரியாயிடும்.

2 வருஷமா பால் கொடுத்துட்டு இருந்தீங்களா விடாம?

- பிரேமா

illa sister baby ku 1year and 6month agum pothu stop panen bt paal katikitu valichathu so thirumba feeding start paniten.hot water la apdi seithaal thaaipal stop akiduma sister?

Pls tell me sister

Help me sister

sis my age 22.na 2yr ah thaaipaal kuduthen ‌2week munnadi niruthiviten so breast romba small ah iruku luse ah iruku sis pls help panuga sis.hospital poi ketkarathuku thayakama iruku pls help me sis pls.husband ku kuda enna pidikala sis pls help me

pls sollunga

தினமும் குளிக்கும் முன் ஆலிவ் ஆயிலில் மசாஜ் செய்து விட்டு குளியுங்கள்.. நல்ல மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள்.. சரியான உள்ளாடை அணிந்து கொள்ளுங்கள்..

எப்படியும் கர்ப்பமாவதற்கு முன்பு இருந்ததை விடச் சிறியதாக மாறாது. தொய்ந்து போவது, முன்பே சரியான உள்ளாடைகள் தெரிந்து அணிந்திருந்தால் குறைவாக இருந்திருக்கும். இதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும் இப்படி ஆவதைத் தவிர்க்க இயலாது. மருத்துவரிடம் போவதில் பெரிதாகப் பலன் எதுவும் இராது, நீங்கள் ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் போவதாக இருந்தால் தவிர.

'husband ku kuda enna pidikala' :-) உங்கள் ஹஸ்பண்டுக்கு மட்டும்தானே பிடிக்க வேண்டும்! அதென்ன, அவருக்கும் கூட பிடிக்கல!! உங்களுக்கே உங்களைப் பிடிக்கவில்லை என்கிற விரக்தியில் எழுதி இருக்கிறீங்க. உங்கள் கணவர் பிடிக்கவில்லை என்றாரா அல்லது உங்கள் ஊகமா? நீங்கள்தான் இதைப் பெரிதாக எடுக்கிறீர்கள். இதற்காக தொடர்ந்து பாலூட்டிக் கொண்ன்டே இருப்பது முடியாது. தொய்வு தாய்மையின் இயல்பான பின்விளைவுகளுள் ஒன்று. நீங்கள் முன்பே பாலூட்டுவதை நிறுத்தியிருந்தால் குறைவாக இருந்திருக்கலாம். சகோதரி சொன்னது போல மசாஜ் செய்து பாருங்கள். சிறிது முன்னேற்றம் கிடைக்கலாம். ஆடைகளைச் சரியானபடி தெரிந்து அணியுங்கள். இது ஒரு குறைபாடு அல்ல. பெரிதாக எடுக்க வேண்டாம். யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

எனக்கு குழந்தை பிறந்து 14 நாட்கள் ஆகிறது.முதலில் என்னிடம் தாய்பால் இல்லை.பிறகு அவளால் மார்பில் சப்பி குடிக்க முடியவில்லை nipple வைத்து குடுத்ததால் இப்போது நேரடியாக என்னிடம் குடிக்க மறுத்து அழுகிறாள்.அதை மாற்ற வழி சொல்லுங்கள் pls

நிப்பிள் என்பது அழும் குழந்தைக்கு வைப்பார்களே அதுவா? பேசிபையர் னு சொல்வாங்க. அதை தயவு செய்து குழந்தைக்கு கொடுக்காதீர்கள். அதனால் பல் வரிசை மாறலாம், குழந்தைகள் பால் குடிக்க மறுக்கலாம், தூங்கும் நேரத்தில் எதிர்ப்பார்த்து அழும்.

குழந்தைக்கு எப்படியாவது பால் குடுத்து விடுங்கள். அழுதாலும் சிறிது நேரத்தில் பழகி விடும்.

- பிரேமா

நிப்பிள் ஷீல்டைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரச்சினை குழந்தையிடம் இல்லாமல் இருந்தால் எப்படி மாற்ற முடியும்!

இன்னும் கொஞ்ச நாள் கொடுங்க. குழந்தைக்குப் பழக்கம் வர வேண்டும் என்பதை விட உங்கள் மார்பகம் குழந்தை குடிப்பதற்கு ஏற்படி ஆக வேண்டும் என்பது முக்கியம். அப்படி இல்லாவிட்டால் சரியானபடி பற்றிக் கொள்ள முடியாமல் குழந்தை அழத்தான் செய்யும். தொடர்ந்து பால் கொடுக்க, காம்புகள் சரியானபடி வெளியே வரும். அதன் பின் குழந்தை உங்களிடம் நேரடியாகப் பால் அருந்துவார்.

14 நாட்கள் தானே! இன்னும் கொஞ்ச நாள் நிப்பிள் ஷீல்ட் பயன்படுத்துவதைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்