அரட்டை வரிசை எண் 1003

அரட்டை இழைக்கான சிறப்பு விதிகள்.

1. அரட்டை இழைத் தொடங்க உறுப்பினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அவற்றை அறுசுவை நிர்வாகம் மட்டுமே இனித் தொடங்கும். உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு பதிவுகள் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுகள் வந்ததும் அடுத்து புதிய இழை தொடங்கப்படும். அதையும் நாங்கள் மட்டுமே செய்வோம். உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் அரட்டை இழைகள் நீக்கப்படும்.

2. அரட்டையில் மதம், இனம் சார்ந்த பதிவுகள், ஆன்மிகம் பரப்பும் விசயங்கள் கூடாது.

3. தனித்தனி குழுக்களாக பிரிந்து உரையாடல் கூடாது. ஒருவரையொருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் கொடுப்பது, மனம் வருந்தும்படி பதிவுகள் கொடுப்பது கூடாது.

4. அரட்டை என்பது சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு உரையாடுவது இல்லையென்றாலும், உங்களது உரையாடல் சுவாரசியமான உரையாடல்களாக இருக்க வேண்டும். "அடுத்த வீட்டு அம்புஜம் ஆறு பவுன்ல செயின் வாங்கி இருக்காளாமே.. அம்புட்டு காசு எங்கிருந்து வந்துச்சு.." இப்படி எதாவது பேசுவது சப்ஜெக்ட் இல்லாத பேச்சாக இருந்தாலும் ஒரு சுவாரசியமானப் பேச்சு. படிக்கும் எல்லோருக்குமே அம்புஜம் பற்றின ஒரு ஆர்வம் வரும். இதுபோல் எதையாவது, எதைப் பற்றியாவது பேசுங்கள். அதுதான் அரட்டை. வெறுமனே, "ஹாய்" என்று மட்டும் ஒரு பதிவு. அடுத்து, "யாராவது இருக்கீங்களா" என்ற பதிவு. அடுத்து நான் உள்ளே வரலாமா என்று பதிவு. அடுத்து bye என்று ஒரு வார்த்தை போடுவதற்கு ஒரு பதிவு..!! Chat ல் உரையாடுவது போலான இந்த வகை உரையாடல்கள், பக்கம் பக்கமாக ஒற்றை வரி பதிவுகள் இவைகளைத் தவிர்க்கவும். சில இடங்களில் நூறு பதிவுகளைக் கடந்தும் ஒரு இடத்தில்கூட ஒருவரும் எதைப் பற்றியுமே பேசாமல், ஹாய், எப்படி இருக்கீங்க, யார் இருக்கீங்க என்றே இருந்திருக்கின்றது.. இதனைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. யாராவது இருக்கீங்களா என்ற தேடல் பதிவுகள், நான் வந்துட்டேன் என்ற ஆஜர் பதிவுகள், வரலாமா என்று கேட்கும் அனுமதிப் பதிவுகள், வெறும் ஹாய் சொல்லும் மரியாதைப் பதிவுகள் இவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

5. பதிவுகள் கொடுக்கும்போது தலைப்பு என்று இருக்கும் பெட்டியில் தயவுசெய்து உங்கள் பதிவுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று கொடுங்கள். யாரை நோக்கியாவது பதில் கொடுத்தீர்கள் என்றால் அவரது பெயரையாவது குறிப்பிடுங்கள். வெறும் வணக்கம், அஸ்லாமு அலைக்கும், ஹாய் இவற்றையெல்லாம் தலைப்புப் பெட்டியில் கொடுக்காதீர்கள். உங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் உள்ளே சப்ஜெக்ட் பெட்டியில் கொடுங்கள். தலைப்பு பெட்டியில் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

6. யாராவது பிரச்சனைக்குரிய பதிவுகள் கொடுத்தால் அவற்றை உடனே அட்மினுக்கு தெரிவியுங்கள். நீங்களும் பதிலுக்கு அங்கே பிரச்சனைகள் செய்து, பிறகு பிரச்சனை முற்றிய பின்பு அட்மினைத் தொடர்புகொண்டால் எங்களால் எந்த விதத்திலும் உதவ இயலாது. யாரேனும் பிரச்சனையைத் தொடங்கினால் மற்றவர்கள் அமைதி காத்து எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.

7. அறுசுவையின் பொதுவான மற்ற விதிகள் இதற்கும் பொருந்தும்.

(காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம். )

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

முன்பு இருந்த வடிவமைப்பு மொபைலில் நன்றாக இருந்தது என்று நீங்கள் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கின்றது. இருப்பினும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. பல வருடங்களாக அதற்கு பழக்கப்பட்டுவிட்டதால் இந்த புதிய வடிவமைப்பு சற்று குழப்பமாக இருக்கலாம்.

ஒவ்வொரு முறை தளம் மாற்றியமைக்கப்படும்போதும் இதே பிரச்சனை பயனீட்டாளர்களுக்கு ஏற்படும். சில தினங்களில் அது சரியாகிவிடும். இதுதான் மொபைலில் பார்வையிடுவதற்கு மிகவும் வசதியான, யுனிவர்சல் ஸ்டாண்டர்டு வடிவமைப்பு. :-) சில தினங்களில் நீங்களே உணர்வீர்கள்.

அதையே தான் நானும் நினைத்தேன். பழக பழக சரியாகிவிடும். (நான் கொஞ்சம் slow போல.) ;(. :D.

பல விடயங்கள் மிக வசதியாகவே உள்ளது. Esplly My Account. ♥️

குழந்தைகள் வீட்டுச் சுவரில் எழுதுவது சரியா தவறா?
வாடகை வீடாக இருந்தால் கண்டிக்கலாம்..

ஆனால் சொந்த வீட்டில் எழுதுவதற்கு பெற்றோர்கள் தடை போடுகிறார்கள்..

இது சரிதானா என்று நிறைய நாட்கள் யோசித்து உள்ளேன்.. சுவரின் அழகு அவ்வளவு முக்கியமா?

குழந்தைகளுக்கு பிடிச்ச விசயமே சுவரில கிறுக்கிறதுதான். குழந்தைகளை ரசிக்கிறவங்களுக்கு அவங்க கிறுக்கல்களும் ரொம்ப பிடிக்கும். அதுக்குன்னே தனியா ஒரு சுவர் ஒதுக்கிடலாம். ஒரே ஒரு விசயம், எந்த சுவர்ல நாம எழுத அனுமதிக்க நினைக்கிறோமோ அந்த சுவர்ல எழுதக்கூடாதுன்னு அவங்ககிட்டே சொல்லணும். நாம வேண்டாம்னு சொல்ற இடத்துலதான் அவங்க கிறுக்குவாங்க.

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

Admin oru humble request :

Arusuvai la yerkanave koduthirundha tamil typing option kudukringala.? Nan system la use pandren. Tamil typing romba kashtama iruku. enala arusuvaila edhum post / comment panna mudiala. Tamil laye pesi pazhagiten. tongulish la pesa nalave illa.

pl try to understand and do the needful :-)

- பிரேமா

அன்பு சகோதரிக்கு,

தமிழில் டைப் செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்தால் என்னால் கண்டிப்பாக உதவ முடியும். அந்த குறிப்பிட்ட வசதிதான் வேண்டும் என்று அடம் பிடித்தால் என்னால் இப்போதைக்கு உதவ இயலாது. :-) 

அறுசுவையில் ஒரு விசயத்தை கொண்டு வரும்போது அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துதான் கொண்டு வருகின்றோம். சில நேரங்களில் சில விசயங்கள் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை அல்லது எதிர்பாராத பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். அந்த தமிழ் டைப்பிங் வசதி ஒரு தனி module. மொபைல் யூசர்ஸ்க்கு அது பயன் தராது. ஆனால், நீங்கள் மொபைல் பயன்படுத்தினாலும், சிஸ்டம் பயன்படுத்தினாலும் அது ஒவ்வொரு பக்கத்திலும் ஓபன் ஆகும். கூடுதலாக ஒரு ஜாவாஸ்க்ரிப்ட் ஃபைலை திறக்கும். 

இந்த வசதியை ஒன்று இரண்டு பேர்தான் பயன்படுத்துகின்றார்கள். நம்முடைய தளத்தை பார்வையிடுவதில் 80 சதவீதம் பேர் மொபைல் யூசர்ஸ் என்பதால் அவர்களுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை. பலன் இல்லை என்பதுகூட பிரச்சனையில்லை. இதனால் பக்கங்கள் திறப்பதில் தாமதம் உண்டாகும். இந்த காரணங்களால்தான் அதனை வேண்டாம் என்று எடுத்துவிட்டேன். 

ஒரு வசதி நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என்றால் ஏன் நான் அதனை நீக்கவேண்டும். அதனால் எனக்குதானே இழப்பு. நிறைய பேர் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காக நான் நீக்குவேனா? :-) 

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் தமிழில் டைப் பண்ண முடியவில்லை என்பதுதான் உங்களது பிரச்சனையாக இருந்தால் என்னால் அதற்கு நிறைய ஆல்டர்நேட்டிவ் சொல்யூசன் கொடுக்க முடியும். 

1. நம்முடைய அறுசுவையில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துதவி பக்கம். அறுசுவை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அதனை நிறைய பேர் பயன்படுத்தி வருகின்றார்கள். அது ஓரளவிற்கு எளிதானது. இருந்தாலும் அதிலும் சில பிரச்சனைகள் உள்ளன. நீங்கள் அதனை முயற்சி செய்யலாம்.

http://www.arusuvai.com/tamil_help.html

2. கூகுள் இன்புட் டூல்ஸ் பயன்படுத்தி தமிழில் டைப் செய்யலாம். கீழ்கண்ட லிங்க்கில் உள்ள பக்கத்தில் டைப் செய்து அதனை காப்பி செய்து வேண்டுமிடத்தில் பேஸ்ட் செய்யலாம்.

https://www.google.com/intl/ta/inputtools/try/

அல்லது கூகுள் க்ரோம் எக்ஸ்டென்சன் ஆக இதனை சேர்த்துவிட்டால், நீங்கள் விரும்பும் இடத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யலாம். விபரங்கள் கீழ்க்கண்ட லிங்க்ல் உள்ளது.

https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab

இதேபோன்று http://tamil.indiatyping.com/ , http://www.easytamiltyping.com/ என்று நிறைய ஆன்லைன் தமிழ் டைப்பிங் வசதிகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

3. மேற்கூறிய வசதிகளில் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளன. அவை எல்லாவற்றையும் விட சிறப்பானது, நான் 15 வருடங்களாகப் பயன்படுத்துவது, ekalappai tool. 

http://thamizha.org/2010/11/19/ekalappai-v3.html
https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html

இங்கிருந்து நீங்கள் இதனை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதனை ஒருமுறை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் தமிழ்ல் டைப் செய்யலாம். தமிழ் ஆங்கிலம் என்று மாற்றி மாற்றி டைப் செய்யலாம். இமெயில், ஃபேஸ்புக் என்று எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதுதான் இருப்பதிலேயே சிறந்த தீர்வு.

இகலப்பை போன்ற மற்றொரு டூல் NHM Writer. இதுவும் மிக வசதியானது. இணையத்தில் இலட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றார்கள். 

http://software.nhm.in/products/writer

மேற்கண்ட லிங்க்ல் இருந்து அதனை டவுன்லோடு செய்யலாம்.

இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துங்கள் என்பதுதான் என்னுடைய ஆலோசனை. இதனை நிறுவுவதில ஏதேனும் சந்தேகங்கள், பிரச்சனைகள் இருந்தால் சொல்லுங்கள். நான் உதவுகின்றேன்.

அறுசுவை புதிய தளம் ஏற்கனவே சர்வர் லோடு பிரச்சனையில் சற்று தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பழைய தமிழ் டைப்பிங் வசதியை என்னால் கொடுக்க இயலாது. தயவுசெய்து மன்னிக்கவும், 

நன்றி அட்மின் அவர்களே. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.

சிக்னேச்சர் எப்படி மாற்ற வேண்டும். நான் புதியதாக அப்டேட் செய்த சிக்னேச்சர் காணாமல் போனது.

- பிரேமா

//நான் புதியதாக அப்டேட் செய்த சிக்னேச்சர் காணாமல் போனது. //

எப்படி காணாமல் போனது / போகும் என்று தெரியவில்லை. :-)

உங்களது உறுப்பினர் பக்கத்திற்கு சென்றால் மேலே எடிட் என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்களது ப்ரொஃபைலை நீங்கள் மாற்றலாம். சிக்னேச்சர், ப்ரொபைல் போட்டோ எல்லாமே இங்கு சேர்க்கலாம். லிங்க் வேண்டுமென்றால் இதுதான்..

http://www.arusuvai.com/tamil/user/59730/edit

எடிட் செய்த பிறகு மறக்காமல் கீழே உள்ள save பட்டனை அழுத்தி சேவ் செய்யவும். இல்லையென்றால் மீண்டும் காணாமல் போய்விடும். :-) 

நான் பாஸ்வேர்டை மறந்துவிட்டேன், எப்படி என் ப்ரோபய்லை நிரப்புவது ,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

நீங்கள் பதிவு போட முடிகிறது என்றால் உங்கள் ப்ரொஃபைலை எடிட் செய்யும் ஆப்ஷனும் வரவேண்டும். http://www.arusuvai.com/tamil/user/61265/edit போனால் எடிட் செய்யலாம். அதே சமயம் பாஸ்வேடை மாற்ற விரும்பினால் மாற்றலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்