பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

பட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் . நீங்களும் அடுத்தவர்களுக்காக அணியா? உங்க அணி பலம் கூடிட்டே போகுது.
அடுத்த பதிவில் உங்களின் வாதங்களோட வாங்க .

பட்டிக்கு வரும்படி இரு அணி பேச்சாளர்களையும் நடுவர் அழைக்கிறார் . பண்டிகைக்கு செய்த சுண்டல் சாப்பிட்டு அமைதியா இருந்தா எப்படி ? முட்டி மோதி வாதங்களைக் கொடுத்தால்தானே நடுவருக்கு தீர்ப்பெழுத வசதியா இருக்கும் . வாங்க வந்து வாதங்களைப் பதிவிடுங்க .

பட்டிய மறந்துட்டீங்களா? இல்லை வாரக்கடைசி என்பதால் விடுப்பா? விரைந்து வாருங்கள்.

உண்மையை சொல்ல போனால் , ஒரு பெண் திருமணதுக்கு முன் தனக்காக நேரத்தை செலவிடுகிறால் ( தன்னை அழகு படுத்த , பொழுதுபோக்கு, தனக்கு பிடித்த வேலைகளை செய்வது, தூங்குவது இன்னும் பல) ஆனால் திருமணத்துக்கு பின் தன்னை சார்திரிப்போர்காக நேரத்தை செலவிடுகிறால்

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அப்போ அடுத்தவருக்காக அணிக்கு மேலும் ஒரு உறுப்பினரா? வாழ்த்துக்கள். உங்களின் கருத்தை கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்...

பெண்கள் தங்களுக்காக செலவிட நேரமே இல்லை என்பதே என் வாதம்

காலை முதல் இரவு வரை பெண்கள் அடுத்தவர்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். வீட்டில்இருப்பவரானாலும் சரி வேலைக்கு செல்பவரானாலும் சரி. வீட்டில் இருந்தால் பிள்ளை / கணவர் / மாமி / மாமா / அம்மா / அப்பா ஆகிய அனைவருக்காகவும் உழைக்கிறாள். வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். தனக்கென்று தனியாக நேரம் கிடையாது. குழந்தை தூங்கும் நேரம், கணவருக்காக காத்திருக்கும் நேரத்தில் தான் சில பெண்கள் ஒரு காபி / உணவு கூட அருந்த முடிகிறது. வேலைக்கு செல்பவரின் நிலைமை அதோ கதி. இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.

- பிரேமா

பட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

குறிப்பு : பட்டியில் யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது, எதிரணி என்று கூறலாம்,
நடுவரே என்று அழைத்தால் போதுமானது .

இப்ப உங்களின் வாதங்களை பார்க்கலாம் . நீங்களும் அடுத்தவருக்கே அணியா ?

/// வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்./// நேரம் ஒதுக்க இன்னும் சிரமப்படனும்...

///இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. /// அதாங்க பெண் ஜென்மம்.

/// சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.///
அவளோட நேரம் என்னங்க பெருசு , ஒரு பெண் அவளோட வாழ்க்கையவே அவளுக்காக வாழ வில்லைன்னு ஆணித்தனமா அடுத்தவரே அணியினர் வாதங்களை அனலாக பறக்கவிட்டுள்ளனர் . தொடர்ந்து வாதிடுங்கள் தோழி .

ஒரு பெண் அடுத்தவர்களுக்காகவே தங்களின் நேரத்தை செலவழிக்கிறாள் என்று அந்த அணி உறுப்பினர்கள் வாதங்களை அனலாக பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .

தனக்காகவே அணியினரின் உறுப்பினர்களே , உங்களின் எதிர் வாதங்களை காண என்னோடு சேர்த்து உங்களின் எதிர் அணியினரும் காத்துக்கொண்டு உள்ளனர் . வாதங்களை விரைவில் பதிவிடுங்கள் .

அழைப்புக்கு நன்றி நடுவர் அவர்களுக்கு, நான் நினைத்ததை அப்படியே பிரேமா என்ற சகோதரி பதிவிட்டிறுக்கிறார். என்னிடம் fB கிடையாது , நான் எந்த சிரியல் பார்பதும் கிடையாது, அடிக்கடி வந்து விருப்பி எட்டி பார்ப்பது அறுசுவை மட்டும் தான் பல நேரம்களில் பதிவிட்டு விட்டு save செய்ய நேரம் கிடைக்காது இது எல்லாருக்கும் நடந்திருக்கும். காலையில் எழுந்து அனைவரின் பணிகளை முடிக்கும் வரை அந்த பெண்ணால் tea குடிக்க மனம் வராது , பல அன்பு கட்டளை வரும் முதலில் காபி குடிமா , சாப்பிட்டு பிறகு செய் என , வேளையால் இருந்தா கூட எல்லேறும் சாப்பிட்டாசா என்ற கேள்விக்கு பிறகு தான் அவள் சாப்பிட ஆரபிப்பால், சாப்பாடு பறிமாரும் போதும் அனைவர்க்கும் பாரிமாரி விட்டுதான் பெண் சாப்பிடுவாள். ஒரு சிறிய விடயத்தில் கூட நாம் எடுக்கும் முடிவு யாருக்கும் பதிக்குமா? என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா? என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே ! இதில் நான் சொல்வது சரிதானே

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்க செல்வதற்கு முன் எத்தனை வேலைகள் எத்தனை கடமைகள்; தினமும் பொழுது விடியும் ஆனால் பெண்ணிற்கு என்றுமே விடியல் இல்லை. குளிர் காலம், மழை காலம், வெயில் காலம் அனைத்தும் ஒன்றே. அன்றாட வேலைகளில் என்றுமே மனம் தளர்ந்ததில்லை. நமக்கு என்றோ ஒரு நாள் விடியும் என்ற விடியலை தேடி அலைகிறாள். சில பெண்கள் வீட்டு வேலைகளை வேகமாக முடித்து தனக்காக நேரம் செலவிட தயாராகும் பொது திடீரென முளைக்கும் அடுத்த வேலை; எதிர்பாராத விருந்தினர் வருகை; மறந்த முக்கியமான வேலை நினைவுக்கு வருவது; குழந்தை தூங்கி விழிப்பது போன்ற நேரங்களில் "நமக்கு நல்லது நடந்துட்டாலும் "! என்ற ஒரு புலம்பல். "அதான பாத்தேன், தெரிஞ்சதுதானே !" என்கிற ஒரு முனுமுனுப்பை பரவலாக காண / உணர முடியும். அவ்வளவு நேரம் தூங்கும் குழந்தை சரியாக அவள் சாப்பிடும் நேரம் எழுந்திருப்பது எவ்வாறு? இது விதி ஒன்றும் செய்ய முடியாது என்று தன் பசியையும் மறந்து அந்த குழந்தை பசியமர்த்த தயாராகிறாள். பிறகு தட்டில் வைத்த ஆறிய உணவையும் தூக்கி போட மனமில்லாமல் சூடு படுத்தி சாப்பிட நேரம் இல்லாமலும் அதையே உண்டு அடுத்த வேலைக்கு நகர்வெதெல்லாம் எத்தனை கொடுமை!

வார விடுமுறை மட்டும் என்ன விதிவிலக்கா? அன்றாவது சிறிது நேரம் அதிகமா தூங்கலாம்னு நினைக்கிற பெண் அங்கும்விதி விளையாடும் என்று யூகிக்க வில்லை; காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி? அந்த வாரத்தில் செய்ய முடியாமல் விட்ட வேலைகள் அனைத்தையும் வார விடுமுறையில் செய்ய முற்பட்டு முடியாமல் போக; இதுவும் எதிர்பார்த்ததே என்று நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை ! முடியாமல் போன சந்தர்பத்துக்காகவும் தன்னையே குறை கூறும் பெண்களும் உண்டு. நம் திட்டமிடலில் தான் குறை; அந்த சிறிது நேர ஒய்வு கூட நாம் எடுத்திருக்கக்கூடாது என்று மனம் வெறுத்து புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு ஜீவன் பெண் !!

- பிரேமா

மேலும் சில பதிவுகள்