பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

சரி திருமணம் முடிந்தது , பிறகு...
இப்பெல்லாம் எந்த பெண்னையும் (கூட்டுக்குடும்பத்தில்) நீ செய்தே ஆகவேன்டுமென பெரியவர்கள் ரொம்ப நெருக்கியடிப்பதில்லை . அப்படியே சொன்னாலும் அது சிறிய சதவிகிதமே இருக்கும் . இங்கே அவளது நேரம் என்பது எப்படி செலவிடப்படுகிறதுன்னு அலசலாம் .
மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அனைத்தும் மஞ்சளாக தெரியும் என்பார்கள் . அதுபோல புதிதாக ஒரு வீட்டினுள் நுழையும்போதே இவர்கள் இப்படித்தான் நம்மை அடக்குவார்கள் , நமக்கானதை , நம் வீட்டில் இருந்த சுதந்திரமான நேரத்தை இழந்துவிடுவோ இப்படி பல மன சஞ்சலங்களுடன் ஒரு பெண் செல்கிறாள் ( இப்பெல்லாம் இதுகூட குறைந்துவிட்டது) . பிறகெப்படி அவள் அனுசரிக்கமுடியும் ? அங்கே சில பல காலங்களில் இடையூறுகள் இருக்கின்றன ஒத்துக்கொள்கிறேன் . அது எவ்வளவு காலம் ? இதை யோசியுங்கள் .

உங்களுக்கு பிள்ளை வந்ததும் கண்டிப்பாக ஓய்வும் நேரம் ஒதுக்கப்படும் . அவர்களை கவனிக்க நேரம் ஒதுக்குவதை நீங்கள் கட்டாயம் என்பதுபோல மனதினுள் வடித்துக்கொள்கிறீர்கள் . உண்மையில் அப்படியல்ல தானாகவே கவனிப்பு , பொறுமை , தாய்மையுணர்வு இவையெல்லாம் இருப்பதால்தான் பெண் பெண்ணென்று அழைக்கப்படுகிறாள் .

ஆண் என்பவன் எப்படி தைரியம் நிறைந்தவனாக, உடலால் பலம் உடையவனாக , கம்பீரமாக , இப்படி வரையறுக்கப்படுகிறானோ , அதுபோலவே பெண் என்பவள் முன்சொன்னதுபோல வரையறுக்க படுகிறாள் . அந்த அடிப்படை தன்மைகளையும் கடந்து தன்னை நிலை நிருத்த நினைத்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும் .

சரி பிள்ளைகள் பெரிதாகிறார்கள் நிறைய கடமைகள் ( நீங்கள் கடமைகளை வேலைகளாக பாவிக்கிறீர்கள் . ஆகவே ) நிறைய வேலைபளுக்கள் கூடும் . அதற்கு என் நேரம் மட்டுமே செலவிடப்படுகிறது என சொல்கிறீர்கள் . உதாரணமாக பள்ளியில் ப்ராஜெக்ட் அம்மா உதவி செய்னு பிள்ளை வரும் . அவர்களுக்காக தேடி கண்டுபிடித்து உதவியும் செய்வோ . அதனை மேலோட்டமாக பார்த்தால் நமது நேரத்தை அவர்களுக்கு செலவிடுவதுபோல இருக்கும் . ஆனால் அந்த தேடலில் நீங்களும் புது விஷயத்தை கற்று தெரிந்து கொண்டீர்கள் என்பதை நினைக்கவும் , ஒப்புக்கொள்ளவும் மறுக்கிறீர்கள் . கணவன் வீடுவந்ததும் குத்திக்காட்டல் வேறு நடக்கும் நான் படுக்கை அறையை சுத்தம் செய்ய எண்ணியிருந்தேன் இன்னைக்கு உங்கள் பிள்ளை என் நேரத்தை வீணடித்து விட்டான் என்று . ஒன்று புரியவில்லை எனக்கு தி. பி நீங்களாகவே உங்களது வட்டத்தை சுருக்கிக் கொண்டீர்கள் , உங்களது நேரமே ஒரு கப் காப்பி குடிப்பதும் , விருப்ப புத்தகம் படிப்பதும் , அறை சுத்தம் பண்னுவதும் என்பதாக எணுகிறீர்கள் . சரிங்க ஒன்று கேட்கிறேன் , கஷ்டப்பட்டு அடுத்தவங்களுக்குன்னு நினைத்து நீங்க எதுவுமே பண்ணவேணாம் . உங்கள் விருப்பப்படி இருங்கன்னு ஒரு வாரம் உங்கள் வீட்டின் அனைத்து உறுப்பினரும் அவரவர் தேவைகளை அவங்களே பார்த்து செய்து கொள்கிறார்கள் . அப்போ நீங்கள் என்ன என்ன செய்வீர்கள் என்று எனக்கு சொல்லுங்கள் .

அடுத்த கட்டத்தில் பார்க்கலாம் நேர செலவழிப்புகளை . பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு சென்று அவர்கள் திருமணமும் முடிந்து அக்கடான்னு உக்காரும் வயது . வரும் பெண்ணோ அல்லது உங்கள் மகளோ தனிக்குடித்தனமோ , மாமியார் வீடோ நீங்கள் இருவர் மட்டும் இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்யபோகிறீர்கள் ??? மூன்று வேளை இருவருக்கான சமையல் , துணிதுவைப்பு இப்படி ஒப்பிக்கக்கூடாது . இது எல்லா வயதிலும் எல்லா பெண்களும் ( சொல்லப்போனால் இப்பெல்லாம் ஆண்களும் கூட) செய்கிறார்கள் . மற்ற நேரங்கலை என்ன செய்கிறீர்கள்?? பக்கத்து ஆத்து மாமியோட அரண்மனைக்கிளி ல நேத்து என்னாச்சு மாமி ? போனவாரம் நீயா ? நானா ? பார்த்தையோன்னோ?
இந்தவாரம் நம்ம அறுசுவை பட்டில நடுவர் என்ன இப்படி இழுத்து அடிக்கிறார் ? இப்படி கதை பேச. .. வத்தல் காயப்போட்டேன் மாமி இன்னைக்குன்னு பார்த்து ஒரே காத்தா இருக்கு...:-( இப்படியான பேச்சுக்கள் தான் வரும் . இதுமட்டுமா உங்கள் நேரம் ? உங்களுக்கான நேரம் எப்படியும் கிடைக்கிறது , அதனை எப்படி செலவழிப்பது என்பதை நீங்கள் சுருக்கிக்கொண்டீர்களோ என எனக்கு சந்தேகம்...

சரி ஒரு பெண் நேரத்தை தனக்காகவே செலவழிக்கிறாள் என்று வைத்துக்கொள்ளலாம் . அதை யும் அலசிப்பார்ப்போம் . தனிக்குடித்தனமோ அல்லது கூட்டுக்குடும்பமோ ஒரு பெண் செய்யும் கடமைகளை அவள்தான் பார்க்க முடியும் . முன்னமே சொன்னதுபோல பெண்னென்றால் இப்படித்தான் என பல நியதிகள் உள்ளனவே அதனடிப்படையில் . கோலம் போடுதல் உங்களின் விருப்பத்தின் படி , விருப்பப்பட்ட சமயங்களில் செய்கிறீர்கள் . சமையல் உங்களின் விருப்பம் பல நேரங்களில் அனைவருக்கும் பிடித்தமானது செய்கிறீர்கள் . பெண் வேலைக்கு செல்பவளாக இருந்தால் மற்ற வேலைகள் அனைவரது நேரங்களையும் கணக்கில் கொண்டே அட்டவனையிடப்படும் . இதில் எனக்கென்ன சந்தேகம்னா ? ஒரு சில சமயங்களில் மட்டும் உங்களுக்கு பிடித்தமானதை செய்து கொண்டு எங்கள் நேரத்தை நாங்கள் தான் செலவு செய்கிறோம்னு எப்படி சொல்லமுடியும் ? அதுவும் ஆணித்தரமாக !! நமக்கான நேரம் நமது குடும்பத்திற்கு இதில் மாற்று இல்லை ஒத்துக்கொள்கிறேன் . அதேபோல குடும்பத்தில் இருப்பவர்களும் உங்களுக்காக நேரமோ காலமோ ஒதுக்கி செய்கிறார்களா என்பதையும் உறுதி படுத்துங்கள் என்பது அனைவரது குரலாக இருக்குங்க .

உங்களுக்கு தேவையானதை தேவையான சமயத்தில் செய்துக்கமுடியுதா ? பெரும்பாலும் தனிக்குடுத்தனம் வாழ்வோர் இங்கே அதிகம் . அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களும் , வீட்டை நிர்வகிக்கும் பெண்களும் நம் தளத்தில் சமமாக உள்ளனர் . இவர்களை மனதில் வைத்தே யோசிக்கிறேன் , பெண்ணிற்கு உடம்பு சரியில்லை , சமையல் தெரியாத கணவர் , பிள்ளைகளோ சிறுவயது , உங்களுக்கு ஓய்வு தேவை . அந்த சமயத்தில் ஓய்வெடுக்க நேரம் கிடைக்குதா ? அதுதான் இங்கே கேள்வி ! உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் உங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காத எதுவும் உங்களுக்கானதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் ??? விடுப்பெடுத்து கணவன் கவனிக்க முடியுமா ? பிள்ளைகளை பள்ளி அனுப்பாமல் இருக்க முடியுமா ? கிடைத்த கால்பால் மாத்திரை சாப்பிட்டு பெண்கள் தான் அனுசரிக்கின்றனர் . ஏன் என்பதுதான் இங்கே கேள்வி ???

அடுத்து தி. மு லீவுக்கு பாட்டி உன்னைய ரொம்ப எதிர்பார்ப்பாங்க தங்கம் . உன் தோழிகளோடு அடுத்த லீவ்ல சுற்றுலா போயிக்கன்னு சமாதானம் சொல்லி மனதை மறைத்துவைத்து தன்னோடு பிள்ளைகளை அழைத்து செல்லும் நேரங்களில் அவர்களின் நேரம் பறிபோவது கசப்பான உண்மையே...!!!

என்னதான் வயதாகி அக்கடான்னு ஓய்வெடுக்கும் காலம் வரும்போதும் . பக்கத்து ஆத்து பங்கஜ மாமியோட வாயாடி நேரம் கழிக்கும் போதும் . அம்மா உன் பேரனுக்கு காலைல இருந்து வயித்தால போகுது என்ன பண்ணனும்னு தெரில அவவேற இன்னும் ஆஃபீஸ்ல இருந்து வரல நீ வரயா ? என மகன் கேட்டு முடிப்பதற்குள் , இங்கே ஆட்டோ ஏறிவிடும் அம்மாக்கள் அதிகம் . மாமியோடு சிறு வெட்டி பேச்சு என்றாலும்கூட உங்களின் நேரம் அங்கே உஙகிட்ட இருந்து ஜெட்டு ஸ்பீடுல பறந்துபோயிடுச்சேங்க.....!!!

எல்லாவற்றையும் விட என்னதான் தனது பொழுபோக்கிற்காக அறுசுவை பார்த்தாலும் , அதில் கேள்வி கேட்டு கலங்கும் தோழிகளுக்காக எவ்வளவு அவசரம் இருந்தாலும் ஆறுதல் வார்த்தையை பதிவிட அமர்வீர்களே.... அப்போது உங்கள் நேரம் மற்றவர்களுக்காகதான் செலவிடப்படுகிறது...:-)

எவ்வளவு தான் அலசி ஆராய்சி செய்து பார்த்தாலும் மனசு குழம்பிக்கிட்டே இருக்குங்க . இரு பக்கமும் இணையான வாதங்கள் உங்களிடம் இருந்தும் கிடைத்துள்ளன . என் மன தராசிலும் இரு பக்க வாதங்கள் மேலும் கீழுமாக ஊசலாடிக்கொண்டே இருக்கின்றது . இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் . அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை . அதே சமயம் இருக்கும் உண்மையை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் .

சில சமயம் யோசித்தேன் பெண்கள் தங்களது நேரத்தை தனக்கே தனக்குன்னு வைத்துக்கொள்ள தவறுகிறார்கள் என . அப்படி அவள் இருந்தால் சுயநலவாதி ஆகிவிடுவாளல்லவா ? சரி தன் சொந்தங்கள் மற்றவர் அல்ல உண்மையே . ஆனால் தகுந்த நேரத்தில் கிடைக்காத ஒன்று சரியா ? இப்படிதாங்க பல குழப்பம் வருது .

இன்னொரு கேள்வியும் வந்தது தனக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை . அதாவது மற்றவர்களுக்கு செய்யும் கடமை வலையில் பெண் சிக்கிக் கொள்வதால் அவளுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லைன்னு பலர் சொன்னாங்க . அப்போ ,

" யூடியூப் போல பல சமூக தளங்களில் உபையோக தகவல் வீடியோஸ் பெண்கள் வெளியிடுறாங்களே தனது நேரத்தை தான் உபயோகிக்காமல் அது எப்படி சாத்தியம் ???"

"சிநேகிதி போன்ற பல புத்தகங்களில் பெண்கள் இன்னதுன்னு வரையறுக்க முடியாத அளவுக்கு அனைத்து பகுதிகளிலும் எழுதுகிறார்களே... அது எப்படி சாத்தியம் ??? "

"பல செய்தி சேனல்கள் , தொடர்கள், காட்டுக்குள் செல்லும் தொகுப்புகளில் பெண்கள் செயல் படுகிறார்களே அது எப்படி சாத்தியம் ???"

"சற்று நேரம் முன்னதாக இரு சக்கர வாகன விளம்பரம் பார்த்தேன் . அதில் பெண்கள் சுதந்திரமாக பறக்கிறார்களே அது எப்படி சாத்தியம் ??? "

"நமது தளத்தின் மூத்த சகோதரிகளையே உதாரணம் எடுக்களாம் ஜலீலா , தளிகா இன்னும் பலர் புத்தகங்களில் குறிப்புகள் துவங்கி கதைகள் வரை படைக்கிறார்களே அது எப்படி சாத்தியம் ???"

"இதெல்லாம் இருக்கட்டும்ங்க ஆண்கள் செய்யக்கூடியதுன்னு பிரித்து வைக்கப்பட்ட பாதுகாப்புப்படையில் பல பெண்கள் சேர்ந்து படைக்க முடியாத , அட்டவணைக்குள் அடக்க முடியாத அளவு சாதனைகள் படைக்கிறார்களே இது எப்படிங்க சாத்தியம் ???? "

"எனக்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ளாதபட்சத்தில் பட்டி துவங்கு, நடத்தி, தீர்ப்பு கொடுப்பது எப்படிங்க சாத்தியம் ???"

இப்படி உலகம் முழுக்க பெண்களை பற்றி யோசித்து பார்க்கும்போது பலவிதங்களில் கருத்து மோதல்கள் நடத்தி (எனக்குள்ளும்தாங்க) ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் . அவளுக்கான நேரத்தை யாரும் பிடுங்குவது இல்லை . அவளாக கட்டுண்டு ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு யாரோ தன்னை தன் நேரத்தை திருடுவதான மாயையில் உள்ளாள் . அவள் அதனை உடைத்து தன் நேரத்தை அனைத்து விதங்களிலும் உபயோகமானதாக செலவழித்தால் மிகுந்த மகிச்சியளிக்கும் .

பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை
சார்ந்தவர்களுக்கா ?"
தீர்ப்பு - " பெண்களின் நேரம் அவளுக்கானதே என தீர்ப்பு வழங்குகிறேன் "

பட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல . தொடர் பட்டிகளிலும் தங்களின் பங்களிப்புகளை கொடுக்க வேண்டும்.

பட்டமளிப்பு விழா இருக்குங்க... காத்திருங்கள்......

<< நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்கன்னு சொல்ல முடியாதே!>> (சிரிக்க மட்டும்)

உங்கள் தீர்ப்புக்கு நன்றி, இனிமேல் என் நேரத்தை எப்படி சிறப்பாக உபயோகிக்கிறதுனு பார்க்கிறேன்!!

எதிரணி பேச்சாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் :-)

- பிரேமா

எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்..

ஆனால் நான் பதிவிட நினைத்த ஒன்றை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.. திருமணத்திற்கு முன் அனைத்து நேரங்களும் பெண்கள் தனக்காக மட்டுமே செலவிடுகிறாள்..

இந்த பதிவை போட சற்று தயங்கி விட்டேன்.. என் மனதில் போட்டிருக்கலாம் என்று தோன்றியது.. ஆனால் அனைவரும் திருமணம் முடிந்தபின் நடப்பது பற்றி பேசியதால் நானும் கொஞ்சம் தயங்கி விட்டேன்..

ஆனால் அதை பற்றி நீங்கள் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள்..

தொடர்ந்து உங்கள் பட்டி வரவேற்க படுகிறது..

யார் வந்தாலும் அன்பாய் வரவேற்கும் நடுவர்க்கு நன்றிகள் பல, தீர்ப்பை வெளியிட்டதில் மகிழ்ச்சி, இன்னும் பல வாதம்கள் வைத்திருப்பேன் ஆனால் எதிரணியில் தனது கருத்துக்களை பதிவிட்டேர் என் மதிப்புக்கும், அன்புக்கும் உரியவர்கள் ( இது அவர்களுக்கே தெரியாது , அவர்களின் வலைப்பகுதி சில வற்றை படித்த பாதிப்புதான்) இருதியாக எதிரணிக்ககும் நன்றிகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அன்பான நடுவருக்கும் பங்கு கொண்டு தங்கள் கருத்தைக்களை பதிவு செய்த தோழிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் மற்றும் வாழ்த்துக்களும்.

இந்த தடவை வாதங்கள் கொஞ்சம் குறைவுதான். பரவாயில்லை, இனி வரும் பட்டி மன்றங்களில் ஜமாய்ச்சுடலாம் வாங்க.

நடுவருக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்.

அப்படியே அடுத்த பட்டிமன்றத்துக்கான நடுவரை நியமிச்சுடுங்க.

இனி இதே போல, அடுத்தடுத்த நடுவரை நியமிச்சுட்டா, பட்டிமன்றம் சிறப்பாக தொடரும்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

வானி அக்காக்கு இட்லி செய்து கொடுத்தவர் நீங்கள் தான( அந்த குறிப்பை பார்த்துதான் நான் இட்லி சமைக்க கத்துகிட்டேன்)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

கலந்துகொண்ட சத்யா , கவி , ரஜே சூர்யா , சீதாம்மா , ஃபாத்திமா , பிரேமா , ரேணு , கல்யாணி , இந்து அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன் .

பட்டிக்கு முதல் ஆளாகவந்து இடம்பிடித்த (மைக்பிடித்த) தோழி சத்யாவிற்கு பொன்னாடையும் பூங்கொத்தும் கொடுத்து மரியாதை செய்கிறோம் . கலந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களுக்கும் ஒரு பொன்னாடை வழங்கப்படுகிறது.

இந்த பட்டியில் ""புதுமுக பேச்சாளர் விருது"" சரவெடியாக தன் அணிக்கான வாதங்களை கொடுத்து இவங்க நிறைய பட்டியில் கலந்திருப்பாங்கபோலன்னு நினைக்கவைத்த"" தோழி பிரேமா"" அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பட்டியின்"" சிறப்பு பேச்சாளர் விருது"" சந்தேகமே இல்லாதபடிக்கு நம்ம"" சீதாம்மாவிற்கு"" வழங்கப்படுகிறது . இரு பதிவுகள்தான் என்றாலும் அனைவரின் மனதிலும் ஒருபக்கமே யோசிக்கத்தூண்டும் தலைப்பில் அந்த பக்கத்திற்கு எதிராக இருந்து வாதாடி இருக்கிறார் . பதிவுகள் குறைவாக இருந்தாலும் ஒரே கருத்தால் தீர்ப்பின் போக்கையே மாற்றியிருக்கிறார் . ஆமாம் சீதாம்மா தன் சொந்தங்களான நபர்கள் எல்லாம் எப்போ அடுத்தவங்க ஆனார்கள் ? என கேட்டிங்க பாருங்க ஒரு கேள்வி . அது என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது .

நம்ம பட்டியின் ""அதிரடி பேச்சாளர் விருது"" நம்ம ""கவிக்கு"" வழங்கப்படுகிறது . அவ்வப்போது வந்தாலும் தனது அதிரடி கருத்துகளை பதிவிட்டமைக்காக .

விருது பெற்ற அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்...:-) மத்தவங்க யாரும் லைவ் ஷோல வர சின்ன பசங்கபோல அழக்கூடாது.. .ஒரு பெட்டி சாக்குலெட்கள் அனுப்பிவைக்கப்படும்....:-)

பிரேமா, பட்டியில் கலந்து கொண்டதற்கும் , தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றிகள்.... இப்படியே அனைத்து பட்டிகளிலும் கலந்து பலம் சேர்க்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்