பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

பயப்படாதீங்கோ... எந்த காரணத்துக்காகவும் பட்டி நிக்காது, வனி விடவும் மாட்டா. சரி யாரும் வர விருப்பம் இருந்தா பார்ப்போம் என்றே காத்திருந்தேன், வரல... பரவாயில்லை, நாம இருக்கோம்ல. :) பார்த்துடுவோம். நான் வரலன்னாலும் பட்டிக்காக நடுவர் தேடும் பணியில் விடாது சரியா செய்துடறீங்க... அதுக்காக என் நன்றிகள் பல. இப்போ நிம்மதியா வாதிட வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலஷ்மி.. நீங்களும் இம்முறை கூவ கை குடுத்தீங்களா... ;) கலக்குங்க. எப்போ ஃப்ரீ ஆகறீங்கன்னு மறக்காம சொல்லுங்க, காத்திருக்கோம். உங்க தலைமையில் நானும் கவிசிவாவும் கூட்டணி அமைக்க.

சாந்தினி, தனா, பூர்ணிமா... மிக்க நன்றி. பரவாயில்லை, முடியும்போது சொல்லுங்க... உங்களுக்காக காத்திருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரிப்பா, வேலை காரணமா இப்போ தான் உங்க அழைப்புகளை பார்க்க முடிஞ்சுது . முன்னாடியே பார்த்தாலும் என்ன இதே பதில் தான்.
இன்னும் நடுவர் பதவி வகிக்கற அளவுக்கு தகுதி வளர்த்துக்கல. இப்போதைக்கு பார்டிசிபேட் பண்றதுக்கு இடம் கிடைத்ததே பெரிய விஷயம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழைய பட்டிகளை படித்து வரேன்.
நிச்சயமா காலம் வரும் போது பட்டிக்கு நானே வாலண்டியரா வந்து ஜட்ஜ் போஸ்டிங் கேக்கறேன்பா.

தேங்க்ஸ் பார் ஆபரிங்!

பட்டி இனிதே நடக்க வாழ்த்துக்கள்

அடுத்த பட்டியின் தலைப்புகளை இங்கே பதிவிடலாமா?

- பிரேமா

தலைப்பை ரெடி பன்னிட்டேங்கலா..சூப்பர் சூப்பர். கலக்குறேங்க..

சீக்கிரம் ஆரம்பித்து விடுங்கள்.. நான் மெதுவாக கலந்து கொள்கிறேன்..

*

- பிரேமா

மேலும் சில பதிவுகள்