Fever help me frnds

Hi friends enaku 1 week ah fever and cold, enaku erumal than athigama iruku thunga mudila frnds, paiyan ku 3month mudiya pothu avanku epovathu than thaipaal kodukaran today avanku fever and erumal start agiduchi, nan paal kodukaratha niruthitan, ithanal problem varuma friends, kulanthai kum enakum, enaku erumal nika vali solunga frnds, nanum hospital poitu vanthan tablets sapdaran apovum sari agala

குழந்தையையும் காட்டி மருந்து எடுங்கள்.

பாலூட்டுவதை நிறுத்தியதால் உங்களுக்கு பால் கட்டிக் கொள்ளலாம். இப்படியே நிறுத்திவிடுவதானால் சரிதான். அல்லாமல் திரும்ப பாலூட்ட ஆரம்பிக்க நினைத்தால் சிரமங்கள் இருக்கலாம்.

அடிக்கடி வெந்நீரில் உப்பு கலந்து தொண்டையில் விட்டு கொப்பளியுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் அதிமதுரம் சாப்பிட்டு பாருங்கள்..
குழந்தைக்கு மூன்று மாதத்தில் தாய்ப்பால் நிறுத்தி விடாதீர்கள்..

Coldக்கு T.levocetral 5mg இந்த மாத்திரையை போட்டு பாருங்கள்.. ரொம்ப சின்ன மாத்திரை நல்ல பலன் தரும்..

எனக்கு recentஆக சளிக்கு டாக்டர் கொடுத்த மாத்திரை தான்..

Daily 1 time thaipaal kodukaran mam, bayanthututu than kodukaran, enkitaum paal ila avan ethir pakara alavuku, cold than athigama iruku, enaku moochi koda iluthu vida mudila thondaila, inga sema malai velila poga mudila mam, tomorrow hospital poi pakanum malai ilana

Daily 1 time thaipaal kodukaran mam, bayanthututu than kodukaran, enkitaum paal ila avan ethir pakara alavuku, cold than athigama iruku, enaku moochi koda iluthu vida mudila thondaila, inga sema malai velila poga mudila mam, tomorrow hospital poi pakanum malai ilana

Thaipaal niruthala pa, enaku fever and cold irukarathunala paiyan ku fever and cold vanthuduchi pa, athanala koduka bayama iruku, nenga sona tablets tomorrow vangitu vara solran pa

Thaipaal niruthala pa, enaku fever and cold irukarathunala paiyan ku fever and cold vanthuduchi pa, athanala koduka bayama iruku, nenga sona tablets tomorrow vangitu vara solran pa

நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. என் பதில் இனி உங்களுக்குத் தேவையாக இருக்காது. மற்றவர்களுக்காக இருக்கட்டும்.

குழந்தைக்குக் காய்ச்சல் வர முன் பாலூட்டப் பயந்தால் நியாயம் இருக்கிறது. தொற்றாமலிருக்க வேண்டும் என்கிற பயம் - நியாயம் தான். குழந்தைக்கு வந்தபின் பாலூட்டாமல் விடுவதில் அர்த்தம் இல்லை. அதனால் வந்த காய்ச்சல் குறையாது.

உண்மையில், குழந்தைக்குக் காய்ச்சல் இருக்கும் சமயம் நீங்கள் தாய்ப்பாலை நிறுத்தி (தற்காலிகமே என்றாலும்) புட்டிப் பால் கொடுக்க, அதற்குப் பழக்கமில்லாத குழந்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியாமல் பாலருந்தாமல் விட, நீரிழப்பு ஆகுமே! தொற்றும் என்கிற பயம் இருந்தால் பாலை பம்ப் செய்து கொடுக்கலாமே!

தாப்பாலின் வழியாக கிருமிகள் குழந்தையின் உடலினுள் கடத்தப்படாது. தாயின் கை, தோல், உமிழ்நீர், வழியாகக் கடத்தப்படலாம். பாலூட்டும் முன் கைகளையும் மார்பகங்களையும் நல்லபடி சுத்தம் செய்துகொண்டால் போதும்.

‍- இமா க்றிஸ்

அக்கா

நீங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். டாக்டரிடம் கேட்டாலும் அதை தான் சொல்வார். பொதுவா உடம்பு சரியில்லாத குழந்தைக்கு தாய்ப்பால் தான் சிறந்த மருந்து.

வந்தது வந்திருச்சு நீங்க பயப்படாம கொடுத்துட்டே இருங்க. எனக்கு என் பொண்ணு 1 1/2 மாசம் இருக்கும் பொது காய்ச்சல் வந்தது அப்போ டாக்டர் பால் கொடுக்கலாம் ஒன்னும் இல்லனு சொன்னாங்க. நாம எடுக்கிற மருந்தும் பாலோட கலந்திரும்ல அப்படினு நினச்சுட்டேன்.

இருமலுக்கு 2 ஏலக்காய்களை தோல் நீக்கி அதன் விதைகளை மென்று தின்று வெந்நீர் குடிக்க இருமல் வராது. முயற்சி செய்து பாருங்கள். இது எனக்கு நல்ல பலன் தந்தது. கஷாயம் போட்டு குடிங்க பால் கொடுக்குறது மூலமா குழந்தைக்கும் அது போய் சேர்ந்து சளி குணமாகும்.

குழந்தைக்கு : வெற்றிலையில் நல்லெண்ணெய் / பேபி விக்ஸ் தடவி தீபத்தில் காட்டி சூடு பொறுக்கும் அளவுக்கு குழந்தையின் நெஞ்சில் வையுங்கள்

- பிரேமா

Sorry late ah message panran, 3 weeks ah fever ipothan nala irukan mam, paiyan ku maximum maatu paal than tharom, enkita thaipaal ila 1 time matum kodukaran, thaipaal ku thevaiyana food saptalum paal ila mam, maatu paal nala kodika palagitan, but enaku kastam ah en enaku thaipaal ilanu, enga anni 2 perum thaipaal than avanga kulanthaiku tharanga, en frnd ku thaipaal ilanu sonanga

Thanks pa, but late reply panran pa, ipo than health nala iruku pa, paiyan maximum maatu paal than tharom pa, nan 1 time than thaipaal tharan pa

மேலும் சில பதிவுகள்