வணக்கம். நேற்று இந்த ஸ்கேன் எடுத்தாங்க. எனக்கு 24 வாரங்கள் ஆகின்றது. 2வது குழந்தை. அந்த ரிப்போர்ட்டில் foetal right renal pelvis prominent measuring 4.7mm in A.P.diameter. foetal left renal pelvis is prominent measuring 5.5mm in A.P.diameter என்று குறிப்பிட்டு உள்ளது.அப்படி என்றால் என்ன? Dr இது பயப்படத்தேவையில்லை என்று கூறினார். விளக்கம் சொல்லுங்க. Plz... மிகவும் கவலையாக உள்ளது...
வஜி
என்னுடைய குழந்தைக்கும் இது உள்ளது.. ஐந்தாம் மாதம் ஸ்கேனில் தெரிந்தது.. குழந்தை பிறந்ததும் நார்மல் ஆகி விடும்.. பயப்பட வேண்டாம்..
Dear Indusha
இது உங்களுக்கு எத்தனாவது மாதம். பிரசவ தேதி எப்போது? இந்த பிரச்சனை சரியாக நான் ஏதாவது சாப்பிட்ட வேண்டுமா இல்ல தவிர்க்க வேண்டுமா சொல்லுங்க. உங்கள் Dr உங்களுக்கு ஏதாவது advice சொன்னார்களா சொல்லுங்க.
வஜி
எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றது.. இதற்காக உணவு கட்டுப்பாடு எதுவும் கிடையாது..
குழந்தை பிறந்ததும் ஸ்கேன் செய்து பாருங்கள்.. 45நாட்களுக்குள் சரியாகி விடும்..
நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருங்கள்.. இது ஒன்றும் இல்லை..
Dear Indusha
இப்போது தான் மனசு கொஞ்சம் அமைதியாக உள்ளது.நன்றி உங்களுடைய பதிவுக்கு.
Dear Indusha
தொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது. 45 நாட்களில் சரியாகிவிடும்னு சொல்லி இருக்கீங்க. இது என்ன பிரச்சனைனு சொல்லுங்க plzz...
Dear Indusha
தொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது. 45 நாட்களில் சரியாகிவிடும்னு சொல்லி இருக்கீங்க. இது என்ன பிரச்சனைனு சொல்லுங்க plzz...
வஜி
நான் தொந்தரவாக எடுத்து கொள்ளவில்லை.. எனக்கு ஆண் குழந்தை பிறந்தது..
இது என்ன பிரச்சனை என்று உங்களிடம் சொல்லாமல் இருப்பது நல்லது..
ஆனால்100% சரியாகி விடும்.. நம்புங்கள்.. இதை நினைத்து பயம் வேண்டாம்..
நான் உங்களிடம் ஒன்று சொல்ல நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்ல.. வீட்டில் உள்ள அனைவரும் பயப்படுவார்கள்..
எனக்கும் குழந்தை பிறக்கும் வரை டாக்டர் எதுவும் சொல்ல வில்லை..
இது நார்மல் தான்.. சந்தோஷமாக இருங்கள் வஜி..
Indhu sis
Na ipo 24 week pregnant. Anamoly scan la baby ku renal pelvis nu sonanga. Athu baby poranthu urine pona sari agidum nu sonanga. Unga baby kum renal pelvis irunthuchinu sollirunthinga. Ungalku epo theyrinjathu sis baby ku ipti irukunu? Aprm unga baby ku kidney evlo size irunthuchi sis. Konjam sollunga sis. Periya problem illanu solranga doctor. Irunthalum bayama iruku sis.
சத்யா சந்துரு
எனக்கும் அனோமலி ஸ்கேன் ல இருந்தது.. Left kidney 3.1, r.kidney 5.1 dimensions இருந்தது.. இப்போது சரியாகிவிட்டது..
இது ஒன்றும் இல்லை.. குழந்தை பிறந்ததும் செக் செய்து விடுங்கள்..