enntha mathiri uravu vaithu kulanthai pettru kolvathu

ennaku thirumanam ahi 1 varudangal ahindrana anal innum kulanthai illai varutham kidaiyathu irunthalum pettukollven anal viraivaka pettru kolla vendum sop please help me sister eppadi irunthal sikkiram kidaikum endru ungal phathilai ethir parthu BANUDHAMU
<!--break-->

Edhu madri ungaluku varalaya

I love babieeeeeeee

enaku thirumanam agi 1 year aguthu..anal en wife innum consive agala..doctor kita check pannathuku enaku sugar iruku athanal unga wife consive agala nu sonnanga..2 months tablet eduthukita but en wife consive agala...enaku sugar iruntha en wife consive aga matala

Hai Sisters...
enaku marriage agi 7 months mudinjiduchi...first month period yeppothum pola vanthahtu..but second month la irunthu 5 to 10 days thalli poguthu..and enaku enna problem and yeppo nan consive aguven?pls advice me...

எனக்கு இது பற்றிய அறிவு போதாது. ஆனால் யோசித்துப் பார்த்துச் சொல்கிறேன். //1 year aguthu.// இல்லைங்க, ஒரு வருடம் மட்டும் தான் ஆகுது. அதில் முதல் மாதம் & இந்த மாதத்தைக் கணக்கில் எடுக்க வேண்டாம். மீதி 10 மாதங்களிலும் சரியான சந்தர்ப்பங்கள் அமைவது 50% என்றால் கூட 5 சந்தர்ப்பங்கள் மட்டும் தான் கடந்திருக்கிறது. 'இன்னும் கன்சீவ் ஆகல' என்று கவலைப்பட வேண்டாம்.

//en wife innum consive agala.// ;) இந்த வரிக்கு தனியாகப் பதில் வைத்திருக்கிறேன், பலருக்காக.

//2 months tablet// போதும் என்றார்களா? கூட உணவுப் பழக்கத்தை மாற்றச் சொல்லவே இல்லையா? 2 மாதம் முடிந்ததும் திரும்ப சுகர் லெவர் சோதித்துப் பார்க்க வேண்டும் எனவில்லையா?

//but en wife consive agala.// கர்ப்பம் சுகரால் மட்டும் நிர்ணயிக்கப் படுவது இல்லையல்லவா? யோசிக்காதீங்க. //enaku sugar iruntha en wife consive aga matala// ஆக மாட்டாங்கன்னு இல்லை. தாமதமாகும். கர்ப்பத்திற்கு நீங்களும் கான்ட்ரிப்யூட் பண்றீங்களே! நீங்க ஆரோக்கியமா இருக்கிறது முக்கியம்.

மாத்திரைகளை இரண்டு மாதங்கள் மட்டும் எடுத்து அந்த 2 மாதங்களுள் கர்ப்பமாகி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கும் மணமாகி இரண்டு மாதங்களுள் கர்ப்பமாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லையல்லவா? தொடர்ந்து வரும் மாதங்களும் உங்கள் ஆரோக்கியம் சரியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் சரியாக இருந்தால்தான் உங்கள் குடும்பத்திற்கு நல்லது. குழந்தை பிறந்த பின்னால், 'காரியம் ஆகிற்று,' என்று சுகரைக் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். மாத்திரை எடுக்கலாம். தேவை இல்லாவிட்டாலும் உணவையும் கவனித்து உடற்பயிற்சியை அதிகரியுங்கள். இது இனி தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

கர்ப்பத்திற்காக என்று நினைப்பதை விட்டுவிட்டு, உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியம் என்று கருதி முதலில் சரியானபடி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சுகர் லெவல் சரியான பின் (வேறு எந்தப் பிரச்சினையும் சொல்லவில்லை நீங்கள்.) மூன்று நான்கு மாதங்கள் பொறுமையாகக் காத்திருங்கள். எல்லாம் நலமாகும்.

‍- இமா க்றிஸ்

சகோதரர்கள் யாரும் கன்சீவ் ஆவதைப் பெண்ணோடு 'மட்டும்' பொருத்திப் பார்க்க வேண்டாமே!

ஆண்களும் சேர்ந்து தானே கன்சீவ் ஆகுகிறீர்கள்!!!

குழந்தை பிறந்த பின் எப்போதும், 'என் மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கு' என்பீர்களா? 'எனக்குக் குழந்தை பிறந்திருக்கு,' என்றுதானே சொல்லுவீங்க! 'என் பையன் மாகாணத்தில் ஃபர்ஸ்ட் ராங்க்,' என்பீர்களா அல்லது, 'என் மனைவி பையன் மாகாணத்தில் ஃபர்ஸ்ட் ராங்க்,' என்பீர்களா!! அதனால், 'மனைவி கன்சீவ் ஆகல' என்று சொல்வது என்னைப் பொறுத்த வரை... ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இதை சகோதரர் ராஜ்கோபாலுக்குச் சொல்லவில்லை. தாய்மை (தந்தைமை!!) அடையக் காத்திருக்கும் அனைத்து ஆண்களுக்குமாகச் சொல்கிறேன்.

'மனைவி கன்சீவ் ஆகியிருக்காங்க,' என்கிறதும் வேண்டாம். கன்சீவ் ஆகுவது கணவரும் சேர்ந்து தான். அதனால்... வேலைகளையும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். பெண் வயிற்றில் சுமக்கும் காலம் முழுமையும் பிறகு குழந்தை வளர்ப்பிலும் எல்லாக் கஷ்டங்களிலும் பங்குகொள்ள வேண்டும். பெண் குழந்தையைச் சுமக்க, அவள் மீதிச் சுமைகளைத் தந்தையாகப் போகிறவர் சுமந்தால் தான் கர்ப்பத்திற்கும் பிறந்த குழந்தைக்கும் தந்தை என்கிற பெருமைக்கும் முழுமையான அர்த்தம் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

புத்தம் புதிய உறுப்பினர் _ உங்கள் வரவு நல்வரவாகட்டும் சுகன்யா.

ஏழு மாசத்துல முதலாவதை விட்டுருங்க. ஆக ஆறே ஆறு மாசம்தான் ஆகி இருக்கு கண்ணா. யார் என்ன பேசினாலும் யோசிக்காதீங்க. இன்னும் காலம் இருக்கு. அதுவரை ஜாலியா இருங்க. பீரியட்ஸ் தள்ளிப் போறதைப் பற்றி வேணுமானா ஒரு டாக்டரிடம் கன்சல்ட் பண்ணலாம். காலம் தாழ்த்தாமல் அதை இப்பவே பண்ணுறது நல்லது. //enaku enna problem// உங்களுக்கு ப்ராப்ளம் என்று யார் சொன்னாங்க! நீங்களாவே இல்லாததை ஏன் நினைச்சுக்கறீங்க! 7 மாசம் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

// yeppo nan consive aguven?// முதல்ல அமைதியா இருக்கணும்.

நாகபட்டினத்துல இருந்து என்னை அறுசுவை நண்பர் ஒருவர் பெங்களூருக்கு பஸ் ஏற்றி விட்டார். கிளம்பும் முன் ஒரு அட்வைஸ் சொன்னார். "கண்டக்டர்ட்ட, 'எத்தனை மணிக்கு பெங்களூர் போய் சேருவோம்?' என்று மட்டும் கேட்டுராதீங்க," என்றார். எப்போ போய்ச் சேருவோமோ அப்போ தான் போய்ச் சேருவோம் இல்லையா? ஒரு நாளைக்கு 5 மணி நேரம் எடுக்கும் ட்ரிப், ட்ராஃபிக் சமயம் 6 மணி நேரம் ஆகும்; ட்ராஃபிக் ரொம்ப லைட்டா இருந்தா 4 மணி நேரத்துல போனாலும் போகலாம். 'போய்ச் சேரும் போது போவோம் தானே!' என்று இல்லாமல் அதையே நினைத்துக் கொண்டிருந்திருந்தால் பயணம் முள்ளாகத் தெரிந்திருக்கும்; ரசித்திருக்க முடியாது.

வாழ்க்கைல எதிர்காலத்தில் வர இருக்கும் சந்தோஷங்கள் முன்னாலேயே வரவில்லையே என்று கவலைப்படும் போது... அனுபவிக்க முடிகிற பல சந்தோஷங்கள் எம் கவனத்துக்கே வராமல் அர்த்தமில்லாமல் காணாமல் போய்விடும். கிடைக்கும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து பாருங்கள். மீதி தானாக அமையும்.

‍- இமா க்றிஸ்

Unga answer very super.padikkum potu oru unarvu varutu.its really true.nice.and thank you very much

thanks imma..

ennoda period 22.12.218 and periods mudinja date 25.12.2018 nan next yenth date la en husband kooda contact pannurathu?yenth date la contact la irunthaa,enaku consive chance kidaikum?..pls reply

past three months aga ,3 days,5 days ,7 days nu period thalli poguthu...ithu consive agurathuku symtoms ah ?nan period thalli pogum pothu weight thookama irunthaa sari aguma?

மேலும் சில பதிவுகள்