பித்தப்பை நிக்கம்

Yaravathu gallbladder remove panni erukingala? Laproscopy la? Evolo nall rest yeduthinga? Plz. Sollunga

Enakku gall bladder remove panni one year aaccu.laproscopy panna 50000 aaccu.1 week Vali eruntussu.nama c section Panna evlo nal wait tookkama rest la eruppomo appadi tan erukkanum.yarukku operation pa.

Ennaku tha sis. 1 month rest OK travel pannalama? After one month. Kunichu thimirdhu vela pakkalama? Disegation problem yellam varutha?

Ungalukku evlo nal enta problem erukku.eppo operation

Oru 2 months ah pain. Eruku 25 operation

Anta pain vanta tanga mudiyate.nan 10 days rompa kasta patten.kulanta pirantu 2 masam.operation pannum annaikku tan en pappa mugam partu sirissusu.ata marakkave mudiyatu

Ok ok. Eppo yethum prb eruka? Stone size evolo erunthuchu? Yenga operation panniga. ?

Appo appo stomach pain varum. enakku 13 mm eruntussu.ungalukku evlo erukku

ennaku ankulandhai piranthu 20 nal akuthu first kolandhai avan name kowshik nethi fullya ora alukai doctor kida kamichom pal paduthu kidu kodukurathala katru vayathukula poitu athu velila vandha dhan normal ya irrupanu solluranga ennku opertion panni kolandai eduthanga athana ukanthu pal koduka mudiyala ellarum bayamuruthuranga (pirali vayu) kundhai romba alukuran 3 masam varikum epadi dhan irrukunu
konjom yarum pathil sollunga please

Chinna chinnma neriyaa erukam. Pain ah eruku

முதலில்... பித்தப்பை நீக்கம் என்கிற இழையின் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். இனிமேல் சரியான இடத்தில் வைக்கப் பாருங்கள்.
¬¬¬¬¬
//pal paduthu kidu kodukurathala// இல்லாவிட்டாலும் கூட கத்துவார். குழந்தைகள் இந்த வயதில் எதற்காக அழுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்.

//katru vayathukula// அது உட்கார்ந்து இருந்து கொடுத்தாலும் போகும். குழந்தை வாயில் கையை வைத்தும் இழுப்பார். பால் குடிக்கும் போது குழந்தை வாயைச் சரியாக வைத்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். உங்களை அரைகுறையாகப் பற்றியிருந்தால் பாலோடு காற்றையும் உறிஞ்சலாம்.

//athu velila vandha dhan normal ya irrupanu solluranga// ஆம், அப்படியும் இருக்கலாம். பாலூட்டியதும் தோளில் போட்டுத் தட்டுவது இதற்காகத் தான். தோளில் எனும் போது... நன்கு உயர்த்திப் போட வேண்டும். குழந்தையின் வயிறு உங்கள் தோளில் இருக்க, நீங்கள் கையை விட்டால் குழந்தை உங்கள் முன்பக்கம் சரிந்து நழுவுவது போல் இருக்கக் கூடாது. கையை விட்டால் அப்படியே குழந்தை நழுவாமல் பாலன்ஸ்டாக உங்கள் தோளில் இருக்க வேண்டும். உங்களால் வைத்திருக்க முடியாது. உங்கள் கணவரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் சற்றுப் பயமாக இருக்கும். தூக்கும் ஆள் தைரியமாக இருக்க வேண்டும். தான் முதலில் சரியாக பாலன்ஸ் செய்து நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறகு குழந்தையைத் தோளில் நான் சொன்னபடி போட்டு மெதுவே முதுகைத் தடவி விட்டால், காற்று இருந்தால் நிச்சயம் ஏப்பம் வெளியேறும். முயற்சி செய்து பாருங்கள். :-) ஒரு தடவை செய்துவிட்டால் பிறகு பயம் தெளிந்துவிடும். இன்னொரு வழி இருக்கிறது. குழந்தையைப் படுக்க வையுங்கள். உங்கள் வலது கையால் குழந்தையின் இடது பாதத்தையும் இடது கையால் வலது பாதத்தையும் பிடித்துக் கொள்ளுங்கள். குழந்தையின் இரண்டு கால்களையும் ஒரே சமயம் குழந்தை சைக்கிள் மிதிப்பது போல, மெதுவே அசைக்க வேண்டும். வயிற்றில் வாய்வு இருந்தால் வெளியேறுவது தெரியும். குழந்தை இலகுவாகுவது புரியும்.

அதற்குப் பின்னும் கத்தினால் பயப்பட வேண்டாம். குழந்தைக்குத் தெரிந்ததெல்லாம் அழுவதும், பால் அருந்துவதும், தூங்குவதும் நாப்பியை அழுக்காக்குவதும் மட்டும் தான்.

திடீர் வளர்ச்சிப் படிகளின் போதும் அதிகம் அழுவார்கள் என்கிறார்கள். வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் பால் இல்லாமல் இருந்திருந்தால் அன்று அழுகை அதிகமாக இருக்கலாம். மறுநாள் தேவை காரணமாக உங்கள் சுரப்பு அதிகரிக்கும். அழுகை சரியாகலாம் அல்லது இரண்டு மூன்று நாட்கள் இதே பாட்டர்ன் தொடரக் கூடும். பயப்பட வேண்டாம். அழுவதால் குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்பதாகவோ பால் போதவில்லை என்பதாகவோ எண்ணிக் கொள்ள வேண்டாம். உங்கள் மனம் களைத்தால் உடலும் விரைவில் களைத்துப் போகும்.

//opertion panni kolandai eduthanga athana ukanthu pal koduka mudiyala// புரியல. சிசேரியன் என்றால் உட்கார்ந்து கொடுக்க முடியுமே! வேறு பிரச்சினை ஆனதா! டயர் வடிவில் குஷன் கிடைக்கும். அதில் உட்கார்ந்துகொண்டால் சிரமம் சற்றுக் குறைவாக இருக்கும். மிகவும் கஷ்டமாக இருந்தால் புட்டிப் பாலுக்கு மாறுங்கள். தப்பில்லை. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தானே குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும்.

//ellarum bayamuruthuranga// எதுவும் ஆகாது கண்ணா. உங்களை யாரும் பயமுறுத்த முடியாது, நீங்கள் பயப்படாத ஆளாக இருக்கும் வரை. ;) பிரச்சினை நீங்கள் தானே தவிர 'எல்லோரும்' அல்ல. :-)

ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. குழந்தை கருவானதிலிருந்து உங்கள் கதகதப்பில் வளர்ந்தது. இப்போ அது இல்லை. நீங்கள் உட்கார்ந்து வைத்துக் கொள்ள முடியாததால் குழந்தைக்கு உங்கள் அணைப்பு போதியதாக இல்லாது இருக்கலாம். தனிமையாக உணருகிறாரோ! அதற்காகவும் அழுவார்கள். யாரையாவது கொஞ்ச நேரம் தூக்கி வைத்திருக்கச் சொல்லுங்கள்.

சற்று அதிகம் விழித்திருந்து விளையாடிக் களைத்திருந்தால், தம்மை எப்படி ரிலாக்ஸ்ட் ஆக்குவது என்பது புரியாமல் அழுவார்கள். தூக்கம் வந்தால், தாமாகத் தூங்கப் போக முடியாவிட்டாலும் அழுவார்கள். இந்தச் சமயங்களில் யாராவது வைத்திருக்க வேண்டும். இத்தனை செய்தாலும் அழுவது தொடரலாம். கொஞ்சம் அழுதுவிட்டுத் தூங்கிவிடுவார்கள்.
//(pirali vayu)// வாயு இல்லாவிட்டாலும் அழுவதைத் தவிர்க்க முடியாது. குழந்தை அழாமல் இருந்தாலும் உங்கள் அந்த 'எல்லோரும்' என்ன இப்படி இருக்கிறான்! ஏதாவது பிரச்சினையா? என்பார்கள். :-)

//kundhai romba alukuran// அப்படி அழுவார் தான். அதை அனேகம் உங்களால் நிறுத்த முடியாது. உங்கள் பழுவை வேறு யாராவது பகிர்ந்துகொள்ளக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கணவர் உதவ மாட்டாரா? உங்களுக்கு ஓய்வும் தேவை.

//3 masam varikum epadi// இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. அழுகையை மட்டும் நினைக்கிறீர்கள்; குழந்தையின் சிரிப்பைப் பாருங்கள். நீங்கள் பாடினால் குழந்தையின் அழுகை நிற்கலாம். குழந்தையை இமிடேட் செய்து அதே சத்தம் போட்டால் குழந்தை அழுகையை நிறுத்தக் கூடும். வேறு விளையாட்டுக் காட்டினால் நிற்கலாம். தோளை மாற்றினால், தூக்கும் முறையை மாற்றினால் (நான்கைந்து ஆப்ஷன்ஸ் கொடுக்க வேண்டும். ஒரு தடவை மாற்றினால் மட்டும் போதாது.) அழுகை நிற்கலாம். அவர்கள் தங்களுக்குச் சிரமமான விதமாக மற்றவர்கள் தூக்குகிறார்கள் என்பதை அழுகை மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அழும் போது அமைதியான, காற்றோட்டமான சற்று வெளிச்சம் குறைந்த இடத்திற்கு எடுத்துப் போய் வைத்திருங்கள். மெதுவே பாட அழுகை நிற்கும். சில சமயம் அப்படியே தூங்கிப் போவார். வீட்டின் எந்த இடம் குழந்தைக்குப் பிடிக்கிறது என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் குழந்தையின் சந்தோஷமான விடயங்களில் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். அதை விட்டு அழுகையை மட்டும் கவனிக்கிறீர்கள். அழாமல் குழந்தை வளராது. யோசிக்காதீங்க. குழந்தையின் வளர்ச்சியை சந்தோஷமாகப் பாருங்க. அதன் அழகைப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்