help me

ஹாய் நான் ஹஸ்யா எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் priod ஆகி 10 to 19 நாள் வரை தொடர்ந்து உறவு கொள்கிறோம் என் பிரச்சினை எஎன்னவென்றால் 20 ம் நாளிலிருந்து என் உடல் சோர்வாகிவிடுகிறது ஒரு வேலையும் முடியவில்லை உடல் படுக்கவே சொலகிறது 26 வது நாளில் priod ஆகிறது ஒவ்வாரு மாதம் இப்படி தான் .ஏன் இப்படி எனக்கு பதில் கூறுங்கள் எனக்கு குழந்தை செல்வம் வேண்டும் உதவுங்கள் pls

//26 வது நாளில் priod ஆகிறது// திருமணம் ஆகும் முன்பும் 26 நாட்கள் சுழற்சி இருந்ததா அல்லது இப்போது மணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத் தான் இப்படி ஆகுகிறதா? இப்போதுதான் அரம்பித்திருக்கிறது என்றால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

சோர்வு பற்றிச் சொல்லத் தெரியவில்லை. சத்தான ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். சரியான அளவு ஓய்வு எப்படி அவசியமோ அத்தனை அவசியம் ஆக்டிவ்வாக இருப்பதும். அதை விட முக்கியம் தினப்படி வேலைகள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு வைத்துச் செய்வது.

இது ஹோர்மோன் மாற்றங்களால் ஆவதாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பேசிப் பார்த்தீர்களா?

‍- இமா க்றிஸ்

ஹாய் இம்மா இல்லை, திருமணத்திற்கு பிறகு தான் இப்படி. டாக்டர் நார்மல் என்கிறார் சத்தான உணவு என்றால் என்ன என்ன சாப்பிடசாப்பிடலாம் கூறுங்கள் தோழி

மேலும் சில பதிவுகள்