admin ku vendukol

thayavu panni en problem ku solution kodunga please... enaku thevai illatha conversations vendam... nan potta kelvi ku padil mattum kodunga... understand my situation... nan ena thappu panenu enaku puriala... ethukaga nan potta kelvia delete paninga...

தாய்பால் நிற்க‌ ஏற்கனவே வழி சொல்லி இருக்கிறார்கள்... அதை முயற்சி செய்யுங்கள். மகனுக்கு பசிக்காமல் அவ்வப்போது எதையாவது கொடுங்கள். மனதில் உறுதியோடு என்ன‌ அழுதாலும் பால் கிடையாது என்று நீங்கள் நின்றால் நிச்சயம் அவர் அடம் செல்லுபடியாகாது. 2, 3 நாள் அழுது பார்த்து பின் இல்லை என்றானால் மறந்து போவார். பசி நேரத்துக்கு முன் எதையாவது கொடுத்து விடுங்கள். பாலில் ஊற‌ வைத்த‌ பிஸ்கட், பழங்கள், வேக‌ வைத்த‌ காய்கறி, சாதம் பருப்பு நெய் விட்டு.... இப்படி எதாவது கொடுங்கள். பசி அடங்கிவிட்டால் பாலுக்கும் அழ‌ மாட்டார்கள். பிள்ளை அழுகிறது என‌ மனம் இறங்கினால் மறக்க‌ வைப்பது சிரமம். 1 வயதிலேயே நிப்பாட்டுவது நல்லது. இல்லையெனில் சிரமம் தான் என்பார்கள். அதிகபட்சம் 1 1/2 வயதுக்குள்ளாவது நிறுத்தியே ஆக‌ வேண்டும்... இல்லையெனில் மற்ற‌ உணவுகளை பழக்குவதும் சிரமம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank you ma... kandipa neenga sonna mathiri panren... enakaga reply pannathuku thanks...

சகோதரி கோகிதிரு அவர்களுக்கு,

யார் மீது தவறு, யார் மீது தவறில்லை என்று ஆராய்ந்து அந்த இழையை நீக்கவில்லை. அந்த இழை தொடர்ந்தால் வீணாக மனக்கசப்புகள் உண்டாகும் என்ற காரணத்தினால் அதை நீக்கினேன்.

//nan ena thappu panenu enaku puriala//

பிரச்சனையின் மூலக்காரணம் இதுதான். நீங்கள் செய்த தவறு உங்களுக்கு புரியவில்லை. அறுசுவை மன்றத்திற்கென்று சில விதிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை உறுப்பினர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். சில விதிகளை அவ்வளவு கட்டாயப்படுத்துவதில்லை. இருந்தாலும் கூடுமானவரை அதை கடைபிடிக்க வேண்டும் என்று அவ்வபோது சொல்லி வருகின்றோம். அந்த வகையில் ஒரு விதிதான், "மன்றத்தில் ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட விசயங்களுக்கு புதிய இழைகள் தொடங்க வேண்டாம்" என்பது.

ஏற்கனவே தொடங்கப்பட்ட இழைகளின் கீழ் பதிவுகள் கொடுப்பது என்பது வேறு. புதிய இழை தொடங்குவது என்பது வேறு. ஒரே விசயத்திற்கு நிறைய புதிய இழைகள் இருப்பது பலவகையிலும் பிரச்சனையைத் தரக்கூடியது. அதனால்தான் ஒரு இழை தொடங்குவதற்கு முன்பு அது சம்பந்தமாக ஏற்கனவே இழை உள்ளதா என்று பார்த்து துவங்குங்கள் என்று சொல்லி வருகின்றோம். நீங்கள் ஆரம்பித்த இழை சம்பந்தமாக ஏற்கனவே நிறைய இழைகள் இருந்ததால், அந்த இழைகளைத் தேடிப் பார்த்து அதில் பதில் கொடுங்கள் என்று இமா உங்களுக்கு தெரிவித்தார். இதை மூத்த உறுப்பினர், அறுசுவை பங்களிப்பாளர் என்ற வகையில் மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. அறுசுவை மன்றத்தின் Moderator அவர். விதிமீறல்கள் நடக்கும்போது அதை தெரிவிப்பது, தேவைப்பட்டால் பதிவுகளை நீக்குவது என்பது அவருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ரைட்ஸ்.

நீங்கள் தொடங்கிய இழையை அவர் நீக்கவில்லை. அவர் யாருடைய இழையையும் நீக்குவதில்லை. ஒரே விசயத்திற்காக மீண்டும் மீண்டும் இழைகள் தொடங்குவது கூடாது என்று விதிகள் சொன்னாலும், அதற்காக தொடங்கப்பட்ட இழைகளை நாங்கள் நீக்குவதில்லை. அது ஏற்கனவே பேசப்பட்ட விசயம் என்பதை சுட்டிக்காட்டுவோம் அல்லது தேடிப் பாருங்கள் என்றுதான் பதில் கொடுப்போம். அதைத்தான் இமா அவர்கள் செய்திருந்தார். தேடுக வசதியை பயன்படுத்தி தேடிப்பாருங்கள் என்பது எல்லோரும் சொல்லும் விசயம், எல்லோருக்கும் சொல்லும் விசயம்.

தேடிப்பாருங்கள் என்று சொன்னதற்காக நீங்கள் கோபித்துக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக அறுசுவை உங்களுக்கு உகந்த இடமில்லை. இமா அவர்கள் சொல்லி இருந்த விதம் உங்களுக்கு கோபத்தை உண்டு செய்திருந்தால் அதில் ஒரு சிறிய நியாயம் இருப்பதாக எடுத்துக்கொள்வேன். ஆனால், இமா அவர்கள் நீங்கள் எடுத்துக்கொண்ட அர்த்தத்தில் கூறவில்லை என்பதை அடித்து சொல்வேன். அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவரது எழுத்துக்கள் பேச்சுக்களை கேட்டவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும் அவர் என்ன அர்த்தத்தில் அதை சொன்னார் என்று. "தமிழில் தட்ட முடியாதா" என்று கேட்டது "உன்னால முடியாதா" என்பது போன்ற அதிகாரத்தொனியில் அல்ல. தமிழில் டைப் பண்ண முடியாதவாறு மொபைல் போன்ற ஏதேனும் பயன்படுத்துகின்றீர்களா என்பது போன்ற அர்த்தம் அது. தமிழில் டைப் செய்ய முயன்றால், மேலே டைப் செய்து தேடினால் உங்களின் கேள்விக்கான இழைகள் நிறைய கிடைக்கும். தமிங்கிலத்தில் தேடினால் தமிழில் உள்ள இழைகள் தேடலில் வராது என்ற ஒரு அர்த்தத்தில் மட்டுமே அவர் பதிவு கொடுத்து இருந்தார். அது எங்கள் எல்லோருக்கும் புரிந்தது. நீங்கள் அந்த வார்த்தைகளை படிக்கும்போது வேறு tone ல் படித்தால் நீங்கள் நினைத்துபோல் மிரட்டுவது போன்றுதான் இருக்கும். அதை மறுக்கவில்லை. அதனால்தான் உங்கள் பக்கம் ஒரு சிறு நியாயம் இருக்கின்றது என்று குறிப்பிட்டேன். அதேசமயம் மீண்டும் இதைக் குறிப்பிடுகின்றேன். இமா அவர்கள் அந்த அர்த்தத்தில் அதை குறிப்பிடவில்லை.

நான் எப்போதும் கூறும் விசயம் இது. அறுசுவையில் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அறுசுவையில் எத்தனை வருடங்கள் இருக்கின்றார் என்பதை வைத்து ஒருவரை சீனியர், ஜூனியர் என்றெல்லாம் வகை பிரிப்பதில்லை. அதற்காக சிறப்பு அந்தஸ்துகள் எதுவும் வழங்குவதுமில்லை. இங்கே உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்கள்தான். அவர்கள் அறுசுவைக்கு பங்களிப்பதை வைத்து அதற்கு தகுந்தாற்போல் சில கூடுதல் வசதிகள் அவர்களுக்கு தரப்படுகின்றன. 30 வயதுடையவர் அறுசுவையில் பத்து வருடம் இருக்கின்றார் என்பதற்காக அவரை சீனியர் என்றும், 60 வயதுடையவர் நேற்று வந்து சேர்ந்த காரணத்தினால் அவரை ஜூனியர் என்றும் சொல்லிவிட முடியாது. அறுசுவை உறுப்பினர் காலத்தை வைத்து ஒருவரை சீனியர், ஜூனியர் என்று பிரித்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று யாரும் கூறமுடியாது. அதேசமயம், அறுசுவையில் இருக்கும் உறுப்பினர்களின் வயது, அனுபவம் இவற்றை வைத்து நாம் அவர்களுக்கு தகுந்த மரியாதையை வழங்குவது நாம் பயின்ற நாகரிகத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

இமா அவர்களின் வயது, அனுபவம், அவருடைய குணம் எல்லாமே இங்கே இருக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். கிட்டத்திட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருக்கும் உங்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை அவருடன் நீங்கள் பேசி இருக்கின்றீர்கள். இரண்டு வருடத்தில் நூறு பதிவுகள் அளவிற்கு அறுசுவையில் கொடுத்து இருக்கின்றீர்கள். அவரைப் பற்றி சரியாக புரிந்துகொள்ளாமல் கோபமாக பதில் கொடுத்து இருந்தீர்கள். அப்போதும் அவர் தவறு என்னுடையதுதான் என்று பொறுமையாக பதில் கொடுத்து இருந்தார். அதுதான் இமா.

அந்த இழை அவருடைய பதிலுடன் நின்றிருக்க வேண்டும். அத்துடன் நின்றுவிடும் என்ற எண்ணத்தில்தான் நான் அதில் தலையிடவில்லை. ஆனால் அங்கே நிறைய பதிவுகள் விழுந்து, அது ஒரு பிரச்சனையாகும் இழையாக மாறிவிட்டதால் அதை நீக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு.

கடவுள் பார்த்துக்கொள்வார் என்பது மாதிரியான சாபங்கள், செல்ஃபிஷ் என்பது மாதிரியான பட்டங்களுக்கு எல்லாம் அவர்கள் தகுதியற்றவர்கள். அவர்கள் இருவரையும் இணையத்தில் மட்டுமல்லாது நேரடியாகவும் நன்கு அறிவேன் என்பதால் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய சகோதரி என்றால் இப்படித்தான் தேடிப்பார் என்று சொல்வீர்களா என்று நீங்கள் கேட்ட கேள்வியை அவர்களும் கேட்கலாம். உங்கள் சகோதரி தேடிப் பார்க்கச் சொன்னால் இப்படித்தான் சண்டையிடுவீர்களா என்று.

உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை புரிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் சண்டையிடுவதற்கென்று அந்த இழையைத் தொடங்கவில்லை என்பதையும் நன்கு அறிவோம். அர்த்தம் புரிதலில் ஏற்பட்ட தவறு அதை ஒரு பிரச்சனைக்குரிய இழையாக மாற்றிவிட்டது. எல்லோர் பக்கமும் ஒரு சிறு நியாயமும், சிறு தவறும் உள்ளது. ஆகவே அதை இத்துடன் அனைவரும் மறந்திடுவோம்.

உங்களுக்கு அங்கே மற்றவர்கள் கொடுத்திருந்த தீர்வுகளை இந்த பதிவின் கீழ் காப்பி செய்து பேஸ்ட் செய்கின்றேன். தயவுசெய்து மேற்கொண்டு அந்தப் பிரச்சனை குறித்து இங்கே பேசவேண்டாம். எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

அடுத்து, எல்லோருக்குமான அன்பு வேண்டுகோள். நான் பலமுறை குறிப்பிட்ட விசயம்தான். மன்றத்தில் யாரேனும் ஒருவர் தவறு செய்யும்போது தயவுசெய்து அதை என்னுடைய பார்வைக்கு கொண்டு வாருங்கள். அங்கே தவறு செய்தவர் ஒருவராக மட்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க இயலும். அதற்காக அவர்கள் என் மீது கோபப்பட்டாலோ, என்னுடன் சண்டையிட்டாலோ நான் அதை பார்த்துக்கொள்வேன். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களுடன் சண்டையிட்டுக் கொள்வது, நாம் அறுசுவை குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் இந்த அமைப்பிற்கு ஆரோக்கியமானது அல்ல.

இனி இதுகுறித்து பதிவுகள் வேண்டாம்.

babyku pasikumpothu sapda ethachum kuduthudunga lyk nan dates flesh,raisins,biscuit,cherry,smasshed potato,apple,beetroot ipdi,,,,en paiyanku intha week mudinchathuna 1 year...nan pal niruthi 10 days aguthu...nan ipdithan marakadichen....enkuda yarum illla...en husb mng poitu nyt 9ku than varar..nanathan marakadichen...starting konjam kastamathan erukum...pogapoga palagidum...pasichu alumpothu velila kutitu vanthu vedikai kamichute ithellam ooti vidunga....but friend nenga eppolam intha snacks kudukuringlo applam konjam hotwater kuduthu thoonga vainga.....apram nalla vilayidunathuku apram milk kuduthu thoonga vainga....

en mela than thappu... nan mannipu kettukuren...

sorry

sorry madam

மற்ற உறுப்பினர்கள் கொடுத்த தீர்வுகள்.
------------------------------------

தோழி பால் நிறுத்துவது கஷ்டமான வெலை தான் . என் பையனும் இப்படிதன் இருந்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் feeding bottleil கொடுது பழகினோம். அவனை அவன் அப்பா தாத்தா பாட்டியுடன் அதிக நெரம் விடுங்கள். பால் கெட்கும் போது வெலியே அழைத்து செல்லுஙள். சில சமயம் அழுவார்கள் தான். ஆனால் வேரு வழீல்லை. நாம் தள்ளியெ இருக்க மரந்து விடுவர்கல். உஙலக்கு பால் கட்டினால் மல்லிகல் பூ வைது கட்டலாம். அல்லது hot water pack வைக்கலாம்.this is my first Tamil typing.so sorry for mistakes. I hope u under stand

mshivaranjani

---------------------

கோகி என் பையனுக்கு 2 வயதில் பால் மறக்கடித்தேன்.ப்ளாஸ்க்ல பால் காய்ச்சி வச்சுகங்க.நான் பால் மறக்கடிக்கும்போது யாருமில்லை அவுங்க அப்பா கூட நைட் சிப்ட் போயிட்டாங்க.நான் செய்ததை பகிர்ந்து கொள்கிறேன்.நான் மார்பு முழுவதும் எண்ணெய் தடவி வழிவதுபோல் வைத்து புண்ணாகி இருக்கு மருந்து போட்டிருக்கேன்னு சொல்லி புரிய வைத்து மறக்கடித்தேன்.பால் கட்டி fever வரும்.மல்லிகைப்பூவை bra க்குள் வைத்து இறுக கட்டிக்க வேண்டும் இரண்டு நாட்களுக்கு. மார்பு ரொம்ப வலியாக இருந்தால் கொஞ்சம் பீச்சி விட்டு கட்டுங்கள். ஓ கே வா.. தமிழில் தவறாக இருந்தால் மன்னிக்கவும். ரொம்ப நாட்கள் கழித்து டைப் பண்றேன்.

ashvath devi
----------------------

என் அம்மா வீட்டிற்கு அருகில் ஒரு கிராம சேவை நர்ஸ் இருந்தாங்க. அவங்க ஒரு மாத்திரை எழுதி கொடுத்தாங்க. 2நாளில் எனக்கு நின்று விட்டது. மருந்து பெயர் மறந்து விட்டது. நீங்க டாக்டரிடம் போவது நன்று.உடனடி பலன் கிடைக்கும்

Jaypon
----------------------

இமா அவர்கள் கொடுத்திருந்த மற்ற இழைகளுக்கான லிங்க்ஸ்

www.arusuvai.com/tamil/node/19925
www.arusuvai.com/tamil/node/15837
www.arusuvai.com/tamil/node/24546
www.arusuvai.com/tamil/node/9613
www.arusuvai.com/tamil/node/24788
www.arusuvai.com/tamil/node/9814
www.arusuvai.com/tamil/node/8146
www.arusuvai.com/tamil/node/19925
www.arusuvai.com/tamil/node/14743
www.arusuvai.com/tamil/node/9305
www.arusuvai.com/tamil/node/25174
www.arusuvai.com/tamil/node/4276
www.arusuvai.com/tamil/node/29462

--------------------------

நான் எப்படி பால் மரகடிதேன் என்று சொல்கிறேன் முயற்சித்து பாருங்கள் . நீங்கள் முதலில் பால் வருவதை நிறுத்த வேண்டும் . மல்லிகை பூ வாங்கி மார்ப்னில் வைத்து கட்டுங்கள் இரவில் மற்றும் பகலில் ஒரு முட்டைகோசு oru இழையை மார்பினில் ( ulley vaithu kondal yarukum theriya povathillai )வையுங்கள் 2 3 நாட்காளில் பால் வற்றி விடும் . மகனின் வயிற்ருக்கு தீனி கொடுத்து கொண்டே இருங்கள் எக்ஸ்Example: காலையில் இட்லி கொடுத்தீர்கள் என்றால் மதியம் வரை நடுவில் எதாவது தீனி கொடுத்து கொண்டு இருங்கள் திரும்ப இரவு வரை எதாவது என்றால் பழங்கள் juice biscuits bread something ..குழந்தையின் வயிறு நிரம்பி இருந்தாலே பாதி தீர்வு முடிந்தது , தூங்கும் பொது அல்லது அவனைதூகும்போது மார்பினில் அருகில் அனைத்த படி இருக்காதீர்கள் . வீடு வைத்தியத்திலே தீர்வு கிடைத்து விடும் இல்லையென்றால் மருத்துவமனை செல்லுங்கள் . உங்கள் மன நலம் புரிகிறது வேதனை அடையாமல் அடுத்தது என்ன செய்வது என்று பாருங்கள் வாழ்க வளமுடன் .

sara sure

--------------------------

unga payanuku feeding bottle la juice la kudupingala. appdina yentha time la neega feed pannuvingalo antha time la avan azharathuku munnadi feeding bottle milk kuduga. paal kachum pothu poondu 2 paal potu thaniya mix panuga. konja naal la sari akidum.

sanchana
---------------------------

thank you...

Frds,enaku baby illa so treatment edukuren,.enaku period 2day blood test eduthanga athula thyroid and AMH (egg quality 0.5 )than eruku. So ennala iui panna conceive aga mudiuma?pls rpy

B. Radha

மேலும் சில பதிவுகள்