இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

Hi sister முதலில் என் வாழ்த்துக்கள். இப்போ கூட தாய்பால் கொடுப்பதை நிறுத்தலாம் பா. பாப்பாவை தூக்குவதால் ஒன்றும் ஆகாது பா. நானும் இப்போ 2வது கர்பமாக தான் உள்ளேன். என் குழந்தைக்கு இப்போ 3வயது. அவளை தூக்க கூடாது என்று டாக்டர் சொன்னார். ஆனால் நான் தூக்காமல் இருந்தது இல்லை. ஏனென்றால் இதுவும் நம் குழந்தை தானே. இப்போ நான் நிறை மாத கர்ப்பினி. இப்போ பாப்பாவை தூக்கவே கூடாது. ஆனால் என் குழந்தை இப்போ ஒரு பெரிய ஆப்பரேஷன் செய்ததில் 15நாட்கள். ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டியதாயிற்று. பகலில் 7.30மணி முதல் இரவு 9மணி வரை பாப்பா கூடவே இருப்பேன்.இரவு முழுவதும் மாமியார் இருப்பார். அவளை நான் தான் பாத்ரூம்க்கு தூக்கிட்டு போகனும். கடவுள் மேல பாரத்தை போட்டுவிட்டு என் முதல் குழந்தையை பார்த்துகிட்டேன் இப்பவும் நான் தான் பார்த்துக்கிறேன்.பயமில்லாமல் கடவுளையும் உங்கள் மேல் நம்பிக்கையும் கொண்டு முதல் குழந்தையை பார்த்துகிட்டு உங்கள் செல்லத்தோடு அடுத்து வரும் செல்லத்தை வரவேற்க தயாராகுங்கள்...

சித்தா டாக்டர் எனக்கு சதாவரி லேகியம் மற்றும் femicure tonic கொடுத்துருக்காங்க, யூட்ரஸ் பலத்துக்காக. பாப்பாவை தூக்கும் போது வலி ஏதும் இல்லை, கொஞ்ச நேரம் கழித்து தான் படுத்துகிறது.அது தான் பயம் நீங்க ,இங்கே அறுசுவையில் அனுபவம் உள்ளவர்களிடம் கேட்போமே என்று....
உங்கள் பாப்பாவுக்கு என்னாச்சு, நல்லா இருந்தாளே?! நான் pray பண்ணுவேன் உங்க பாப்பாவுக்கு. Dnt wry. உங்களை call reach பன்ன முடியலபா. நம்பர் மாத்திட்டீங்களா?

//எப்போ நிறுத்தலாம்?// நிறுத்துவதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கும் இரண்டாவது குழந்தைக்கும் நல்லது. நிறுத்திருங்க.

‍- இமா க்றிஸ்

ஆமா பா நம்பர் மாத்திட்டேன். நான் உங்க Id ku msg பன்னிருக்கேன் பா. உங்க நம்பர் என்ட இருக்கு பா.

எப்படி இருக்கிங்க. உங்க குழந்தை எப்படி இருக்காங்க.

எனக்கு 6 வயதில் மகன் இருக்கிறான் இப்பொழுது நான் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்கிறோம் ஆனால் இன்னும் கிடைக்க வில்லை மாதவிடாய் சரியான நாளில் வந்துவிடும். முதல் குழந்தை நார்மல் டெலிவரி. குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து பிறப்புறுப்பில் ஒரு சிறிய கட்டி இருப்பது போல் உணர்ந்தேன் ஆனால் வலியோ அசவுகரியமோ இல்லை.
மருத்துவரிடம் கேட்ட போது வலி இல்லை என்றால் ஒன்னும் இல்லை என்று கூறிவிட்டார். இப்போ வரையில் அந்த கட்டி மாதவிடாய் சமயம் வரும் பின்பு ஒரு 10 நாள் இருக்கும் பின்பு மறைந்து விடும் 6 வருடமாக இப்படி தான் உள்ளது ஆனால் வலி இல்லை ஆதலால் நானும் பின்பு மருத்துவரிடம் செல்ல வில்லை. இரண்டாவது குழந்தை தள்ளி போவதற்கு இது தான் காரணமா என்று சந்தேமாக உள்ளது. மருத்துவரிடம் இப்போதைக்கு செல்ல முடியாதா சூழ்நிலை. மாதத்தில் 10 நாள் மட்டும் தான் கட்டி உள்ளது மற்ற 20 நாள் அது கர்ப்பபையில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துகிறதா என்று கவலையாக உள்ளது. மகனுக்கும் 6 வயது தாண்டியாச்சு அதனால் இரண்டாவது குழந்தை தள்ளி போக கவலை இன்னும் அதிகமாக உள்ளது. அந்த கட்டியால் தான் தள்ளி போகிறதா? பதில் தாருங்கள் தோழிகளே.
இந்த மாதமும் பாசிட்டிவ் ஆக வில்லை அதே போல் சரியாக மாதவிடாய் முதல் நாள் அந்த கட்டி வந்து விட்டது ஆனால் வழக்கம் போல் வலி இல்லை. எதனால் இப்படி?

கருக்கட்டுவதும் கரு வளர்வதும் கருப்பையின் உள்ளே. பிறப்புறுப்பில் எதுவும் ஆவது இல்லை. இதனால் பிரச்சினை இராது.

‍- இமா க்றிஸ்

இந்த கட்டி எதனால் வருகிறது என்று குழப்பமாக உள்ளது. இது நிரந்தரமாக இருந்தால் கூட மருத்துவமனை செல்லலாம் ஆனால் நான் 5நிமிடம் முன்பு பார்த்தால் இருக்கும் பின்பு இல்லாமல் போய்விடும். அதனால் தான் டாக்டர் இடம் கேட்க முடியவில்லை முன்பு கேட்டபோதே மருத்துவர் அதை தான் கூறினார் வலி இல்லை என்றால் பிரச்சனை இல்லை என்று. இந்த கட்டிக்கும் குழந்தை பேறுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் மிகவும் நிம்மதி. நன்றி உங்கள் பதில் நிம்மதியாக உள்ளது.

Enaku oru dout clear pannunga sisters
Enaku 6 vayathil 1 pen kulanthau ulathu 2nd baby ku try panom normal a tharikala treatment ponom last date 25.2.19
Tablet scan x-ray ellam mudinjitu
Falicular studys poitu iruku tabletum sapituthan iruken but 16.3.19 light bleeding irunduchi finish inaiku second day bleeding suthama illa 20 thavudu nall date vanduchi Sila per soluranga yutrus nirambi valichalum apudi irukum baby form agiirukalamnu soluranga ungaluku yarukavudu ipadi oru anupavam iruka enaku help pannunga ennudaiya kulapathai theerthu vaiyungal siser

Enaku oru dout clear pannunga sisters
Enaku 6 vayathil 1 pen kulanthau ulathu 2nd baby ku try panom normal a tharikala treatment ponom last date 25.2.19
Tablet scan x-ray ellam mudinjitu
Falicular studys poitu iruku tabletum sapituthan iruken but 16.3.19 light bleeding irunduchi finish inaiku second day bleeding suthama illa 20 thavudu nall date vanduchi Sila per soluranga yutrus nirambi valichalum apudi irukum baby form agiirukalamnu soluranga ungaluku yarukavudu ipadi oru anupavam iruka enaku help pannunga ennudaiya kulapathai theerthu vaiyungal siser

மேலும் சில பதிவுகள்