இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது பெயர் கவிதா எனக்கு 21 வயது அகின்ரது எனக்கு திருமணம் அகி 18 மதங்கல் அகின்ரது எனக்கு குலந்தை பிறந்து 6 மதங்கல் அகின்ரது இப்பொது நான் 4 மதா கருவுட்ரிரிக்கிரென் அதை கலைக்க முடியுமா உதவுக்கல் எனதுகுடும்பத்ஹ்தில் பொதிய வருமானமும் இல்லை என்னால் இப்பொது இன்னொரு குலந்தையையும் பார்கும் அலவுக்கு நிலமை இல்லை எனக்கு உதவுக்கல் எனது எமைல் வனித67வ்@க்மைல்.cஒம் எனக்கு உதவுங்கல்

//எனது பெயர் கவிதா எனக்கு 21 வயது அகின்ரது எனக்கு திருமணம் அகி 18 மதங்கல் அகின்ரது எனக்கு குலந்தை பிறந்து 6 மதங்கல் அகின்ரது இப்பொது நான் 4 மதா கருவுட்ரிரிக்கிரென் அதை கலைக்க முடியுமா உதவுக்கல் // 4 மாதத்தில் கைவைத்தியம் மூலம் கருக்கலைப்பு செய்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும். 2வது குழந்தைப் பிறக்கும் போது முதல் குழந்தைக்கு 1 வயதுக்கு மேல் ஆகிவிடும். இர‌ண்டு குழந்தைகளை வளர்க்கவும் சுலபமாக இருக்கும் .//எனதுகுடும்பத்ஹ்தில் பொதிய வருமானமும் இல்லை என்னால் இப்பொது இன்னொரு குலந்தையையும் பார்கும் அலவுக்கு நிலமை இல்லை // இப்போ நீங்க abortion பண்ணீங்கனா நீங்க 2nd baby வேண்டும் என்று நினைக்கும் போது abortion பின்விளைவுகளை ஏற்படுத்தும். நானும் குடும்ப சூழ்நிலையால் 2 nd baby ah abortion பண்ணிட்டு இப்போ 4 year's ah 2nd baby இல்லாம கஷ்டப்படுறேன். //எனக்கு உதவுக்கல் எனது எமைல் வனித67வ்@க்மைல்.cஒம் எனக்கு உதவுங்கல் // email I'd ah பொதுவான தளத்தில் கூற வேண்டாம். உங்களுக்கு பிரச்சனை வரலாம்.

Santhapriya

உங்கள் கையில் இருக்கும் குழந்தையை போலதான் இந்த 4 மாத கருவும். அழிக்க நினைப்பது கொடுமை. நீங்கள் முன்பே பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும். abortion செய்வது உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நம் அறுசுவை தளத்தின் குழந்தை வரம் வேண்டுவோர் பக்கத்தில் பாருங்கள். எவ்வளவு பேர் குழந்தைக்காக ஏங்கி காத்து இருக்கிரார்கள் என்று.
நீங்கள் கொஞ்சம் சிரம பட்டு இந்த குழந்தையை பெற்று கொண்டால் இருவரையும் ஒன்றாக வளர்த்து விடலாம். பின்னர் சிரம பட வேன்டாம். கண்டிப்பாக குழந்தை வேண்டாம் என்றால் இங்கு கேட்பதை விட மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள்.

நான் சொல்ல நினைத்ததை இசக்கி இந்து சொல்லிவிட்டார்கள். கருவை கலைக்காதீர்கள் ப்ளீஸ்.

- பிரேமா

4 மாத கர்ப்பமா? உங்க நிலை புரியுது கண்ணா. அது கரு என்பதற்கு மேல் குழந்தை ஆகி இருக்கும் கண்ணா. இங்கு கேட்பதை விட ஒரு மருத்துவரை அணுகிப் பேசுங்கள். விபரமாகச் சொல்வார்கள். உங்களுக்கு நம்பிக்கை வரும்.

உங்களால் இன்னொரு குழந்தையைப் பார்க்க முடியாது என்கிறீர்கள். வீட்டு வைத்தியம் அல்லது அனுபவமில்லாதவர்களது அறிவுரையைப் பின்பற்றினால்... உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியவும் சாத்தியம் இருக்கிறது. நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ஏற்கனவே இருக்கும் குழந்தையின் நிலை என்ன! உங்கள் கணவர் தனியாக சமாளிப்பாரா! ஒரு 'நல்ல' மருத்துவரைப் பாருங்கள். விபரமாகப் பேசுங்கள். அவர் சொல் கேட்டு நடவுங்கள். இப்போது, இரண்டில் எந்தப் பிரச்சினை, பிரச்சினை குறைவான பிரச்சினை என்பது தான் சிந்திக்க வேண்டிய பிரச்சினை. சிந்தியுங்கள் - உங்கள் கணவரோடு சேர்ந்து சிந்தியுங்கள். கேள்வியின் நாயகர் அவர்தான்.

இன்னொரு விஷயம் கேட்கத் தோன்றுகிறது. நாளை உங்கள் மனசாட்சி உங்களை நோக்கிக் கேள்வி கேட்காது என்பது என்ன நிச்சயம்! கேட்டால்... அது உங்கள் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கேட்காதா!!! நிம்மதி போய்விடும் கண்ணா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்