En kanavaruku santhosa padutha vendum

Enaku marg agi 1year aguthu. Marg ana udaneye baby thankiduchu. After 3 month abortion agiruchu... Aparam 5 month kalichu conceive ane baby ku heart beat ilanu solli obortion pana sonanka. 2 times ume en husband ah na emathiten. Atha ninaikum bothulam enaku rmba stress ah eruku.. Enaku blood grup A-ve en husband ku B-ve. 2 time obortion anapaum Anti-D potanka.... Enaku kulanthai pirakuma... Kadavul enkuda erupankala... Amma appa ilatha enaku en husband than elame avara enala santhosama vachuka mudila nu ninaikum pothu kastama eruku.. Enaku oru solution solunka madam

நீங்கள் குழந்தை பெற்று தருவதாக கூறி கணவரை ஏமாற்றி விட்டேன் என்று சொல்வது எல்லாம் வேஸ்ட்..
முதலில் மன அழுத்தம் இருக்கவே கூடாது..
ஏமாற்றம் இருவருக்கும் என்று உணர வேண்டும்.. அதை ஏமாற்றம் என்று சொல்ல வேண்டாம்.. ஏனோ அப்படி ஒரு சந்தர்ப்பம்..
இனியும் அதேபோல் ஆகும் என்று
நினைக்க வேண்டாம்..
நீங்கள் சந்தோஷமாக இல்லற வாழ்வில் ஈடுபட்டால் போதும்.. நல்லதே நடக்கும்..

நீங்களாகவா கருச்சிதைவு செய்துகொண்டீர்கள்? தானாக நிகழ்ந்த ஒன்று எப்படி நீங்கள் ஏமாற்றியதாக ஆகும்? நீங்கள் ஏமாறவில்லை என்கிறீர்களா? ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகளால் போராட முடியவில்லை. இந்தக் காலம் கடந்திருந்தாலும் அவை உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுக்கும் குழந்தைகளாகப் பிறந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நல்லதே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

//குலந்தை பிரகும.// நிச்சயம் மீண்டும் கருத்தரிப்பீர்கள். மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள். எதற்காகவும் அவர்களது ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். மனம் நொந்துபோய் இருக்கும் போது விரக்தி தன் முனைப்பைக் காட்டப் பார்க்கும். நம்பிக்கையைத் தளர விட வேண்டாம்.

//Kஅடவுல் என்குட எருபன்கல.// இப்படி ஒரு கேள்வியைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்க மாட்டார்கள். :-) உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பெயருக்கு மற்றவர்களுக்காகக் கும்பிடுகிறீர்களா? இல்லையென்றால் இப்படி இனிக் கேட்கக் கூடாது. இந்தக் கேள்விக்குப் பதிலை நாங்கள் சொல்ல முடியாது. நீங்கள் கும்பிடும் கடவுளிடம் கேளுங்கள்... உங்களுக்கு மன ஆறுதலைத் தரச் சொல்லி.

//ஆம்ம அப்ப இலத எனகு என் ஹுச்பன்ட் தன்// கண்ணா... அம்மா அப்பா இருப்பவர்களுக்கும் கண்வர்தான் எல்லாம். அம்மா அப்பா அதன் பின்பு தான்.

//அவர எனல சந்தொசம வசுக முடில நு நினைகும் பொது// நினைப்பே தப்பு. நீங்கள் அவரைச் சந்தோஷமாக வைத்திருப்பதால் தானே 2 தடவை கருத்தரித்தீர்கள்? இல்லையா? நீங்கள் அந்த ஒரு வகையில் அவரைச் சந்தோஷமாக வைத்திருக்கிறீர்கள். உங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களால் முடியவில்லை; உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதால் வேண்டுமானால் உங்கள் கணவர் சந்தோஷம் கெட்டுப் போகிறது எனலாம்.

//கச்டம எருகு.// புரியுது. //ஒரு சொலுடிஒன்// இருக்கு. அமைதியாக இப்போது உள்ள நாட்களைச் சந்தோஷமாக வாழப் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் சந்தோஷம் திஒரும்ப உங்களைத் தொற்றிக் கொள்ளும்; தைரியம் கொடுக்கும். 'ஒரு' மருத்துவரோடு / மருத்துவ முறையோடு சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள். என்ன சந்தேகம் என்றாலும் மருத்துவரைக் கேளுங்கள். அவர் சொற்படி மட்டும் ஆனால் தவிர்க்காமல் நடவுங்கள். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது. இது எல்லாவற்றுக்கும் மருத்துவத் தீர்வு உள்ள காலம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்