வீட்டில் நாற்றம் உதவுங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு பையனுக்கு கிருமி காய்ச்சல் என மருத்துவமனைக்கு போட்டதை போட்டபடியே போட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டோம், இன்று வீட்டிற்கு திரும்பினால் வீடு முழுவதும் ஒரே நாற்றம், என்ன நாற்றம் என்று பார்த்தால் இரண்டு நாட்கள் சமைத்து விட்டு வைத்து போன, தேங்காய் சோறு, சிக்கன் கிரேவி, முட்டைகோஸ் பொரியல் அனைத்தையும் கீழே போடாமல் அப்படியே வைத்து விட்டு போனதால், புழு உண்டாகி வீணாகி போயிருக்கு, பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்த பிறகும் வீட்டில் அந்த நாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது, பாத்திரங்களிலும் தான், இப்பொழுது இந்த நாற்றத்தை போக்க நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு எதுவும் புரியவில்லை, பையனுக்கு இதனால் மீண்டும் கிருமி ஏறிவிடுமோ என பயமாக இருக்கிறது, இதற்கு என்ன செய்தால் நாற்றத்தை போக்கலாம் என சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ், அப்றம் அந்த பாத்திரங்களை நான் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அப்டிங்கிரத்தையும் சொல்லுங்க தோழிகளே

கெட்டு போகவில்லை என்றால் சிறிது உப்பு சேர்த்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்..

வேதியியல் மாற்றம் நடந்திருக்கு. வாடை நன்றாக இருக்கும் பட்சத்தில் உபயோகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். எதற்கு வம்பு? தூக்கி போடுங்கள்.வேறு செய்து கொள்ளலாம்

- பிரேமா

வாசம் அதே போல தான் இருக்கு, கெட்டு போன மாதிரி தெரியல, உப்பு சேர்த்து பிரிட்ஜில் வைத்தால் உபயோகிக்கலாமா

ஓகே சிஸ், நானும் அதான் நினைத்தேன், இன்று தூக்கி போட்டுவிட்டேன்

வெங்காயம் காற்றிலிருந்து வெறுமனே வாடைகளை உறிஞ்சுவது இல்லை. வாடைகளுக்குக் காரணமான காற்றில் கலந்திருக்கும் இரசாயனப் பதார்த்தங்களைத்தான் உறிஞ்சுகிறது. வெங்காயத்தை உரித்து / வெட்டி ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். பூண்டும் அது போலதான். நீங்கள் வீசியது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்