மஞ்சள்பூசணி எரிசேரி

தேதி: April 12, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஞ்சள் பூசணி - ஒன்று
காராமணி பயிறு - ஒரு கப்
தேங்காய் - 3 துண்டு
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 11/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மஞ்சள் பூசணிக்காய் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காராமணி பயிறு வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின மஞ்சள் பூசணிக்காய், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறு போட்டு கிளறவும்.
இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் எரிசேரியில் கொட்டவும்.
சுவையான எரிசேரி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments