"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

Ennaiku yenaku 21 day Amma.nan veetu velai pakkalama,thalai shampoo pottu kulikalama.akka Vera fun vachurukanga nan velai lam pakkalama amma pls pathil sollunga amma

S.karthika

தாராளமாகச் செய்யலாம். சிலின்டர் தூக்குற மாதிரி காரியங்களை மட்டும் தவிர்க்கலாம். தலைக்குக் குளிப்பது எல்லாம் சாதாரணமாகச் செய்ய வேண்டிய விஷயம் தான். இத்தனை யோசிக்க வேண்டாம். இயல்பாக இருக்கப் பாருங்க. அக்கா என்ன வைச்சிருக்காங்கன்னு புரியல. நீங்க இத்தனை பயப்பட வேண்டியதில்லை.

‍- இமா க்றிஸ்

அது function இமா... அவங்க ஷார்ட்டாக fun என்று பதிவு செய்து உள்ளார்..

;-) அது அழகான ஆங்கில வார்த்தையாக என் சிந்தனையில் இறங்கியது. தூங்கி எழுந்த பின் தான், இப்படி இருக்கும் என்று மனம் சொல்லிற்று. நன்றி இந்து. நல்ல வேளை தமிழில் எழுதவில்லை. சாப்பிடுற 'பன்' என்று நினைச்சிருப்பேன்.

:0)))))) கேள்வி கேட்டவங்களுக்குப் புரியணும் என்று என் தமிழை விட்டு இந்தியத் தமிழில் எழுதுகிறேன். இனி என் சொந்த ஷார்ட் ஹான்ட் முறையில் பதில் எழுதப்போகிறேன். யாராவது சந்தேகம் கேட்டால் டிக்‌ஷனரி இந்து வில் எக்ஸ்ப்ளெய்ன். ;0))))

‍- இமா க்றிஸ்

உங்கள் தமிழையும் நாங்கள் கற்று கொள்வோம்.. உங்கள் அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் காத்து இருக்கிறோம்...

Tholigalea nan arusuvaikku pudhidu yeannakku help pannunga
Yeannakku mrg agi 2 years aguthu mrg ana first month Mattum tha na regular periods anean but adikum adutha monthla irunthu yeannakku irregular periods. Oru 6 months Ku munadi doctor ah pathom avanga chiro cyst and folic acid kuduthanga atha saptu vanthapo correct ah 28 days periods anean antha time la ovulation test panna nala oru 5 days tablet kuduthanga day 2nd la irunthu sapten..athu kapuram konjam sulnalayala hospital pogala vitutean athukapuram 35 daysla periods anean so oru 2 months ah rompa low ah periods vanthathu light ah oru pad kuda mulusa irukathu rompa rompa low. Athukapuram Jan 1 anean apavum light ah tha irunthathu but marupadium Jan 27 anean Norma bleeding but Feb 14 varikum continue achu..then stop agiruchu next period March 17 vanthathu normal period 9 days continue achu apuram stop achu ipo inam periods agala but konja neram ninalea pinadi idupu valikkuthu sometimes. Apapo vaiur valiguthu stomach normal ah irukaramari therilla. 36day today morning urine test panea negative nu vanthathu ..but dettol test net la pathean layer ah and oilya irukku..morning urine yellow colour la irukku then other times light green pls yeannakku help panunga and yeannakku thyroid irukku ipo report normal ah correct ah irukku na eltroxin 100 and folic acid dailium empty stomach la sapuduren...pls help me

Tholigalea nan arusuvaikku pudhidu yeannakku help pannunga
Yeannakku mrg agi 2 years aguthu mrg ana first month Mattum tha na regular periods anean but adikum adutha monthla irunthu yeannakku irregular periods. Oru 6 months Ku munadi doctor ah pathom avanga chiro cyst and folic acid kuduthanga atha saptu vanthapo correct ah 28 days periods anean antha time la ovulation test panna nala oru 5 days tablet kuduthanga day 2nd la irunthu sapten..athu kapuram konjam sulnalayala hospital pogala vitutean athukapuram 35 daysla periods anean so oru 2 months ah rompa low ah periods vanthathu light ah oru pad kuda mulusa irukathu rompa rompa low. Athukapuram Jan 1 anean apavum light ah tha irunthathu but marupadium Jan 27 anean Norma bleeding but Feb 14 varikum continue achu..then stop agiruchu next period March 17 vanthathu normal period 9 days continue achu apuram stop achu ipo inam periods agala but konja neram ninalea pinadi idupu valikkuthu sometimes. Apapo vaiur valiguthu stomach normal ah irukaramari therilla. 36day today morning urine test panea negative nu vanthathu ..but dettol test net la pathean layer ah and oilya irukku..morning urine yellow colour la irukku then other times light green pls yeannakku help panunga and yeannakku thyroid irukku ipo report normal ah correct ah irukku na eltroxin 100 and folic acid dailium empty stomach la sapuduren...pls help me yen kelviku yarum pathil that's villai

உங்கள் கேள்விக்கு இங்கே பதில் யாரிடமும் இல்லை.. நானும் தெரிந்தவர்கள் உதவட்டும் என்று இரண்டு நாட்கள் பார்த்தேத்தேன்..
யாரிடமும் தெளிவான உங்களுக்கு தேவையான விளக்கம் இல்லை..
நிச்சயம் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்..
ஒருமுறை பரிசோதனை செய்து விட்டு வாருங்கள்..
நல்லதே நடக்கும்..

Tank u mam..

நான் இப்போது 14 weeks கர்ப்பமாக உள்ளேன். எனக்கு Urine Infection ஆகி உள்ளது. எதனால், என்று தெரியவில்லை... நான் இன்று தான் மருத்துவரிடம் காண்பிக்க உள்ளேன். இதனால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு வருமா? நான் எப்படி சரி செய்வது.

பிறகு நான் சொல்வது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.

என் வீட்டில் மாமனார் இருக்கிறார்.. அவருக்கு அவர் மெதுவாக நடப்பார்.. ஆனால் அவர் புகை மட்டும் எப்போதும் பிடித்துக்கொண்டே இருப்பார்.. அவர் urine dressலயே போகிறார்.. குளிக்கவும் செய்ய மாட்டராங்க... ஒரு டிரஸ்சும் சேஞ் பண்ணறதில்ல.. எனக்கு அவர் கிட்ட எப்படி சொல்லறதுனு தெரியல.. என் கணவரிடன் சொன்னேன். அவர் சொன்னாலும் 1 நாள் செய்கிறார் அவ்வளவுதான். என் அத்தையும் அதை கண்டுக்க மாட்டாறாங்க... எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இதனால் கூட இன்பெக்‌ஷன் வர வாய்ப்புள்ளதா ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்கள்..
அவரை தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...

மேலும் சில பதிவுகள்