கர்ப்பம் சந்தேகம்,

நான் இரண்டு வருடங்களாக இரண்டாவது குழந்தைக்கு எதிர்பார்த்துட்டு இருக்கேன், 14த் ஏப்ரல் எனக்கு பீரியட்ஸ் வந்தது, 28த் ஏப்ரல் பதினைந்தாம் நாள் ஓவுலேஷன் நடைபெற்றது, எனக்கு இப்பொழுது என்ன சந்தேகம் னா பதினைந்தாம் நாள் எனக்கு ஓவுலேஷன் ஆச்சுல, இப்போ எனக்கு 23 ம் நாள், ஒரு வேல நான் இந்த தடவை கன்சீவ் ஆகிருந்தால் இன்று கர்ப்ப சோதனையில் பாசிட்டிக் காட்டுமா இல்ல நெகட்டிவ் காட்டுமா பிரண்ட்ஸ்,...

கடந்த நான்கு நாட்களாக மார்பக வலி மற்றும் மார்பக காம்பில் அதிக வலி இருந்தது, நான் கர்மபாக தான் இருக்கிறேனோ என்கிற ஆர்வகோளாரில் இன்று டெஸ்ட் பண்ணி பார்த்தேன், நெகட்டிவ் என வந்தது, ரொம்ப கஷ்டமா போச்சு, 15ம் நாள் ஓவுலேஷன் நடைபெற்றால் எத்தனை நாட்களில் கர்ப்பத்தை உறுதி கொள்ளலாம் நண்பர்களே, ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

nanri mam ,enakagaka konjam vendikonga mam enaku innum heart beat kedaikala.
one week wait panna solitanga.kavalaya eruku

Dont worry sister ellam nalapadiya nadakum

தோழிகளே நான் போன மாதம் சொல்லியது போல் பீரியட்ஸ் சிம்டம்ஸ் இருந்து நான் கன்சீவ் ஆகாமல் பீரியட்ஸ் ஆகி விட்டேன், இந்த மாதமும் பிரகன்னஸி க்கு ட்ரை பண்ணோம் இன்றோடு எனக்கு 26 வது நாள், எனக்கு என்ன சந்தேகம் னா போன மாதம் 15 ம் நாள் ஓவுலேஷன் நடைபெற்றது, நாங்கள் தவறாமல் intercourse ல் இருத்தோம், 19 ம் நாளிலிருந்து மார்பு வலி ஆரம்பித்து விட்டது, அதை வைத்தே நான் கன்சீவ் இல்லை பீரியட்ஸ் ஆக போறேன் என 19 ம் நாளே தெரிந்து கொண்டேன், அது போல பீரியட்ஸ் ஆகி விட்டேன், போன மாதம் போல இந்த மாதமும் 19 ம் நாள் மார்பு வலி ஆரம்பித்து விட்டது, இப்பொழுதும் கூட இருக்கு, போன மாதம் பீரியட்ஸ் வந்ததும் மார்பக வலி காணாமல் போய் விட்டது, இந்த மாதமும் இதே போல் தான் பீரியட்ஸ் வந்ததும் மார்பக வலி காணாமல் போய்விடும் என்று எனக்கு புரிந்து விட்டது....

என்னுடைய சந்தேகம் இது தான், எதனால் எனக்கு 19 ம் நாளே மார்பக வலி ஆரம்பித்து விடுகிறது, எனக்கு இது தான் புரியவில்லை, தொடர்ந்து மூன்று மாதங்கள் தான் இப்படி இருக்கிறது, அதற்கு முன் உள்ள மாதங்களில் எல்லாம் எனக்கு மார்பு வலி ஏற்பட்டதில்லை, இது நார்மல் தானா, இது போல் உங்களில் யாருக்கேனும் ஏற்பட்டிருக்கிறதா என சொல்லுங்க தோழிகளே ப்ளீஸ்....

ஏன் பா எனக்கு மட்டும் பதில் தர மாட்டேன்கிறீர்கள்

எனக்கு பதில் தாருங்கள் இம்மா மேம், நான் ஹாசப்பிடலக்கு செக்கப் க்கு எதுவும் போகனுமா, எனக்கு என்ன ப்ராப்ளம்னு தெரியல, சொல்லுங்க மேம்

இது பிரச்சினையான விடயமாகத் தெரியவில்லை. இருந்தாலும், நீங்கள் யோசிப்பதால் - மருத்துவரிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்கலாம் அல்லவா?

‍- இமா க்றிஸ்

ஓகே மேம், நான் மருத்துவரிடம் கலந்தோசிக்கிறேன்

மேலும் சில பதிவுகள்