Karbam patriya sandhegam

Hi, enakku marriage agi 3 masam agudhu. Enaku epayume pulse rate 72 or 75 irukum. Ipa oru varama 90 or adhukum mela varudhu. Na ipa consive ah irukena nu enaku sandhegam. Enaku periods date vara inum 5 days mela iruju adhuku munadi epdi conform panradhu.

பொறுமையாக காத்திருக்க வேண்டும்.. இவ்வளவு சீக்கிரம் கன்பார்ம் பன்ன முடியாது..

Hi enaku 2013 la baby form achu but appo d&c panra situation IPO again 3 years ah try panren but pregnant aga mudila Ela treatment um eduthuten no positive results enaku period normal last month malai vembu manjal urundai 3days period Apo empty stomach la sapten but IPO again period ayitu intha timeum malai vembu manjal urundai kuduthaga ithu evlo cycle sapdalam and plz reply yen enaku form aga madiku thank u

jeni

வணக்கம் தோழிகளே நான்49 நாள் கர்ப்பமாக உள்ளேன்.தகுந்த ஆலோசனை வழங்குங்கள் தோழி.போன மாதம் உறுதியாகி பின்பு 42 நாட்களில் பீரியட் ஆகி விட்டது பயமாக இருக்கிறது உதவுங்கள் தோழிகளே.

Yen frds yarum reply pannala, today 51 days enaku entha symptoms illa ...

இத்தனை விரைவில் தெரியக் கூடிய ஒரே சிம்ப்டம்... மாதவிலக்கு வராதிருப்பது. அது உங்களுக்கு இருக்கிறது. பிரெக்னன்சி கிட் வாங்கி சோதித்திருப்பீர்கள். யோசிக்க வேண்டாம் உமா. இனி வரப்போகின்றவையெல்லாம் அறிகுறிகள் அல்ல; கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும். எதுவும் இல்லாவிட்டாலும் கூட கவலை கொள்ள வேண்டியது இல்லை. அதுவும் சாதாரணம் தான்.

‍- இமா க்றிஸ்

சிலருக்கு 45நாட்களில் குமட்டல் வரும், வாந்தி வரும்..
எனக்கெல்லாம் மூன்று மாதங்கள் முடிவடைந்தால் தான் லேசாக குமட்டல் இருக்கும்.. வாந்தி எடுத்தது இல்லை.. வாந்தியை முடிந்த வரை கட்டுப்படுத்திவிடுவேன்..
வாந்தி எடுக்க எனக்கு மிகவும் பயம்.. இதுவரை விவரம் தெரிந்து நான் வாந்தி எடுத்தது இல்லை..
கர்ப்ப காலத்தில் கட்டுப்படுத்தியதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது..
என் அக்காவிற்கு ஒருமுறை வாந்தி எடுக்காதே, வாந்தி எடுப்பதனால் எவ்வளவு சிரமப்படுகிறாய் என்றேன்.. வாந்தி வரும்போது கட்டுப்படுத்த வேண்டும் என்றேன்..
அதெல்லாம் முடியாத காரியம் என்றார்..
சிம்ப்டம்ஸ் இல்லை என்றால் மகிழ்ச்சியாக சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்..

நன்றி அம்மா. நான் பயத்துடன் இருந்தேன் தற்போது தெளிவு கிடைத்துள்ளது.

அக்கா இது முதல் கர்ப்பம் அதனால் தான் பயம். பசிக்குது ஆனால் 2வாய் சாப்டதும் வயிறு நிரைந்த மாதிரி இருக்கு இதுக்கு என்ன செய்வது அக்கா.

வெயிலின் காரணமாக அதிகம் சாப்பிட முடியாமல் இருக்கலாம்.. ஜூஸ் அதிகம் குடியுங்கள்.. பழங்கள் சாப்பிடுங்கள்..
தண்ணீர் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்..
தினமும் மாலை ஏதேனும் பயறு ஒன்று அவித்து சாப்பிடலாம்.

மேலும் சில பதிவுகள்