இரு கேள்விக்கு ஒரு பதில்

இரு கேள்விக்கு ஒரு பதில்...விளையாடலாம் வாங்க...!!!

வாங்க மக்களே இன்னொரு புது விளையாட்டு விளையாடுவோம். இது மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, தமிழில் நல்ல சொல்வளத்தை பெருக்கிக் கொள்ள உதவும் விளையாட்டு.

இரண்டு கேள்விகள் கேட்க்கப்படும்....ஆனால் அதற்கு ஒரே சொல், இரண்டு கேள்விகளுக்கும் பதிலாய் தர வேண்டும். அதே சமயம் அந்த விடைக்கு இரு வேறு பொருள் இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு,

1) தண்ணீரின் அளவுக்கு கூறலாம்.

2) கண்ணீரின் அளவுக்கு காரணம்..

இதற்கு பதில்= கன அடி (அளவை, பலமான அடி என இருவேறு பொருள்)

தண்ணீரை கன அடியில் அளப்பார்கள்...

கன அடி அடித்தால் கண்ணீர் பெருகும்....

மற்றொன்று,

1.இது கிடைத்தால் வசிக்கலாம்

2. இது கிடைத்தால் விசும்பலாம்

இதற்கு பதில்= அறை (தங்கும் அறை, கன்னத்தில் அறை என இருவேறு பொருள்)

புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தொடரலாமா?

நான் முதல் கேள்வியைத் தொடங்கி வைக்கிறேன்...

1. விளைச்சலுக்கு உதவும்

2. சோதனை வரும்போது தேவைப்படும்

பதில் சொல்லுங்க....

விரகு சரியா?

தவறு ,ஏனெனில் விறகு என்பது இரண்டுக்கும் ஒரே பொருள் தருகிறதே அதனால் ,சரியா ?
முயற்சி செய்யுங்கள் .ஒரே பதில் ஆனால் இரு பொருள் வர வேண்டும் ...
காமினிசெல்வி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

கரி ஒரு மிருகம்(யானை என நினைக்கிறேன்)
கரி அடுப்புக்கரி சரியா பாரதி.+

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பாரதி என்னுடைய பதிலைப் பார்க்கவில்லையா.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சரி தான் வாழ்த்துக்கள் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வெளியே போகிறேன், உள்ளே வரலாமா, இன்றையப் கறி‌ என்ன, இந்த அனைத்து. கெள்விகளுக்கும் ஒரே பதில் என்ன?

Pls find me the answer

மேலும் சில பதிவுகள்