ஆலு பெய்கன் (உருளை-கத்திரிக்காய்) சப்ஜி

தேதி: March 9, 2011

பரிமாறும் அளவு: 4-6 serving

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

உருளை - 1/4 கிலோ
கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியதாக நறுக்கியது
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
தனியா பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி - தலா 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி - 1/2 கப் நறுக்கியது


 

உருளை, கத்திரி மற்றும் தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
அதனுடன் இஞ்சி-பூண்டு, சீரகதூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.
பிறகு, உருளை, கத்திரி சேர்த்து 13-15 நிமிடம் வரை கிளறவும்.
தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
மல்லி தூவி, பூரி, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மிளகாய் தூள் வேண்டாமா?

Dany