கைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்

ஒரு காலத்தில் கைவினை பொருட்கள் செய்ய ஆரம்பித்த போது பொருட்கள் கிடைக்காது, ஒன்னு கிடைத்தால் இன்னொன்னு கிடைப்பதற்க்குள் செய்ய நினைத்ததே மறந்துவிடும். இப்படி பொருள் தேடி அலைய முடியாமல் தான் பேப்பர் கிராப்ட் தவிர வேறு செய்யவே மாட்டேன் என முடிவெடித்து அதுக்குள்ளேயே வண்டி சுத்தியது.ஊருக்கு போயிருந்த போது உனக்கு தகுந்த கடை இருக்கு போய் பார்க்கலாம் வா என எனது பெரியம்மா ஒரு கடைக்கு அழைத்து சென்றார். அந்த கடை முழுக்க கிராப்ட் செய்ய தேவையான பொருட்கள், அட எதை எடுக்க எதை விட என தெரியாமல் குழம்பிவிட்டேன்.அங்கு பொருட்கள் கொஞ்சம் வாங்கியதும் தான் நிறைய புது விதமாக கற்க தொடங்கினேன், அதே போல பொருள் இங்கு கிடைத்தால் தானே நம்ம வண்டி ஓடும் என இங்கும் பல கடைகள் தேடி கண்டும் பிடித்துவிட்டேன். நான் பொருள் வாங்கிய இடம் இரண்டே ஊர் தான். அறுசுவை தோழிகள் உலகம் முழுவதும் இருப்பதால் நீங்க இருக்கும் இடத்தில் கிராப்ட் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் எதும் பழக நினைப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

என்னிடம் மரத்தால் ஆன கைவினைப் பொருட்கள் உள்ளன. அதை வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது?

மேலும் சில பதிவுகள்