ரம்யமான ரமணிசந்திரன்

எனக்கும் புத்தகங்களுக்கும் எட்டாத தூரம் தான். ஒரு முழு நாவலை படிக்கும் பொறுமை என்றும் இருந்ததில்லை. படிக்கும் வேகம் குறைவு என்பதும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் சமீப காலமாக அறுசுவை அங்கத்தினர் ஒரு சிலரால் ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகங்களை பாதியில் பொறுமை இழந்து வீசும் நான் ஒரு முழு நாவலை உணவின்றி முடித்த போது வியந்தும் போனேன். கீழே வைக்க முடியாமல் படிக்க இதில் என்ன இருந்தது என்று எனக்குள்ளும் யோசனை தான். இந்த எண்ணம் அடுத்த அடுத்த புத்தகங்களை இன்னும் ஆழ்ந்து வாசிக்க வைத்தது எனலாம்... அல்லது அனுபவித்து மூழ்க வைத்தது எனலாம்.

அட்சர சுத்தமாய் ஒருவரது மனோ நிலையை விளக்குவதிலும், அவரது குணத்தை விவரிப்பதிலும் ரமணிசந்திரனுக்கு ஈடு இணை இல்லையோ என்றது மனம். ஈர்த்தவை எவை??? இவர் கதைகளில் வரும் அறிவான துணிவான பண்பான பெண்களா? கம்பீரமான அன்பான புத்திசாலி ஆண்களா? இருவருமே தானோ?! அன்பானவர்கள் பிரிவதை ஏற்காத பெண்களின் மனம் இவர் கதைகளில் வரும் முடிவு சுபமாய் இருந்ததில் மயங்கியதோ? எது எப்படியோ சில விஷயங்களில் அவர் எழுத்தை பாராட்டாமல் இருப்பது இயலாது போலும்.

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து.

ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்க்கும் அன்பும், பரிவும், புரிந்து கொள்ளுதலுமாக இவர் கதைகளில் வரும் கதாநாயகர்கள் அடுத்த ஈர்ப்பு எனலாம். பெண்களின் மனம் புரிவது கடினம் என்பதை பொய்யாக்கும் வகையில் இவர் கதை நாயகர்கள் பெண்களின் முகத்திலும், பார்வையிலுமே எல்லாம் படித்து பதில் பேசும் விதம்... சபாஷ்.

கதையில் வரும் கதாபாத்திரங்களின் அழகான தமிழ் பெயர்கள், அதன் விளக்கம், அதை அன்புக்குறியவர்கள் சுருக்கி அழைக்கும் விதம்... அடடா!!! அழகு. பதிலுக்கு பதில் வரும் வார்த்தை ஜாலமும், ஒருவரை ஒருவர் கேளியாக பேசும் பேச்சையும் ரசிக்காமல் இருக்க இயலுமோ? தேவையான இடங்களில் எல்லாம் அழகான பழமொழிகள், உதாரணக்கதைகள், காவியங்கள், இதிகாசங்கள் என எல்லாமும் எல்லா வயதினருக்கும் பிடித்தமானதாகவே அமைவது சாத்தியமா? சாத்தியப்பட்டிருக்கிறதே.

ஒரு தொழிலை பற்றி எழுதும் போது அதை பற்றிய முழு விவரம், அதில் என்ன முன்னேற்றம், எப்படி செய்ய வேண்டும், என்ன கஷ்டங்கள், என்ன செய்தால் முன்னுக்கு வரலாம், கணக்கு வழக்கு, பணி என எல்லாமும் எழுத முடியுமானால் அவர் எழுத்தில் மட்டுமே கெட்டிக்காரர் அல்ல, நிச்சயம் விசய ஞானம் நிரம்ப உள்ளவரே. அன்றைய கணக்கு புத்தகம் முதல் இன்றைய ஃபேஸ்புக் வரை அத்தனையை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் ஒருவரால் எழுத இயலுமா? எழுதுகிறாரே!!!

ராகினி சுருங்கி ராகியாகி, ராகி கேழ்வரகான போது... அட!!! இந்த வயதில் இப்படி இளைஞர்களை போல சிந்திக்கவும் இயலுமா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை தான். அனுபவம் எழுத்தில் தெரிந்தாலும் எண்ணங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் போது எல்லா வயதினரையும் ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஒருவரது தோற்றத்தில் கம்பீரம் காணலாம், ஆனால் எழுத்தில் காண இயலுமா? இயலும்!!! ரமணிசந்திரனின் எழுத்தில் முதிர்ச்சியும், புதுமையான சிந்தனைகளும், ஆழ்ந்த கருத்துக்களும், அன்பான அறிவுரையும், கண்டிப்பும் அளவோடு கலந்து கம்பீரமாய் தோன்றுவதை காண முடியும். கிட்டத்தட்ட 160 நாவல்கள், ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதில் இடம் பிடிக்கும் போது வியப்பாகவே இருக்கின்றது.

தோற்றத்தில் முதிர்ச்சியும், மனதில் இளமையுமாய் ரமணிசந்திரன்... ரசனைக்குரிய ரம்யமான ரமணிசந்திரன்!!

5
Average: 4.4 (17 votes)

Comments

ரொம்ப நாளாச்சு உங்க படிவுகள் கண்டு... மகிழ்ச்சியா இருக்கு பார்க்க. :) வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வீட்டில் இருந்தாலும் ஏதாவது செய்தே ஆகனும்'ல ;) ஒரு ப்ரபஷ்னல் ரைட்டர் ரேஞ்சுக்கு ஆகலாமான்னு யோசிக்குறேன் ;-)// - இப்பவே அப்படி தானே இருக்கீங்க ;) கலக்குங்க. உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்.

//இப்படி எல்லாம் கூட எஸ்கேப் ஆக வழி இருக்கா...// - எஸ்கேப்பா? என்ன கட்டாயம் இருக்கு ஓட?? ஒன்னுமே இல்லையே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hai friends, send me any one ramanichandhiran novel.

வாழ்க வளமுடன்

Hai friends, send me any one ramanichandhiran novel. raamu0504@gmail.com

வாழ்க வளமுடன்